ஏடிஎம் போக போறீங்களா.. இப்படி கூட நடக்கலாம்.. உஷாரா இருங்க.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஏடிஎம் கார்டுகளை மாற்றி பலரை ஏமாற்றி வரும் மோசடி சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.

இது போன்ற மோசடியில் ஈடுபட்ட சதர் பஜார் போலீசார் , 4 பேரை கைது செய்துள்ளனர்.

இவர்களின் மீது இந்திய தண்டனை சட்டம் ஐபிசி 420 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர்பாகவும் எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை Tokenize செய்வது எப்படி? உங்கள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை Tokenize செய்வது எப்படி?

 பல ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

பல ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்

இந்த மோசடி கும்பலிடம் இருந்து 25 ஏடிஎம் கார்டுகள் மற்றும் ஸ்வைப்பிங் மெஷின் மற்றும் 63,000 ரூபாய் ரொக்கம், இது தவிர 4 ஸ்மார்ட்போன்கள் என பலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்த விசாரணையில் இந்த மோசடி கும்பல் பலரையும் ஏமாற்றியது கண்டறியப்பட்டுள்ளது. இன்னும் இது போன்ற மோசடியாளர்கள் இருக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஆக ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்கள் கவனமுடன் இருப்பது அவசியம்.

 

சிசிடிவி இல்லாத ஏடிஎம்கள்

சிசிடிவி இல்லாத ஏடிஎம்கள்

குறிப்பாக இதுபோன்ற மோசடிகள் சிசிடிவி கேமாராக்கள் பழுந்தடைந்த ஏடிஎம்-களை குறி வைப்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த விசாரணையில் அருகில் உள்ள கடைகளில் இருந்த சிசிடிவிகளை பார்த்தபோதே பிரச்சனை தெரிய வந்துள்ளதாக போலீஸ் தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

யார் யார் மோசடி?

யார் யார் மோசடி?

இந்த மோசடி கும்பலிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் பெரும்பாலும் மூத்த குடி மக்கள், தனியாக வரும் பெண்கள், குழந்தைகள் ஏடிஎம் கார்டுகளை சரியாக பயன்படுத்த தெரியாதவர்களை குறி வைத்து உதவுவது போல் நடித்தும் மோசடி செய்வதும் தெரிய வந்துள்ளது.

இடம் பெயரும் மோசடியாளர்கள்

இடம் பெயரும் மோசடியாளர்கள்

இந்த மோசடி குழுவானது இந்தியா முழுவதும் தனது கைவரிசையை காட்டி வருவதாகவும், குறிப்பாக ஹரியானா டெல்லிக்கு இடையே இது போன்ற பல மோசடிகளை செய்துள்ளதாகவும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதில் கவனத்தில் கொள்ளதக்க விஷயம் என்னவெனில் ஒரு மாநிலத்தில் ஏமாற்றம் செய்து விட்டு, வேறு மாநிலத்திற்கு சென்று விடுவதாகவும். அங்கு மோசடி செய்து வேறு மாநிலத்திற்கு செல்வதுமாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

எச்சரிக்கை

எச்சரிக்கை

ஆக உங்களுக்கு ஒரு வேளை ஏடிஎம் கார்டுகளை சரியாக கையாளத் தெரியவில்லை என்றாலும் கூட, தெரிந்தவர்களாக இருப்பின் அவர்களிடம் உதவி கேட்கலாம். இல்லையெனில் முடிந்த மட்டும் குடும்பத்தினரையே உடன் கூட்டி செல்வது உத்தமம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: atm ஏடிஎம்
English summary

Beware of fraudsters! This can also happen when going to the ATM, be careful

Beware of fraudsters! This can also happen when going to the ATM, be careful
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X