முன்பெல்லாம் FedEx கொரியர் நிறுவனத்திலிருந்து பேசுவதாகக் கூறி மோசடி செய்த சைபர் குற்றவாளிகள்.. தற்போது இந்திய போஸ்ட் ஆபீஸிலிருந்து பேசுவதாகக் கூறி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதுவரை ஒரு சில வழக்குகள் மட்டுமே பதிவாகியுள்ள நிலையில்.. இனி வரும் காலங்களில் FedEx மோசடிகள் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். அதற்கு உதாரணமாய் தற்போது இன்னொரு மோசடி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேற்கு மாரெட்பள்ளியைச் சேர்ந்த 75 வயது ஓய்வுபெற்ற மத்திய அரசு ஊழியரிடம் ரூ.23.26 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் இந்திய போஸ்ட் ஆபீஸ் அதிகாரி போல் நடிக்கும் ஒருவரிடமிருந்து பாதிக்கப்பட்டவருக்கு அழைப்பு வந்துள்ளது. மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரிடம் மும்பையில் இருந்து துபாய்க்கு ஒரு பார்சலில் போலீஸ் சீருடைகள் அடையாள அட்டைகள் மற்றும் பிற சந்தேகத்திற்கிடமான பொருட்களை அனுப்பியதாக கூறியுள்ளார்.

மேலும் மோசடிக்காரரில் ஒருவர் தன்னை போலீஸ் அதிகாரியாக காட்டிக் கொண்டு விஷால் தாக்கூர் என்ற நபர் பாதிக்கப்பட்டவரிடம் பேசியுள்ளார். பாதிக்கப்பட்டவரின் ஆதார் விவரங்கள் பண மோசடிக்கு தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர் மோசடியிலிருந்து ரூ. 400 கோடி கமிஷன் பெறுவார் என்றும் தாக்கூர் கூறினார். இந்த அழுத்தத்தின் கீழ், மோசடிக்காரர்களின் சொல்லுக்கு இணங்க பாதிக்கப்பட்டவர் RBI-யுடன் தனது விவரங்களை சரிபார்க்க ஒரு கணக்கில் ரூ. 23.26 லட்சத்தை டெபாசிட் செய்துள்ளார். உச்ச நீதிமன்ற அனுமதி கட்டணமாக கூடுதலாக ரூ. 5 லட்சத்தையும் தொடர்ந்து அனுப்பியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்டவர் சந்தேகம் அடைந்து, உள்ளூர் போலீசில் புகார் செய்தார்.
விசாரணை: இந்த மோசடியில் பயன்படுத்தப்பட்ட கணக்குகளை மேற்கு வங்காளத்தில் கண்டுபிடித்த அதிகாரிகள், அவை மியூல் அக்கவுண்டாக இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். தெலுங்கானா சைபர் செக்யூரிட்டி பீரோ (TGCSB) இந்த வழக்கை மேலும் விசாரித்து வருகிறது.
மங்களூருவில், குற்றப்பிரிவு அதிகாரி போல் காட்டி மோசடி செய்பவரிடம் ஒருவர் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளார். வங்கி மேலாளர் பாதிக்கப்பட்டவரை எச்சரித்ததையடுத்து, மோசடியின் உண்மை நிலை வெளிச்சத்திற்கு வந்தது.
ஷெல் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட சைபர் மோசடி மற்றும் சீன மோசடியாளர்களுடன் தொடர்புடைய பணமோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் நான்கு நபர்களை அமலாக்க இயக்குனரகம் கைது செய்தது. இந்தத் திட்டங்களில் ரூ.28 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது போன்ற மோசடி சம்பவங்கள் நடக்காமல் இருக்க மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். அதையும் மீறி மக்கள் இன்னும் பல லட்சங்களை ஏமாந்து கொண்டிருப்பது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications