சென்னை: ஆன்லைன் பிளாட்பார்ம் தளங்களில் வேலைக்கு விண்ணப்பித்தும், அவை பலன் கொடுக்கவில்லையா? வேலை தேடுபவர்கள் பலரும் இந்த அனுபவத்தையே சந்திக்கின்றனர். பல்வேறு வேலைகளுக்கு விண்ணப்பித்தும், பணியமர்த்துபவர்களிடமிருந்து எந்த ஒரு தகவலும் வராது. அனால் சிலருக்கு Linkedin போன்ற தளங்கள் கைக்கொடுக்கும். நாம் அடிக்கடி Linkedin, Naukri போன்ற பிரபலமான வேலை தேடும் இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறோம். ஆனால், நீங்கள் அறிந்திராத பல வேலைத் தேடும் தளங்கள் உள்ளன. அவை என்ன என்பதை விளக்குகிறது இந்தப் பதிவு.
கூகுள் வேலைகள் (Google Jobs): ஒவ்வொரு வேலை வழங்கும் இணையதளத்திற்கும் தனித்தனியாக சென்று வேலைகளைத் தேடுவது சில சமயங்களில் தலைவலியாக இருக்கலாம். எனவே, வேலை தேடும் இணையதளங்களான Linkedin, Naukri போன்ற அனைத்து நிறுவனங்களின் இணைதளங்களில் இருந்தும் வேலைகளை ஒரே இடத்தில் கண்டுபிடிக்க முடிந்தால் உதவிகரமானது தானே! இதுவே கூகுள் ஜாப்ஸ் செய்வதாகும். இணைய முழுவதும் இருக்கும் வேலை வாய்ப்புகளை ஒன்றாக கூகுள் ஜாப்ஸ் மூலம் நீங்கள் பார்க்க முடியும். கூகுள் ஜாப்ஸ் மூலம் உங்கள் அனுபவம், திறமை, தகுதி, பட்டம் வேலை வகை மற்றும் நிறுவனம் ஆகியவற்றின் அடிப்படையில் வேலைகளைத் தேடி கண்டுபிடிக்கலாம்.

ஃபிஷ் போல் (Fishbowl): ஃபிஷ் போலில் வேலைகள் மட்டுமின்றி ஆஃபர் லெட்டர் போன்றவற்றையும் நீங்கள் பார்க்கலாம். இந்த தளத்தின் மிகவும் திறமையான மற்றும் நம்பகமான செயல் என்னவென்றால் அங்குள்ள நிறுவனங்களின் மூலம் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களின் கம்பெனி மின்னஞ்சல் ஐடி சரிபார்க்கப்படுவது தான்.
ஃபிஷ்போல் என்பது வேலை சம்பந்தமான கேள்விகளைப் பாதுகாப்பாகக் கேட்கவும், கதைகளைப் பகிர்ந்து கொள்ளவும் மக்கள் பயன்படுத்தும் தளமாக உள்ளது. இந்த தளத்திலோ அல்லது செயலியிலோ, ஆயிரக்கணக்கான தொழிற்துறை, சமூகம் மற்றும் நிறுவன குழுக்களில் இருக்கும் நபர்களைத் தேர்வு செய்து, உங்கள் துறைகளில் பணிபுரியும் பிற நிபுணர்களுடன் நீங்கள் உரையாடல்களை நடத்தலாம்.
ஸ்டார்ட்அப் ஜாப் போர்டல் (Startup Job Portals): ஸ்டார்ட் அப் நிறுவங்களில் வேலை செய்வதில் ஆர்வம் இருந்தால், AngelList Jobs மற்றும் YourStory Jobs போன்ற இணையதளங்கள் குறிப்பாக இந்தியாவில் உள்ள ஸ்டார்ட்அப் பதவிகளுக்கான வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன.
தொழில் சார்ந்த வேலை வாய்ப்பு இணையதளங்கள்: அனைத்துத் துறைகளிலும் இருக்கும் வேலை வாய்ப்புகளைப் பார்ப்பதற்கு பதில், உங்கள் குறிப்பிட்ட துறை, தொழில் ஆகியவற்றைக் கொண்டு வேலை தேட விரும்பினால், அதற்கான சிறப்பு வேலை வாய்ப்பு இணையதளங்களை நீங்கள் பார்வை இடலாம்.
தொழில் சார்ந்த வேலை இணையதளங்களில் Jobsforher, Careerforfresher, BioTecNika, JobStreet போன்றவை அடங்கும்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications