டெல்லி: நாளுக்கு நாள் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. டிசைன் டிசைனா புதுவிதமான ஐடியாக்களை வைத்து மோசடியில் ஈடுபடுவதும் நடந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் டெல்லியை சேர்ந்த ஒருவருக்கு ஒரு சம்பவம் நடந்துள்ளது அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
டெல்லியை சேர்ந்த ஷ்ரேயான்ஷி சிங் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் ஒரு விளம்பர நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவருக்கு வயது 32. இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று, வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது, அவருக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அந்த அழைப்பில் மோசடி கும்பல், அமெரிக்காவில் இருந்து அழைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். அதில் ஷ்ரேயான்ஷி சிங்கிற்கு அமெரிக்காவில் இருந்து ஒரு பார்சல் வந்திருப்பதாகக் கூறியுள்ளனர்.

மேலும் அந்த பார்சல் கஷ்டம்ஸ் சோதனைகளுக்காக சுங்கத்துறையில் சிக்கியிருப்பதாகவும், அதை வெளியிடுவதற்கு சில ஆயிரம் ரூபாய்கள் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிங்கிற்கு அமெரிக்காவில் எந்த உறவினர்களும் இல்லை, மேலும் அவர் எந்த ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த இ-காமெர்ஸ் தளங்களிலும் ஆர்டர் செய்யவும் இல்லை என்பதால் இதனை மோசடி என்று உணர்ந்து, அழைப்பை துண்டித்து இருக்கிறார்.
சில காலமாக பரவி வந்த இந்த பார்சல் மோசடி, தற்போது டயர் II மற்றும் டயர் III நகரங்களுக்கும் பரவி உள்ளது என்று சைபர் கிரைம் வழக்கறிஞர் மற்றும் நிபுணர் பிரசாந்த் மாலி கூறியுள்ளார்.
இன்னும் சில மோசடி கும்பல், தாங்கள் கொரியர் கம்பெனி நிறுவனத்தில் இருந்து அழைப்பது இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் தங்களின் பெயரில் வந்துள்ளதாகக் கூறி, அவர்களை மிரட்டி, அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் சம்பவங்களும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
சமீபத்தில் பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரியும் 29 வயது பெண்ணுக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. மோசடி கும்பல், தாங்கள் Fedex கொரியர் நிறுவனத்தில் இருந்து அழைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளனர். கொரியர் மூலம் 140 கிராம் போதைப்பொருள் அனுப்பப்பட்டதாக அந்த பெண்ணிடம் மோசடி கும்பல் தெரிவித்துள்ளனர்.
அப்போது மத்திய புலனாய்வு துறை அதிகாரி எனக் கூறிக்கொண்டு மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த விஷயங்களைப் பற்றி யாருக்கும் சொல்ல வேண்டாம் என்றும் அந்த பெண்ணிடம் எச்சரித்துள்ளனர். அந்தப் பெண்ணிடம் skype டவுன்லோட் செய்யும்படி வலியுறுத்தியுள்ளனர். இதனால் அந்த பெண் தொடர்ந்து 36 மணி நேரம் அவர்களிடம் வீடியோ அழைப்பில் இருந்துள்ளார். போதைப்பொருள் சோதனை என்று சொல்லிக் கொண்டு அந்த பெண்ணின் ஆடைகளை கழற்றுமாறு வற்புறுத்தியுள்ளனர்.
அதன் பிறகு அந்த வீடியோவைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணிடமிருந்து ரூ. 15 லட்சம் பணம் அனுப்பும்படி மிரட்டி உள்ளனர். இதனால் அந்த பெண் அவர்கள் கூறிய தொகையை அனுப்பியும் உள்ளார். சிலர் தாங்கள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைத்திருப்பதாக கூறியும் மோசடியில் ஈடுபடுகின்றனர். எனவே, இத்தகைய மோசடி கும்பலிடம் இருந்து உஷாராக இருக்க வேண்டும்.
சிலர் தாங்கள் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து அழைத்திருப்பதாகக் கூறியும் மோசடியில் ஈடுபடுகின்றனர். இன்னும் சில மோசடி செய்பவர்கள் பார்சலை வெளியிடுவதற்கு, ஒரு நபரைத் தேர்ந்தெடுத்து அவர்களிடம் ஒரு சிறிய தொகையை செலுத்த சொல்கிறார்கள். அதற்கு ஒரு லிங்கை மெசேஜ் மூலம் அனுப்புகிறார்கள். அந்த லிங்கை கிளிக் செய்து பாதிக்கப்பட்டவர் பேமெண்ட் செய்யும் போது, அவர்களுடைய பேங்க் டீடைல்களைத் திருடி பெரிய தொகையை மோசடியாக பறிக்கும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. எனவே, இத்தகைய மோசடி கும்பலிடம் இருந்து உஷாராக இருக்க வேண்டும் காவல்துறையினர் எச்சரிக்கின்றனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications