கொரோனா தொற்று காலத்தில் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாக இருந்த ஆன்லைன் ரியல் எஸ்டேட் சேவை தளமான Better.com, கொரோனாவுக்கு பின்பு மோசமாக பாதிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் ரியல் எஸ்டேட் துறையில் இருந்து வெளியேறி தற்போது பின்டெக் சேவை தளமாக மாறி வருகிறது.
இந்த மோசமான பயணத்தில் ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா என பல நூறு ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில் தற்போது ஒட்டுமொத்தமாக ரியல் எஸ்டேட் பிரிவு ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளார் பெட்டர்.காம் நிறுவனத்தின் தலைவரான விஷால் கார்க்.

இதை விட கொடுமை என்னவென்றால் நிறுவனத்தின் நலனுக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரியல் எஸ்டேட் பிரிவு ஊழியர்கள் 50 சதவீத சம்பளத்தை குறைத்துக்கொண்டு நிறுவனத்தில் தங்களுடைய பணியை உறுதி செய்துக்கொண்டு பணியாற்றி வந்தனர்.
ஆயினும் தற்போது விஷால் கார்க் தலைமையிலான Better.com நிர்வாகம் ஒட்டுமொத்தமாக ரியல் எஸ்டேட் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. விஷால் கார்க் ரியல் எஸ்டேட் நிறுவனத்தை மூடுவார் என்பது ஏற்கனவே கணிக்கப்பட்ட விஷயமாக இருந்தாலும், தடாலடியாக மொத்த ஊழியர்களையும் பணிநீக்கம் செய்வது அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது.

மேலும் இந்த பணிநீக்கத்தையும் விஷால் கார்க் ஜூம் காலில் தான் செய்தார் என கூறப்படுகிறது. முதன் முதலில் Better.com சிஇஓ விஷால் கார்க் டிசம்பர் 2021 ல் சுமார் 900 ஊழியர்கள் அடங்கிய ஜூம் காலில் இந்த காலில் இருப்பவர்கள் அனைவரும் இன்று முதல் நிறுவனத்தில் பணிநீக்கம் செய்யப்பட உள்ளீர்கள் என தெரிவித்தார். இது அமெரிக்காவை தாண்டி இந்தியாவிலும் Better.com சிஇஓ விஷால் கார்க்-ஐ பிரபலப்படுத்தியது.
இந்த பணிநீக்கத்தை தொடர்ந்து Better.com சிஇஓ விஷால் கார்க் செலவுகளை குறைக்கும் விதமாக ஒட்டுமொத்த வாடிக்கையாளர் சேவை பிரிவை இந்தியாவுக்கு மாற்றினார். ஆனால் இந்த மாடலும் பெரிய அளவில் பலன் அளிக்காமல் தோல்வியில் முடிந்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications