மூத்த குடிமக்களுக்கென பல்வேறு சேமிப்பு திட்டங்கள் வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கின்றன. 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 60 வயதுக்கு கீழ் உள்ளவர்களை விட கூடுதலான வட்டி மற்றும் பல்வேறு சிறப்பு பலன்களை வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் வழங்குகின்றன.
மூத்த குடிமக்களுக்கு உள்ள நான்கு வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரைவாக பார்க்கலாம்.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்: மத்திய அரசு மூத்த குடிமக்களுக்காக வழங்க கூடிய ஒரு பிரத்யேக சேமிப்பு திட்டம் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்.இது மத்திய அரசின் திட்டம் என்பதால் பணம் பாதுகாப்பாக இருக்கும். அஞ்சல் அலுவலகம் அல்லது வங்கிகளில் எளிதாக இதற்கான கணக்கை தொடங்கலாம்.
ஆண்டுக்கு 8.2% வட்டி கிடைக்கும் என்பதால் லாபகரமானது. ஒவ்வொரு காலாண்டிற்கும்( ஏப்ரல், ஜூலை, அக்டோபர், ஜனவரி ) வட்டி தொகையானது கணக்கில் வந்துவிடும். 5 ஆண்டுகள் முதிர்வுகாலம் கொண்ட இந்த திட்டத்தில் அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை முதலீடு செய்யலாம்.
நிலையான வைப்புத்தொகை: மூத்த குடிமக்களுக்கான மற்றொரு புகழ்பெற்ற சேமிப்பு திட்டம் ஃபிக்சட் டெபாசிட் எனப்படும் நிலையான வைப்புத்தொகை . மூத்த குடிமக்கள் பெரும்பாலும் ரிஸ்க் எடுக்க விரும்ப மாட்டார்கள் எனவே நிலையான வைப்பு தொகை திட்டங்கள் அவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் நிலையான ஒரு வட்டியையும் கொடுக்கின்றன.
பெரும்பாலான வங்கிகள் மற்றும் தபால் அலுவலகங்களில் அதிகபட்ச வட்டி விகிதத்துடன் மூத்த குடிமக்களுக்கு பல்வேறு நிலையான வைப்புத்தொகை திட்டங்கள் வழங்கப்படுகின்றன.இதில் பணம் முதலீடு பாதுகாப்பாக இருக்கும் என்பதால் பெரும்பாலான மூத்த குடிமக்களின் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கிறது.
மீயூச்சுவல் ஃபண்டுகள்: பாதுகாப்பான முதலீடு என வரும்போது மூத்த குடிமக்களின் மற்றொரு தேர்வாக இருப்பது பரஸ்பர நிதி திட்டங்கள் எனப்படும் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள். மூத்த குடிமக்கள் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யக்கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் நம்பிக்கையோடு தங்களது பணத்தை முதலீடு செய்யலாம்.
இதில் அவர்களுக்கு அவர்களுக்கு குறிப்பிட்ட அளவிலான வருமானமும் கிடைக்கும். இருப்பினும் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பு அதில் உள்ள அபாயங்கள் குறித்து முறையாக ஆராய்ந்து கொள்வது அவசியம்.
அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமானம் திட்டம்: மூத்த குடிமக்கள் தங்கள் தங்களது ஓய்வூதிய பணம் உள்ளிட்டவற்றை அஞ்சல் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் அவர்களுக்கு 7.4 சதவிகிதம் வட்டி கிடைக்கிறது. மாதந்தோறும் இந்த வட்டியானது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். அதிகபட்சமான 9 லட்சம் ரூபாய் வரை ஒருவர் இதில் முதலீடு செய்யலாம்.
மூத்த குடிமக்கள் முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்யும் போது அபாயம் இல்லாத மற்றும் பாதுகாப்பான திட்டங்கள் குறிப்பாக அரசு வழங்கும் திட்டங்களை தேர்வு செய்வது சரியான முடிவாக இருக்கும்.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications