இன்றளவு பங்குச்சந்தையில் முதலீடு என்பது பெரும்பாலான மக்கள் மத்தியில் இயல்பான ஒன்றாக மாறியுள்ளது, இப்படியிருக்கும் வேளையில் தற்போது பலர் வெளிநாட்டு சந்தையில் முதலீடு செய்து அதிகம் லாபம் பார்க்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளனர். எப்படி வல்லரசு நாடுகளில் முதலீட்டு செய்ய கதவுகள் திறக்கப்பட்டு உள்ளதோ, அதேபோல் வளரும் நாடுகளில் முதலீடு செய்யவும் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளது.
இதன் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களுக்கு மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. உலக சந்தைகளிலும் சரி, இந்திய சந்தையிலும் சரி அதிகப்படியான ஏற்ற இறக்கங்கள் இருந்தது. புவிசார் அரசியல் நிச்சயமின்மை மற்றும் வட்டி விகித மாற்றம் இருந்தபோதும், சில முக்கிய திட்டங்கள் முதலீட்டாளர்களின் முதலீட்டை பாதுகாத்து, அசாதாரண லாபத்தை அளித்துள்ளது.

இதில் HSBC பிரேசில் ஃபண்ட் உயர்ந்து நிற்கிறது என்று தான் சொல்ல வேண்டும், 2025ஆம் ஆண்டில் இந்த மியூச்சவல் பண்ட் சிறப்பான செயல்திறனை காட்டி முதலீட்டு சந்தையில் தனிப்பட்ட கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு காரணம் ஒரு வருட முதலீட்டக்கு 55.24 சதவீதம் லாபத்தை கொடுத்தது தான். இதன் மூலம் இந்த ஆண்டின் மிகச் சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது.
வருமானத்தின் அளவு
இந்த திட்டம் ஒப்பன் மியூச்சுவல் ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ் வகையைச் சேர்ந்தது, இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகை அனைத்தும் HSBC க்ளோபல் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்ட்ஸ் - பிரேசில் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்கிறது. உலக சந்தைகளில் ஏற்பட்ட பல்வேறு பாதிப்புக்கள் மத்தியில், சர்வதேச பன்முக முதலீடுகள் முதலீட்டாளர்களுக்கு பெரும் நன்மையை அளித்தது.
லாப அளவு
ஜனவரி 1, 2025 அன்று ரூ.1 லட்சம் தொகையை லம்சம்ப் ஆக முதலீடு செய்திருந்தால், டிசம்பர் 31ஆம் தேதி இது ரூ.1.55 லட்சமாக வளர்ந்திருக்கும், இது 55.24 சதவீத சிஏஜிஆர் வருமானத்தை அளித்துள்ளது. மேலும் மாதாந்திர எஸ்ஐபி முறையில் ரூ.10,000 முதலீடு செய்திருந்தால், தற்போது இதன் மொத்த மதிப்பு ரூ.1.48 லட்சத்துடன் 46.45 சதவீத வருமானத்தை கொடுத்துள்ளது.
இத்திட்டத்தின் மொத்த சொத்து மதிப்பு (AUM) 2025 இல் 645 சதவீதம் உயர்ந்தது, டிசம்பர் 2024 இல் ரூ.40.68 கோடியாக இருந்தது தற்போது ரூ.303.13 கோடியாக அதிகரித்தது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications