சிறியதோ பெரியதோ ஒவ்வொருவரும் தங்களது பாதுகாப்பான எதிர்காலத்திற்குப் பயன்படும் வகையில் ஒரு முதலீட்டைச் செய்திட வேண்டும். அப்படியானால் எதிர் காலப் பாதுகாப்பு முதலீடு என வரும் போது கட்டாயம் ரிஸ்க் இல்லா முதலீடாக இருப்பது அவசியம்.
இரவு பகலாகக் கஷ்டப்பட்டு உழைத்துச் சம்பாதித்த பணத்தை நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்தும் போது கட்டாயம் அதிகப் பலன் அளிக்க வேண்டும், அப்படிப்பட்ட ஒரு திட்டத்தைத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
முதலீடு
v100 சதவீத பாதுகாப்பு, ரிஸ்க் இல்லாத முதலீடு என்றால் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வாய்ப்புகள் மட்டுமே உள்ளது, இதிலும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய போஸ்ட் ஆபீஸ் முதலீட்டுத் திட்டம் குறித்துத் தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
இந்திய தபால் நிலையம்
இந்திய தபால் நிலையத்தில் அளிக்கப்படும் தேசிய சேமிப்புப் பத்திரத்தில் வைப்பு நிதியை விடவும் அதிகமான வட்டி வருமானம் கிடைக்கும் என்பதாலும் 100 சதவீத பாதுகாப்பு, ரிஸ்க் இல்லாத முதலீடாகவும் இருப்பதாலும் அனைத்து தரப்பினரும் நம்பி முதலீடு செய்தும் திட்டமாக உள்ளது.
தேசிய சேமிப்புப் பத்திரம்
5 வருட முதிர்வு காலம் கொண்ட இந்திய தபால் நிலையத்தில் அளிக்கப்படும் தேசிய சேமிப்புப் பத்திரத்திற்கு வருடம் 6.8 சதவீத வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது. இதேபோல் இந்தத் திட்டம் பொருத்த வரையில் நீங்கள் முதலீடு செய்தும் தொகையை 5 வருட முதிர்வு காலத்திற்குப் பின்பு தான் அளிக்கப்படும்.
10 லட்சம் ரூபாய்
இந்த நிலையில் இந்திய தபால் நிலையத்தில் அளிக்கப்படும் தேசிய சேமிப்புப் பத்திரத்தில் நீங்கள் 10 லட்சம் ரூபாய் அளவிலான தொகையை முதலீடு செய்தால் 5 வருடத்தில் 14 லட்சம் ரூபாயை பெற முடியும். இதேபோல் 5 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் 6,94,746 ரூபாய் கிடைக்கும்.
5 ஆண்டு முதிர்வு காலம்
18 வயதை எட்டியவர்கள் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், இத்திட்டத்தில் குறைந்தது 1000 ரூபாய் வரையிலான தொகையை முதல் முதலீடு செய்ய முடியும். இத்திட்டத்தில் இருக்கும் ஓரே பிரச்சனை முதலீடு செய்யப்பட்ட தொகையைப் பெற 5 ஆண்டுக்குப் பின்பு தான் எடுக்க முடியும்.


Click it and Unblock the Notifications