டெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கும் சந்தையானது தற்போது பெருமளவில் வளர்ந்து வருகிறது. அந்த வகையில் உயர்ந்த ரக மாடல் கார்களை கூட பலர் செகண்ட் ஹண்டில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
அந்த வகையில் இந்தியாவில் 10 லட்சம் ரூபாய்க்கு கீழ் கிடைக்கும் சிறந்த பயன்படுத்தப்பட்ட கார்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.. இதேபோல் காரின் தரம் பொருத்து விலை மாறுப்படும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், அதேபோல் கீழே உள்ள பட்டியலில் இருக்கும் செகண்ட்ஹேண்ட் கார்கள் பெஸ்ட் சாய்ஸ் ஆக இருக்கும்.

ஹூண்டாய் கிரெடா (HYUNDAI CRETA): இந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் காம்பேக்டான எஸ்யூவி ரக கார்களில் இதுவும் ஒன்று. பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆகிய இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. 6 மேனுவல் ஸ்பீடு மற்றும் 6 ஆட்டோமேட்டிக் ஸ்பீடு தேர்வுகளுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களைக் கொண்டது. இதில் பயன்படுத்தப்பட்ட கார்களில் 1.6லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் கார்கள் 8 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கின்றன.
ஹோண்டா சிட்டி 4ஆவது ஜெனரேஷன் (HONDA CITY 4TH GENERATION): இந்தியாவில் பிரபலமான கார்களில் ஒன்று. 4ஆவது ஜெனரேஷன் கார், எளிதாக பயன்படுத்த உகந்தது என பெயர் பெற்றது. 5 மேனுவல் ஸ்பீடு மற்றும் 6 ஆட்டோமேட்டிக் ஸ்பீடு தேர்வுகளுடன் கிடைக்கிறது. இந்த வகை கார்கள் 1.5லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் என்ஜின் கொண்டவை 6 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கின்றன.
மாருதி சுசுகி எஸ்-கிராஸ் (MARUTI SUZUKI S-CROSS): இந்திய சந்தையில் விற்கப்பட்ட மாருதி நிறுவன கார்களில் இது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் விலை அதிகமாக இருந்ததால் இந்த கார் விற்பனை சற்றே மந்தமாக இருந்தது. ஆனால் பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் இதற்கு வரவேற்பு கிடைக்கிறது. இதன் 1.6லிட்டர் டீசல் வகை கார் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது சந்தையில் 10 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கிறது.
டொயோடா ஃபார்ச்சூனர் (TOYOTA FORTUNER): அதிக மைலேஜ் தரக்கூடிய கார் என்பதால் , பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் இதற்கு மவுசு அதிகம். அதுமட்டுமின்றி டொயோடா ஃபார்ச்சூனர் என்றாலே தனி மரியாதை கிடைப்பதால் பெரும்பாலானவர்கள் இதனை விரும்பி வாங்குகின்றனர். 3.0 லிட்டர் டீசல் என்ஜினுடன் 5 ஆட்டோமேட்டிக் மற்றும் மேனுவல் ஸ்பீடு தேர்வுகளுடன் கிடைக்கிறது. முறையாக பராமரித்தால் பல ஆண்டுகளுக்கு உழைக்கும் என பெயர் பெற்ற கார் இது. சந்தையில் ரூ.10 லட்சத்திற்கே இந்த கார் கிடைப்பதால், உடனடியாக விற்பனையாகிவிடும் என்கின்றனர் இந்த துறையில் இருப்பவர்கள்.
ஃபோர்டு எகோஸ்போர்ட் (FORD ECOSPORT): கடந்த 2013ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் எஸ்யூவி ரக கார்களில் சிறந்த பெர்ஃமான்ஸ் காராக பார்க்கப்படுகிறது. ஃபோர்டு ரக கார்களில் இது தான் பெஸ்ட் செல்லிங் கார்.
இது 1.5 லிட்டர் மூன்று சிலிண்டர் டிராகன் பெட்ரோல் என்ஜினுடன் இந்த கார் , பயன்படுத்தப்பட்ட கார்கள் சந்தையில் கிடைக்கிறது. எளிதாக சர்வீஸ் செய்யலாம் என வாடிக்கையாளர்களுக்கு பல வசதிகள் கிடைக்கின்றன. இந்த கார்கள், அதன் வகைகள், மைலேஜ் ஆகியவற்றை பொறுத்து 3 லட்சம் முதல் 10 லட்சம் ரூபாய் வரை கிடைக்கிறது.
Story Written by: devika


Click it and Unblock the Notifications