மண் பானையில் புதையல்.. ஆசை வார்த்தை காட்டி ரூ. 7.5 லட்சம் அபேஸ்.. சிக்கிய போலி சாமியார்கள்..!

சேலம்: இன்றெல்லாம் ஒரு நாளைக்கு ஒரு செய்தியாவது மோசடிகள் குறித்து இணையத்தில் வந்த வண்ணம் உள்ளன. டிஜிட்டல் பரிவர்த்தனைகளைப் பயன்படுத்தி மோசடி செய்வது ஒரு ஸ்டைல், கொரியர் நிறுவனத்திலிருந்து போதைப்பொருள் வந்துள்ளதாக கூறி பணத்தைப் பறிப்பது இன்னொரு ஸ்டைல். ஆனால் சேலம் மாவட்டத்தில் புதுவித ஸ்டைலில் மோசடி ஒன்று நடந்துள்ளது.

விமலா என்பவர் சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி பகுதிக்கு அருகே உள்ள சின்னப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வருகிறார். 50 வயதாகும் விமலா, கணவரைப் பிரிந்து இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகளுடன் வசித்து வருகிறார். மேலும் சொந்தமாக செங்கல் சூளை ஒன்றை வைத்து இருக்கிறார்.

மண் பானையில் புதையல்.. ஆசை வார்த்தை காட்டி ரூ. 7.5 லட்சம் அபேஸ்.. சிக்கிய போலி சாமியார்கள்..!

விமலாவுக்கு தொடர்ந்து செங்கல் சூளையின் மூலம் போதிய வருமானம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இவர் செய்வதறியாது இருந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த வேறு ஒருவரின் துணையுடன் பரிகார பூஜை செய்வதாகக் கூறிக்கொண்டு சுரேஷ்குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் விமலாவுக்கு அறிமுகமாகியுள்ளனர்.

சுரேஷ்குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் கொல்லிமலை சாமியார்கள் என கூறிக்கொண்டு பரிகார பூஜை செய்தால் அனைத்து பிரச்சனைகளும் சரியாகும் என்று விமலாவிடம் கூறியுள்ளனர். அருகில் இருந்தவர்களும், இந்த இருவரும் மாந்திரிகம் செய்வது மற்றும் ஜோசியம் பார்ப்பதில் படுகில்லாடி எனக் கூறியுள்ளனர். இதனை நம்பி விமலாவும் அவர்கள் சொல்வதற்கு இணங்கியுள்ளார். சரவணன் மற்றும் சுரேஷ்குமார் இருவரும் சேர்ந்து ஜோசியம் பார்ப்பது போல் விமலாவிடமிருந்து பணம் பறிக்க ஆசை வார்த்தைகளை காட்டியுள்ளனர்.

மேலும் விமலாவுக்கு சொந்தமான செங்கல் சூளையில் புதையல் இருப்பதாகக் கூறி அதனை எடுக்க வேண்டும் என்றால் சிறப்பு பரிகாரம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். விமலாவை முழுமையாக நம்ப வைக்க சுரேஷ்குமார் மற்றும் சரவணன், அவரை கொல்லிமலைக்கு அழைத்துச் சென்று பூஜை செய்வது போல் நடித்துள்ளனர். சிறப்புப் பூஜை செய்ய பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி, சிறுக சிறுக விமலாவிடமிருந்து ரூ. 7.5 லட்ச ரூபாய் பணத்தை வாங்கி உள்ளனர்.

அடுத்த நாடகத்தை நடத்தும் விதமாக விமலாவின் வீட்டில் சிறப்புப் பூஜை ஒன்றை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். அதற்காக மண்பானை மற்றும் விமலாவின் வீட்டில் உள்ள சாமி ரூமில் இருந்து எடுக்கப்பட்ட சாமி சிலைகள் ஆகியவற்றை கொண்டு மாந்திரீக பூஜைகள் செய்வது போல் நடித்துள்ளனர். அதன்படி 48 அமாவாசை கழித்த பின்னரே, பூஜை செய்யப்பட்ட மண்பானையை திறந்து பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மேலும், அதற்கிடையில் திறந்து பார்த்தால் நிறைய கஷ்டங்கள் வரும் என்றும் எச்சரித்துள்ளனர். போலி சாமியார்கள் இருவரும் சேர்ந்து, விமலாவிடம் செங்கல் சூளையில் இருந்த புதையலை மண் பானைக்குள் வைத்ததாகவும் கூறி இருந்தனர். இப்படியே சில நாட்கள் செல்லவே, விமலாவின் பணக்கஷ்டம் தீராமல் இருந்ததை தெரிந்து அவர் மண்பானையை திறந்து பார்த்து உள்ளார். ஆனால் அதில் செங்கல் சூளையிலிருந்து எடுக்கப்பட்ட களிமண் மட்டுமே இருந்துள்ளது. போலி சாமியார்கள் இருவரும் சேர்ந்து தனக்கு விபூதி அடித்ததை உணர்ந்த விமலா அவர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்துள்ளார்.

தான் அவர்களை போலி சாமியார் என்று கண்டுபிடித்ததை உணர்ந்து, வரமாட்டார்களோ என்பதை தெரிந்து கொண்ட விமலா, தனது சொந்தக்காரரின் வீட்டிலும், அதே பூஜை செய்ய வேண்டும் என்று கூறி அவர்களை அழைத்துள்ளார். இதனை நம்பி வந்த இருவரையும் அதன் பிறகு போலீசில் பிடித்துக் கொடுத்துள்ளார். போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் கொல்லிமலையை சேர்ந்தவர்கள் அல்ல, சேலம் மாவட்ட கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. விமலா தொடர்ந்து பணத்தை ஜி-பே மூலம் அனுப்பியதால் அவை சாட்சிகளாகக் காட்டப்பட்டன. அதனை வைத்து வழக்கு பதிவு செய்து வேறு யாரிடமும் இவர்கள் இதே போல் ஏமாற்றியுள்ளனரா? என்பதைப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+