இந்தியாவில் தற்போது எஸ்யூவி ரக கார்களுக்கான மவுஸ் அதிகரித்துள்ளது என கூறலாம் . ஏனெனில் குறிப்பிட்ட பட்ஜெட் விலைக்கே பல்வேறு நிறுவனங்களும் எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்கின்றன. அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் 8 லட்சம் ரூபாய்க்கு கீழ் கிடைக்கக்கூடிய எஸ்யூவி ரக கார்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
Tata Punch: இந்தியாவில் தற்போது அதிகம் விற்பனை செய்யப்படும் எஸ்யூவி கார் இது. இந்த காரின் தொடக்கவிலௌ ரூ.5.99 லட்சம் (ex-showroom) ஆகும். தரமான காராகவும் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அதிகம் விற்பனையாகும் காராகவும் இது இருக்கிறது. 7 அங்குல டச் ஸ்கிரீன், புஷ் பட்டன் ஸ்டார்ட் என பல நவீன அம்சங்கள் கொண்டது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 18.97கிலோமீட்டர் மைலேஜ் தருகிறது.

Hyundai Exter: இந்த காரின் தொடக்க விலை ரூ. 6.13 லட்சம் (ex-showroom) ஆகும். 3 வகையான பவர் டிரெய்ன்களில் இது கிடைக்கிறது. 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் 5 வகை வேக மாறுபாடு மற்றும் ஆட்டோமெட்டிக் மாடல்களில் கிடைக்கிறது. சிஎன்ஜி வகை மாறுபாட்டிலும் கிடைக்கிறது.
Renault Kiger and Nissan Magnite : சுமார் 7 லட்சம் ரூபாயில் இந்த கார்கள் கிடைக்கின்றன. இரண்டு கார்களுமே 5-speed manual gearbox மற்றும் 5-Speed Easy-R AMT transmission வகைகளில் கிடைக்கின்றன. 4 ஏர்பேக்குகள் மற்றும் பல்வேறு நவீன பாதுகாப்பு அம்சங்களை இவை கொண்டுள்ளன.
Mahindra XUV 3XO : அண்மையில் மகிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்த இந்த மாடல் காரின் தொடக்க விலை ரூ. 7.49 லட்சம் (ex-showroom). XUV 300இன் மேம்படுத்தப்பட்ட இந்த மாடல் சௌகரியம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களில் பல நவீனங்களை கொண்டுள்ளது. 6-speed manual transmission என்ற அம்சம் கொண்டிருப்பதால் வாகன பிரியர்களால் பெரிதும் விரும்பப்படுகிறது.
Hyundai Venue: 3 என்ஜின் மாறுபாடுகளுடன் இந்த கார் கிடைக்கிறது. பெட்ரோல் வகையில் இரண்டு மாடல்களும் , டீசல் வகையில் 1 மாடலும் உள்ளன. மூன்று என்ஜின் வகைகளிலுமே seven-speed DCT மற்றும் six-speed iMT உள்ளது. இதன் ஆரம்ப விலை 7.94 லட்சம் ரூபாய் ஆகும்.
Maruti FRONX: சுமார் 7.51 லட்சத்திற்கு கிடைக்கும் இந்த Head Up Display, 360 View Camera, wireless smartphone charger, 9 அங்குல டிஸ்பிளே, என பல வசதிகளை கொண்டுள்ளது. கிட்டதட்ட 10 வண்ணங்களில் இந்த கார்கள் கிடைக்கின்றன.
Kia Sonet: இதன் ஆரம்ப விலை சரியாக 7.9 லட்சம் ரூபாய் ஆகும். கியா நிறுவனத்தின் ப்ரீமியம் மாடல் கார் இது. LED headlamps, dual-tone cabin , touchscreen , remote start , sound mood lighting என பல வசதிகளை கொண்டுள்ள இந்த கார் சிறந்த பயண அனுபவத்தை தருகிறது.
Tata Nexon : இந்திய சந்தையில் Punchக்கு பிறகு அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார் இது. இதன் தொடக்க விலை ரூ.7.99 லட்சம் ஆகும்.1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.5-speed manual, 6-speed manual, 6-speed AMT, 7-speed DCT automatic என நவீன அம்சங்களுடன் டாடாவின் தரம் மற்றும் நம்பிக்கையும் கிடைக்கிறது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications