ஹோம் லோன் வாங்க இருக்கிறீர்களா? ரூ.75 லட்ச லோனுக்கு சிறந்த வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்!

தங்களுக்கென்று சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பலரின் கனவு. அதற்கு ஏதுவாக பல்வேறு வங்கிகளும் போட்டி வட்டி விகிதங்களில் லோன்களை வழங்குகின்றன. தங்களின் வருமானம், தொழில் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு மக்களும் தங்களுக்கு ஏற்ற வங்கிகளில் கடன் பெறுகின்றனர். வீட்டுக் கடன்களுக்கு விண்ணப்பிக்கும் முன் குறைந்த வட்டி விகிதங்களில் லோன்களை வழங்கும் வங்கிகளை கண்டுபிடிக்க வேண்டும். அப்போதுதான் வட்டி சுமை இல்லாமல் கடனை திருப்பிச் செலுத்த முடியும்.

வீட்டுக்கடனை வழங்கும்போது பொதுவாக கடன் வழங்குனர்கள் சிபில் ஸ்கோரையும் மதிப்பிட்டு தான் கடன் வழங்குகின்றனர். சிபில் ஸ்கோர் என்பது 3 எழுத்து என்ன ஆகும். இந்த ஒரே ஒரு எண்ணை வைத்து வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா? அல்லது வேண்டாமா? என்பதை பரிசீலித்துவிடும். எனவே வங்கிகளில் கடன் பெற முடிவு செய்துவிட்டால்.. அதற்கு முன்பே உங்களுடைய சிபில் ஸ்கோர் சரியாக இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் குறைந்த வட்டியில் கடன்களை பெறலாம்.

 ஹோம் லோன் வாங்க இருக்கிறீர்களா? ரூ.75 லட்ச லோனுக்கு சிறந்த வட்டி வழங்கும் முன்னணி வங்கிகள்!

Image: Ai created


மேலும் வங்கி கடன் பெற வேண்டும் என்று முடிவெடுத்து விட்டால் பல்வேறு வங்கிகள் வழங்கும் வட்டி விகிதங்களை ஒப்பிட்டுப் பார்த்து அவற்றில் வட்டி குறைவாக இருக்கும் வழங்குனரை தேர்வு செய்ய வேண்டும். இந்தப் பதிவில் 2024-ஆம் ஆண்டில் 75 லட்சம் ரூபாயிலான வீட்டு கடன்களுக்கு பல்வேறு வங்கிகளும் வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து பார்ப்போம்.

வீட்டுக் கடன் வட்டி விகிதங்களின் பட்டியல் 2024:

பொதுத்துறை வங்கிகள்:

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா: 8.50% முதல் 9.85% வரை
பேங்க் ஆஃப் பரோடா: 8.40% முதல் 10.90% வரை
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா: 8.30% முதல் 10.90% வரை
பஞ்சாப் நேஷனல் பேங்க்: 8.40% முதல் 10.15% வரை
பேங்க் ஆஃப் இந்தியா: 8.35% முதல் 1.10% வரை
கனரா பேங்க்: 8.40% முதல் 11.15% வரை
யூகோ பேங்க்: 8.45% முதல் 10.30% வரை
மகாராஷ்டிரா பேங்க்: 8.35% முதல் 11.15% வரை
பஞ்சாப் & சிந்து பேங்க்: 8.50% முதல் 10.00% வரை
இந்தியன் ஓவர்சீஸ் பேங்க்: 8.40% முதல் 10.60% வரை
இந்தியன் பேங்க்: 8.40% முதல் 10.30% வரை

தனியார் துறை வங்கிகள்:

கோடக் மஹிந்திரா பேங்க்: 8.75% முதல்
ஐசிஐசிஐ பேங்க்: 8.75% முதல்
ஆக்சிஸ் பேங்க்: 8.75% முதல் 9.65% வரை
HSBC பேங்க்: 8.50% முதல்
சவுத் இந்தியன் பேங்க்: 8.70% முதல் 11.70% வரை
கரூர் வைஸ்யா பேங்க்: 9.00% முதல் 11.05% வரை
கர்நாடக பேங்க்: 8.75% முதல் 10.87% வரை
பெடரல் பேங்க்: 8.80% முதல்
தன்லக்ஷ்மி பேங்க்: 9.35% முதல் 10.50% வரை
தமிழ்நாடு மெர்கன்டைல் ​​பேங்க்: 8.60% முதல் 9.95% வரை
பந்தன் பேங்க்: 9.16% முதல் 13.33% வரை
RBL பேங்க்: 9.00% முதல்
CSB பேங்க்: 10.49% முதல் 12.34% வரை
HDFC பேங்க் லிமிடெட்: 8.75% முதல்
சிட்டி யூனியன் பேங்க்: 8.75% முதல் 10.50% வரை

சிபில் ஸ்கோர் பொதுவாக 300 முதல் 900 வரை இருக்கும். இருப்பினும் பெரும்பாலான கடன் வழங்குனர்கள் சிபில் ஸ்கோர் 650-க்கு மேல் இருந்தாலே கடன் செயல்முறைக்கு ஒப்புதல் வழங்குகின்றனர். ஆனால் சிபில் ஸ்கோர் 800-க்கு மேல் இருப்பது உங்களுக்கு சிறந்த வட்டி விகிதத்தில் கடன் பெற உதவிகரமானதாக இருக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+