கிராமப்புறங்களில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் காரணத்தினால் அங்குள்ள பலர் மெட்ரோ நகரங்களை நோக்கி படையெடுக்கின்றனர். நகரங்களுக்குச் சென்ற பிறகுதான் இதற்கு கிராமமே பரவாயில்லை என்று தோன்றும் அளவிற்கு செலவுகள் பாடாய்படுத்துகிறது. வீட்டு வாடகை, உணவு, எலக்ட்ரிசிட்டி பில் என அனைத்தையும் கணக்கிட்டு பார்த்தால் சொந்த ஊருக்கே திரும்பி விடலாம் என்றே தோன்றும். நீங்களும் அப்படிப்பட்ட ஒருவர் எனில் உங்களுக்காக தான் இந்தப் பதிவு. இதில் ரூ.1 லட்சம் முதலீட்டில் கிராமப்புறங்களில் தொடங்குவதற்கு ஏற்ற பிசினஸ் ஐடியாக்களைப் பார்க்க போகிறோம்.
பால்பண்ணை: காலை எழுந்தவுடன் டீ, காபி குடிக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. இதையே தொழில் வாய்ப்பாக மாற்றலாம். பால் பண்ணை தொடங்க முதலில் 2 முதல் 4 பசுக்கள் அல்லது எருமை மாடுகள் போதும். கலப்படமில்லாத பாலை வழங்கத் தொடங்கிவிட்டால் உங்களுடைய கிராமத்திலேயே உங்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிகரித்து விடுவார்கள். உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க அருகில் உள்ள பால் சொசைட்டிகளிலும் நீங்கள் விற்பனை செய்யலாம். இப்படியே பிசினஸை வளர்த்தால் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களான தயிர், நெய், பன்னீர் போன்ற பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்யலாம்.
ஆடு வளர்ப்பு: குறைந்தது 10 முதல் 15 ஆடுகள் இருந்தால் போதும் ஒரு பண்ணையை ஆரம்பிக்கலாம். ஆட்டுக்குட்டிகள், ஆட்டின் பால் மற்றும் இறைச்சி ஆகியவற்றை விற்பதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடியும். இதற்கான தேவை தொடர்ந்து இருந்து வருகிறது. நான்-வெஜ் பிரியர்களுக்கு மட்டன் மிகவும் பிடித்த உணவு. ஆட்டுக்குட்டியின் பாலில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. இதற்கும் சந்தையில் தேவை இருக்கிறது. ஆட்டுக்குட்டிகளுக்கு நல்ல பராமரிப்பை வழங்கினால், இதிலிருந்து கணிசமான வருமானத்தை பெற முடியும்.

கோழி பண்ணை: மார்க்கெட்டில் கோழி முட்டை மற்றும் கோழி இறைச்சி ஆகிய இரண்டிற்குமே தேவை அதிகமாக இருக்கிறது. முதலில் 200 முதல் 500 கோழிகளுடன் கோழிப்பண்ணையை தொடங்கலாம். அதற்கு உங்களிடம் ஒரு இடம் இருந்தால் போதுமானது. இந்த தொழில் விரைவாக வருமானத்தை வழங்க கூடிய தொழில். கிராமங்கள் மற்றும் நகரங்கள் போன்றவற்றில் நாட்டு கோழி முட்டைகளுக்கு டிமாண்ட் அதிகமாக இருக்கிறது.
மாவு மில் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் மாவு மில்லைத் தேடி நகரங்களுக்குச் செல்கின்றனர். இதனால் ரூ.40,000 முதல் ரூ.60,000 வரை முதலீடு செய்து மெஷின் வாங்கி போட்டால் தினசரி அடிப்படையில் தோராயமாக ரூ.500 முதல் ரூ.1,500 வரை வருமானம் பெற முடியும். ஏனெனில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கோதுமை மாவு, அரிசி மாவு என அனைத்தையும் மக்கள் மில்லில் கொடுத்து தான் அரைக்கின்றனர். இதற்காக வெளியூர் செல்லும் வாடிக்கையாளர்களை உங்கள் வாடிக்கையாளர்களாக மாற்றினாலே சிறப்பாக சம்பாதிக்க முடியும்.
பேக்கிங் தொழில்: இந்த தொழிலை செய்வதற்கு நீங்கள் எதையும் உற்பத்தி செய்ய தேவையில்லை. மாறாக தரமாக விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி ரீபேக் செய்து கடைகளில் வழங்கலாம். உதாரணமாக மிக்சர், பட்டாணி, சிப்ஸ் போன்றவற்றை ஹோல்சேல் கடைகளில் வாங்கி ரீபேக் செய்து கடைகளுக்கு கொடுக்கலாம். அப்படி இல்லை என்றாலும் இது போன்ற பொருட்களை நீங்களே வீட்டில் தயார் செய்து விற்பனை செய்யலாம்.
இது வெறும் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை தொழில் தொடங்க சொல்லவில்லை. உங்களுக்கு பிசினஸ் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் உங்களுடைய நிதி நலனை யோசித்து சந்தையை ஆராய்ந்து, சுய விருப்பத்தின் பேரில் தொடங்குங்கள்!
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications