சத்தமில்லாமல் Hugging Face நிறுவனத்தை வாரி சுருட்டிக்கொண்ட Nvidia.. ஏஐ துறையில் அடுத்த மாஸ்டர்ஸ்ட்ரோக்!

உலகளாவிய ஏஐ துறை வளர்ச்சியில் முதுகெலும்பாக இருக்கும் என்விடியா நேற்று வெளியிட்ட காலாண்டு முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் 106 சதவீத வருடாந்திர வளர்ச்சியில் ஜூன் காலாண்டில் சுமார் 96.2 பில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இதில் டேட்டா சென்டர் வர்த்தகத்தில் இருந்து மட்டுமே 89 பில்லியன் டாலர் தொகை வருமானமாக ஈட்டியுள்ளது. இதே காலாண்டில் என்விடியா சுமார் 75 சதவீத லாப விகிதத்துடன் 68 பில்லியன் டாலர் லாபத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த சில மாதங்களாக என்விடியா வன்பொருள் வர்த்தகத்தில் தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலைநாட்டிக்கொண்டு மென்பொருள் சேவையிலும், தனிப்பட்ட ஏஐ மாடல்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்து முடிவு செய்தது. இப்பிரிவு சேவையை மேம்படுத்த முதல் படியா என்விடியா Hugging Face என்ற ஓப்பன் சோர்ஸ் ஏஐ மாடல் நிறுவனத்தை முழுமையாக வாங்கவும், இதற்காக 12.9 பில்லியன் டாலர் தொகையை அளிக்கவும் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சத்தமில்லாமல் Hugging Face நிறுவனத்தை வாரி சுருட்டிக்கொண்ட Nvidia.. ஏஐ துறையில் அடுத்த மாஸ்டர்ஸ்ட்ரோக்!

இது செயற்கை நுண்ணறிவு துறையில் பெரிய மாற்றமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜென்சன் ஹுவாங் தலைமையிலான இந்த நிறுவனம், AI தொழில்நுட்பத்திற்கான தேவை உச்சத்தை எட்டிவிடவில்லை என்று தீவிரமாக நம்புகிறார்.

இதேவேளையில் கூகுகள், Anthropic மற்றும் OpenAI போன்ற ஏஐ மாடல் நிறுவனங்கள் Nvidia சிப்களுக்கு மாற்றாக தங்கள் சொந்த சிப்களை உருவாக்க முயலும் வேளையில், Nvidia இந்த நிறுவனத்தை கைப்பற்றியது மூலம் சொந்த ஏஐ மாடல் உருவாக்குவதில் கூடுதல் கட்டுப்பாட்டையும் ஆதிக்கத்தையும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹக்கிங் பேஸ் என்பது செயற்கை நுண்ணறிவு (AI - Artificial Intelligence) உலகத்திற்கான ஒரு பிரம்மாண்டமான கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் போன்றது.

Also Read

தற்போது நாம்முடைய தேவைக்கு ஏற்றார் போல் போனில் விதவிதமான ஆப்ஸ்கள் பயன்படுத்துகிறோம் அல்லவா? கேமரா ஆப், கேம்ஸ் ஆப், வாட்ஸ்அப் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் இருந்து அதாவது Play Store-ல் டவுன்லோட் செய்கிறோம்.

அதேபோல, உலகத்தில் உள்ள பெரிய பெரிய நிறுவனங்களும், கம்ப்யூட்டர் இன்ஜினியர்களும் பல வகையான AI தொழில்நுட்பங்களை உருவாக்கி வைத்துள்ளனர். இந்த அனைத்து AI தொழில்நுட்பங்களையும் ஒரே இடத்தில் சேமித்து வைக்கும் இடம்தான் ஹக்கிங் பேஸ்.

Recommended For You

இதனால் என்ன பயன் என நீங்கள் கேட்கலாம்... ஒரு கம்பெனிக்கு புதுசா ஒரு AI ஆப் செய்ய வேண்டும் என்றால், அவர்கள் ஆரம்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு கோடிங் எழுதத் தேவையில்லை. ஹக்கிங் பேஸ் தளத்திற்குச் சென்று, ஏற்கனவே யாரோ செய்து வைத்துள்ள ஒரு AI மாடலை எடுத்து, அவர்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

இதை அடிப்படையாக வைத்து என்விடியா நிறுவனத்தால் புது ஏஐ மாடலே வேகமாகவும், திறன்மிக்கதாகவும் உருவாக்க முடியும். இதை என்விடியா ஓப்பன் சோர்ஸ் முறையில் கொடுத்தால் அமெரிக்க ஏஐ நிறுவனங்களுக்கு மட்டும் அல்லாமல் சீனா நிறுவனங்களுக்கும் பெரும் போட்டியாக இருக்கும்.

ஒரு ஏஐ மாடலுக்கு முக்கிய தேவையாக இருக்கும் ஏஐ கட்டமைப்பு என்விடியா நிறுவனத்திடம் இருக்கும் வேளையில் ஒரு ஏஐ மாடலை இந்த ஹக்கிங் பேஸ் மூலம் எளிதாக உருவாக்க முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+