ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங்கக்கூடிய 5 அசத்தல் தொழில்கள்! உங்கள் ஊரிலும் தொடங்கலாம்!

இன்றெல்லாம் தொழில் முனைவோர்கள் அதிகரித்து வருகின்றனர். அலுவலகங்களுக்கு சென்று 9 மணி முதல் 5 மணி வரை வேலை செய்வதில் விருப்பமில்லாதவர்கள் லோன் பெற்றாவது ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். நீங்களும் அப்படிப்பட்டவராக இருந்தால் உங்களுக்கு தான் இந்தப் பதிவு. இந்தப் பதிவில் ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங்கக்கூடிய தொழில்கள் குறித்த தான் பார்க்கவுள்ளோம்.

குறைந்த முதலீட்டில் நிலையான வருமானம் ஈட்ட விரும்பும் தொழில்முனைவோருக்கு இந்த தொழில்கள் கண்டிப்பாக நல்ல தொடர்ச்சியாக இருக்கும்.

ரூ. 1 லட்சம் முதலீட்டில் தொடங்கக்கூடிய 5 அசத்தல் தொழில்கள்! உங்கள் ஊரிலும் தொடங்கலாம்!

டியூஷன் வகுப்புகள்: உங்கள் அறிவையே முதலீடாக மாற்றி அதிலிருந்து வருமானம் பெறலாம். இதற்கான முதலீடு என்னவோ மிகக் குறைவுதான். விளம்பரச் செலவுகள், அடிப்படையாக டியூஷன் வகுப்பு எடுப்பதற்கு தேவைப்படும் பிற பொருட்களை வாங்குவதற்கான செலவுகள் ஆகியவற்றைச் செய்ய வேண்டும். உதாரணமாக பெஞ்ச், போர்ட், உங்களிடம் இடம் இல்லை என்றால் வாடகைக்கு இடத்தை தேட வேண்டும்.

இதுபோன்ற செலவுகள் அனைத்தையும் ரூ.1 லட்சம் முதலீட்டுக்குள் கொண்டு வரலாம். ஆனால் இந்தத் தொழில் மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.20,000 முதல் 50,000 ஆயிரம் வரை உங்களிடம் சேரும் மாணவர்களுக்கு ஏற்ப இருக்கும். நீங்கள் திறமையாகவும், கற்பிப்பதில் வல்லவராகவும் இருந்தால் மாணவர்களின் எண்ணிக்கை நாளடைவில் அதிகரிக்கும். கல்விக்கான தேவை என்ன தான் AI வகுப்புகள் வந்தாலும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். ஆரம்பத்தில் உள்ளூரில் கவனம் செலுத்தி டியூஷன் வகுப்புகள் எடுக்கலாம். பின்னர் அதை ஆன்லைனிலும் விரிவுபடுத்தலாம்.

கன்டென்ட் ரைட்டிங்: இதற்கான முதலீடு ஆரம்பத்தில் ரூ.10,000 வரையில் இருக்கலாம். உங்களிடம் லேப்டாப் இருந்தால் இவ்வளவு தான் முதலீடு. அதுவே லேப்டாப் இல்லை என்றால் அதை வாங்குவதற்கு செலவாகலாம். அதன் பிறகு இணைய இணைப்பை வழங்கியாக வேண்டும். கன்டென்ட் ரைட்டிங் செய்வதற்கு முன்பு அதற்கான பயிற்சியைப் பெற வேண்டும்.

உங்களுக்கு ஓரளவு இன்ட்ரஸ்ட் இருந்தால், நீங்கள் ஆன்லைனிலும் கற்றுக் கொள்ளலாம். வீட்டில் இருந்தே ரெஸ்யூம் மற்றும் நியூஸ் போன்றவற்றை எழுதி அதன் மூலமும் வருமானம் பெற முடியும். முதலில் சொன்ன ரூ. 10,000 முதலீடு என்பது டொமைன் செலவுகள் மற்றும் இதர செலவுகளுக்கானது. நீங்கள் பிரத்தியேகமாக சாப்ட்வேர்களை பயன்படுத்தினால்.. அதற்கு நீங்கள் தனியாக பணம் செலுத்த வேண்டும்.

கிராஃபிக் டிசைனிங்: இதற்கு ஒரு நல்ல சாப்ட்வேர் தேவை. ஆரம்பத்தில் பயிற்சியும் பெற வேண்டும். அதற்காக நீங்கள் முதலீடு செய்ய வேண்டி வரலாம். ஆனால் இந்த கலையை கற்றுக் கொண்டால் மாத மாதம் ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரை உங்கள் வடிவமைப்பு, திறன், அனுபவம், வாடிக்கையாளர் எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து பெற முடியும். எந்த ஒரு வணிகமானாலும் அதற்கு நல்ல லோகோ, விளம்பரம் செய்வதற்கான போஸ்டர்கள் போன்றவற்றுக்கு கிராஃபிக் டிசைனர்கள் தேவை. எந்த ஒரு தொழில் தொடங்கினாலும் கிராபிக் டிசைனர் இல்லாமல் அவற்றை விளம்பரப்படுத்துவது சிரமம். எனவே சொந்தமாக டிசைன் ஸ்டூடியோ தொடங்கி, வாடிக்கையாளர் அதிகரித்தால் இதன் மூலம் வருமானம் பெறலாம்.

ட்ராப்ஷிப்பிங்: இது ஒரு ஆன்லைன் ஸ்டோர் அவ்வளவுதான். உண்மையிலேயே எந்த ஒரு சரக்கும் இன்றி.. ஆன்லைனில் ஒரு கடையைத் திறந்து அதன் மூலம் சந்தைப்படுத்தி வியாபாரம் செய்வது. ஆரம்பத்தில் ஒரு வெப்சைட் தொடங்குவதற்கு டொமைன் செலவுகள் போன்றவற்றுக்கு செலவு செய்ய வேண்டும். பின்னர் உங்கள் ஸ்டோரை சந்தைப்படுத்த வேண்டும்.

உதாரணமாக ஒரு இ-காமர்ஸ் ஸ்டோர் தொடங்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். வாடிக்கையாளரை பொறுத்து இதற்கு வருமானம் கிடைக்கும். நீங்கள் விற்பனை செய்யும் பொருட்களின் விலை உங்கள் மார்க்கெட்டிங் உத்திகளை பொறுத்தது. இது முழுக்க முழுக்க ஆன்லைன் வணிகம். நீங்கள் ஒரு பொருட்களை வேறு ஒருவரிடம் இருந்து மாற்றி மக்களிடம் விற்பனை செய்கிறீர்கள். இதனால் செயல்பாட்டு செலவுகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நீங்கள் திறக்கும் கடைக்கு சரியான பொருட்களை தேர்ந்தெடுப்பது முக்கியம். இந்த ட்ராப்ஷிப்பிங் தொழிலின் முக்கிய தேவை என்னவென்றால் அதை ஒழுங்காக மார்க்கெட்டிங் செய்ய வேண்டும்.

லாண்டரி சேவை: சலவை செய்வதற்கான இயந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் கடை வாடகைக்கான செலவுகள் ஆகியவற்றுக்கு முதலில் முதலீடு தேவை. ஆனால் கடையின் அமைப்பிடம் மற்றும் வாடிக்கையாளர் எண்ணிக்கையைப் பொறுத்து இதற்கும் வருமானம் பெற முடியும். நகரங்களில் துணிகளை துவைக்க நேரமில்லாதவர்கள் அதிகமாக உள்ளனர்.

எனவே தரமான சேவை மற்றும் சரியான விலை நிர்ணயம் செய்தால் நிலையான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்க முடியும். இதோடு லாண்டரி செய்த துணிகளை வீட்டிற்கு சென்று டெலிவரி செய்வது உங்கள் தொழிலை சிறப்பாக செயல்பட வைக்க உதவும்.

மேலே குறிப்பிட்டுள்ள தொழில்கள் அனைத்தும் ரூ.1 லட்சத்திற்கும் கீழ் தொடங்கக்கூடிய தொழில்கள் ஆகும். ஆனால் எந்த ஒரு தொழிலையும் தொடங்குவதற்கு முன்பு நீங்கள் வசிக்கும் இடத்தின் தேவை என்ன? அங்கு ஏற்கனவே இது போன்ற கடைகள் இருக்கிறதா? என்பதை ஆராய வேண்டும். அதோடு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பெயரில் தொடங்குங்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+