இந்தியாவில் பிறந்த ஒவ்வொருவரும் அவர்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். அப்படி கடமையை விட்டு வரி செலுத்தாத நபர்களை குறி வைத்து வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கும். நீங்கள் வரித் துறைக்குத் தெரியாமல் எந்தவித பரிவர்த்தனையும் செய்ய முடியாது. வங்கிகளில் ஒரு வருடத்தில் ரூ.10 லட்சம் ரூபாய்க்கு மேலான பணப் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.10 லட்ச ரூபாய்க்கு அதிக அளவில் செலவு செய்தாலோ வங்கிகள் வருமானவரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
வங்கியில் பணம் டெபாசிட் செய்வது, பணம் எடுப்பது போன்றவற்றையும் வரித்துறை கண்காணிக்கும். உங்கள் வங்கி கணக்கில் அதிக அளவு பணத்தை டெபாசிட் செய்யும் போது சில விதிகளை மனதில் கொள்ள வேண்டும். வருமான வரித்துறை விதிகளின்படி வங்கிகளில் பணம் டெபாசிட் செய்வதற்கு வரம்புகள் உள்ளது. அதைத் தாண்டி டெபாசிட் செய்தால் வரித்துறையினர் உங்களிடம் விசாரணை மேற்கொள்ளலாம். மேலும் இது தொடர்பாக தெரிந்து கொள்ள வருமானவரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும்.

10 லட்சத்துக்கும் மேல் பணம் டெபாசிட் செய்தல்: ஒரு நிதியாண்டில் ஒருவர் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான தொகையை டெபாசிட் செய்தால்.. வங்கிகள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும்.
பெரிய பரிவர்த்தனைகளை ITR தாக்கல் செய்யும்போது குறிப்பிடுங்கள்: ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான பணத்தை உங்கள் அக்கவுண்டில் டெபாசிட் செய்தால், உங்களின் பரிவர்த்தனை குறித்த விவரங்களை வங்கிகள் வரி துறையிடம் தெரிவித்து விடும். குறிப்பாக வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் இந்த விதியை பின்பற்றுவது கட்டாயமாகும்.
ரூ.1 கோடிக்கு மேல் பணம் எடுத்தால் டிடிஎஸ்: ஒரு நிதியாண்டில் எந்த வங்கி கணக்கில் இருந்தும் ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்தால் டிடிஎஸ் செலுத்த வேண்டும். பெரிய அளவிலான தொகையை வித்ட்ரா செய்பவர்கள் இந்த லிமிட்டை மனதில் வைத்திருக்க வேண்டும்.
ரூ.2 லட்சத்திற்கும் மேலான ரொக்கப் பரிவர்த்தனை: வங்கிகளில் ஒரே நேரத்தில் ரூ.2 லட்சத்திற்கும் மேல் ரொக்க பரிவர்த்தனை செய்தாலும் இந்த வருமானவரி அறிவிப்பு பொருந்தும். இந்த விதியை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம்.
அதேபோல வங்கியில் ரூ.50,000-த்திற்கும் மேல் பணத்தை டெபாசிட் செய்யும் போது அல்லது எடுக்கும் போது கண்டிப்பாக பான் கார்டை வழங்க வேண்டும். பான் கார்டு இல்லாமல் செய்யப்படும் பண பரிவர்த்தனைக்கும் வருமான வரி நோட்டிஸ் அனுப்பப்படும். வருமானவரித்துறையினரால் வழங்கப்படும் பான் கார்டு அனைத்து விதமான நிதி சார்ந்த விஷயங்களுக்கும் சான்றாக செயல்படுகிறது.
அதனால்தான் வங்கி கணக்கு திறக்கும்போது பான் கார்டு பெறப்படுகிறது. இந்த ஒரு கார்டை வைத்து வருமானவரித்துறை உங்களின் அனைத்து பரிவர்த்தனைகளையும் தெரிந்து கொண்டு விடும். தேவையில்லாத சிக்கலை தவிர்க்க சரியான தகவல்களை கொடுத்து ஐடிஆர் தாக்கல் செய்வது முக்கியம்.


Click it and Unblock the Notifications