சென்னை: வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக வட்டிகளை வசூலிக்கும் வங்கிகள் மீது ஆர்பிஐ கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
நீங்கள் வீட்டுக் கடன், பர்சனல் கடன் போன்ற கடன்களை வாங்கி இருந்தால் வங்கிகளின் இதுபோன்ற நடவடிக்கைகள், உங்களுக்கு கவலை அளிக்கலாம். ஆர்பிஐ, தற்போது கடன் தரும் வங்கிகளில் கடன் வழங்குதல் மற்றும் வட்டியை வசூலித்தல் ஆகியவை நியாயமாகவும் வெளிப்படையாகவும் இல்லை என்பதை மார்ச் 31ஆம் தேதி, 2024ஆம் ஆண்டு நடைபெற்ற ஆன்சைட் பரிசோதனையில் கண்டுபிடித்துள்ளது.

உங்களிடம் வங்கிகள் கட்டணத்தை ஏமாற்றி வசூலிக்கும் 4 வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி உஷாராக இருங்கள்.
1. ஆர்பிஐ வெளியிட்ட சுற்றறிக்கையின் படி சில வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு லோன்களை வழங்க ஒப்புதல் அளித்த நாளிலிருந்து அவர்களிடம் வட்டியை வசூலிக்கிறது என்றும், இன்னும் சில வங்கிகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து வாடிக்கையாளர்களிடம் வட்டியை வசூலிக்கிறது என்றும் தெரிவித்துள்ளது.
2. பல வங்கிகள் லோன்களை செக் மூலமாக வழங்குகின்றன. அந்த செக்கில் குறிப்பிடப்பட்ட நாளிலிருந்து வட்டி கணக்கிடப்படுகிறது. இதனால் வாடிக்கையாளர்களின் கைகளுக்கு செக் கிடைப்பதற்கு முன்பே பணத்தை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
3. அடுத்ததாக ஒரு மாதத்தின் 15 ஆம் தேதிக்குப் பிறகு உள்ள தேதிகளில் வாடிக்கையாளர்களின் கையில் லோன் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். ஆனால் இது போன்ற நேரங்களிலும் வங்கிகள் அந்த முழு மாதத்திற்கான வட்டியையும் கணக்கிடுகின்றனர். இதனால் வாடிக்கையாளர்கள் கையில் கிடைக்காத லோனுக்கு 10 முதல் 15 நாட்கள் சேர்த்து வட்டியை செலுத்த வேண்டியுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
4. ஓரிரு தவணைகளை சில வங்கிகள் லோன் வழங்குவதற்கு முன்பே வசூலிக்கின்றன. அதேபோன்று பாதி தொகையை செலுத்தி முடித்த பின்பும் முழு தொகைக்கான வட்டியை கணக்கிடுகின்றன என்றும் ஆர்பிஐ கண்டுபிடித்துள்ளது.
பல்வேறு வங்கிகளுக்கு நியாயமான நடைமுறை குறித்த வழிகாட்டுதல்களும், வட்டி வசூலிப்பதில் இருக்க வேண்டிய நேர்மை பற்றியும் ஆர்பிஐ பரிந்துரைக்கின்றன. இது போன்ற கொள்கைகளால் முழு சுதந்திரத்தையும் வங்கிகள் பெற்றாலும், இத்தகைய ஏமாற்று செயல்முறைகளை கடன் வழங்கும் வங்கிகள் வாடிக்கையாளர்களிடம் செய்து கொண்டு தான் இருக்கிறது.
ரிசர்வ் வங்கியின் சமீபத்திய சுற்றறிக்கையில், இது போன்ற தரமற்ற நடைமுறைகளை வங்கிகள் பின்பற்றுகின்றன என்று கூறியுள்ளது. கவலைக்குரிய விஷயம் என்று ரிசர்வ் வங்கி கூறியதாவது, இதுபோன்ற நடைமுறை வெளிச்சத்திற்கு வந்த இடங்களில் ஆர்பிஐ குழுக்களை நியமித்து அதிகப்படியான வட்டி மற்றும் பிற கட்டணங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அறிவுறுத்தியுள்ளது.
சில கடன் வழங்குநர்கள் கடன்களை செக் மூலம் வழங்குவதற்கு பதிலாக ஆன்லைன் பரிமாற்றங்களைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே நேர்மையான பணப்பரிவர்த்தனை வங்கிகளுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே நடக்க வேண்டும் என்பதை உறுதி செய்ய ஆர்பிஐ இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் கடன் வழங்கும் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளிடம் முறையான நடைமுறைகளைப் பயன்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடன் வழங்கும் முறை, வட்டி வசூலிப்பு, சேவைக் கட்டணம் தொடர்பான தங்களின் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்யவும், சிக்கலைத் தீர்ப்பதற்கு தேவையான தகுந்த மாற்றங்களை எடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications