இன்றைக்கு எல்லா துறைகளிலும் பெண்கள் நுழைந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃப்ரான்காய்ஸ் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் என்ற பெண் முதன் முதலாக 100 பில்லியன் டாலர் நிறுவனத்துக்கு அதிபராகி உலகிலேயே மிகப் பெரிய பணக்காரப் பெண்ணாக உருவெடுத்துள்ளார்.
பிரான்ஸின் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் பேஷன் மற்றும் காஸ்மெடிக்ஸ் தொழிலில் அவர் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
புளூம்பெர்க் பில்லியனர்கள் பட்டியலில் அவரது சொத்து மதிப்பு 100.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

மேயர்ஸின் தாத்தாவால் தொடங்கப்பட்ட பியூட்டி புராடக்ட்ஸ் நிறுவனத்தின் மூலமும் லோரியல் எஸ்ஏ நிறுவனத்தின் பங்குகளின் மூலமும் மேயர்ஸ் இவ்வளவு சம்பாதித்துள்ளார். இருப்பினும் அவரது பிரஞ்சு நண்பர் பெர்ணார்டு அர்னால்டின் சொத்தைவிட குறைவாகவே மேயர்ஸிடம் உள்ளது.
ஆடம்பரப் பொருட்கள் தயாரிப்பாளரான பெர்ணார்டு அர்னால்டு சொத்து மதிப்பு 179 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். தற்போது உலகின் இரண்டாவது பெரிய பணக்கார பெண்ணாக உள்ளார்.
இந்த நிலையிலும் பெட்டன்கோர்ட் மேயர்ஸின் சொத்து இந்தியப் பணக்காரர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, கௌதம் அதானியை விட அதிகமாக உள்ளது.
70வது வயதான பெட்டன்கோர்ட் மேயர்ஸ்தான் 241 பில்லியன் பவுண்டு மதிப்புள்ள குளோபல் ஃபர்மான லோரியல்லின் ஒரே பெரிய முதலீட்டாளர் ஆவார். உலகளவில் பணக்காரர்கள் பட்டியலில் 12ஆவது இடத்தில் மேயர்ஸ் உள்ளார். தனது நிறுவனத்தின் இயக்குநர்கள் போர்டின் துணைத் தலைவராக பதவி வகிக்கிறார்.
அவரது மகன்கள் ஜான் விக்டர், நிக்கோலஸ் மேயர்ஸ் ஆகியோர் சினிமா தயாரிப்பாளர்களாக உள்ளனர். குடும்பத்துக்குச் சொந்தமான ஹோல்டிங் கம்பெனியான டெத்தீஸின் தலைவராக உள்ளார். அவரது கணவர் ஜான் பியரி மேயர்ஸ் டெத்தீஸின் சிஇஓவாக இருக்கிறார்.
டெத்தீஸ் நிறுவனத்தை பெட்டன்கோர்ட் மேயர்ஸின் தாத்தாவான யூஜீன் ஸ்கல்லர் 1909 ஆம் ஆண்டில் தொடங்கினார். ஒரு கெமிஸ்ட்டான ஸ்கல்லர் அவரே ஹேர் கலர் தயாரித்து விற்றுவந்தார். அவரது நிறுவனத்தை குடும்பத்தினர் அல்லாத நிர்வாகிகள்தான் நீண்டகாலமாக நடத்தி வந்தனர்.
உலகின் மற்ற பணக்காரர்களைப் போல ஆடம்பரமான சமூக வாழ்க்கையை தொடர்வதை மேயர்ஸ் எப்போதுமே தவிர்த்து வந்தார்.
அத்துடன் இரண்டு புத்தகங்கள் மற்றும் 5 தொகுப்பு பைபிள் படிப்பு, கிரேக்கக் கடவுள்களின் புராண வரலாறு புத்தகங்களை மேயர்ஸ் எழுதியுள்ளார்.
தினமும் நீண்ட நேரம் பியோனோ இசைக்கருவியை வாசிப்பதில் பெட்டன்கோர்ட் மேயர்ஸ் மிகவும் பேர் போனவர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications