2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் ஐந்தாவது கட்டமாக மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்களில் திங்கள்கிழமை தேர்தல் நடைபெற்றது. ஒவ்வொரு முறையும் தேர்தல் குறித்து ஏதாவது ஒரு போட்டோ இணையத்தில் வைரலாகும்.
அப்படி ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டுள்ள ஒரு போட்டோ தான் இந்த 2024 பொது தேர்தலின் சூப்பர் டூப்பர் போட்டோவாக உள்ளது.

இந்தியாவில் இதுவரை நடந்த ஐந்து கட்ட தேர்தல்களில், பல்வேறு மாநிலங்களில் இருந்து முன்னணி பிரமுகர்கள் வாக்களித்த நிலையில் அவர்களின் போட்டோ பெரிய அளவில் டிரெண்டாகி வருகிறது. ஆனால் தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வழக்கத்திற்கு மாறான படத்தை "2024 தேர்தலின் சிறந்த புகைப்படமாக" அறிவித்துள்ளார்.
ஜனநாயகம் ஒவ்வொருவரின் உரிமை, இதேபோல் வாக்களிப்பது என்பது ஜனநாயகத்தின் முக்கியமான பணியாகும். இதேவேளையில் அரசும் ஒவ்வொரு தனிநபருக்கும் வாக்களிக்கும் உரிமையை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும், அப்படி ஷொம்பென் மலைவாழ் மக்கள் வாழ்க்கையில் முதல் முறையாக வாக்களித்து வரலாற்று நிகழ்வை உருவாக்கினர்.
நாட்டின் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடி குழுக்களில் (PVTGs) ஒன்றான Shompen பழங்குடியினர் முதல் முறையாக வாக்களித்த போட்டோவை தான் ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து ஆனந்த் மஹிந்திரா தனது டிவிட்டர் பதிவில், "இது, என்னைப் பொறுத்தவரை, 2024 தேர்தல்களின் சிறந்த புகைப்படம். கிரேட் நிக்கோபாரில் உள்ள ஷொம்பென் பழங்குடியினர் ஏழு பேரில் ஒருவர், முதன்முறையாக வாக்களித்தார்." என்று திங்களன்று தெரிவித்தார்.
முதன்முறையாக, கிரேட் நிக்கோபார் தீவின் அடர்ந்த மழைக்காடுகளில் வசிக்கும் ஷொம்பென் பழங்குடியினர் ஏழு பேர், ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற அந்தமான் மற்றும் நிக்கோபார் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தனர்.
மேலும் மே 20 ஆம் தேதி மும்பையில் நடைப்பெற்ற வாக்கெடுப்பில் முகேஷ் அம்பானி தனது மொத்த குடும்பத்தையும் அழைத்து வந்து வாக்களித்தார், இதேபோல் ரத்தன் டாடா என பல தொழிலதிபர்கள், பிரபலங்கள் வாக்களித்தனர்.


Click it and Unblock the Notifications