சென்னை: நாம் அனைவரும் பணம் சம்பாதிக்க கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம் அல்லவா.. பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை உருவாக்குவதுதான் நம்மில் பலருக்கும் இருக்கும் ஒரே இலக்கு. ஆனால், உண்மையான செல்வம் பணத்தால் மட்டுமே அளவிடப்படுகிறதா? இந்தக் கேள்வியை என்றாவது உங்களுடைய மனசாட்சியிடம் கேட்டதுண்டா?
நாம் செல்வம் பற்றி பேசும் போது, பொதுவாக அது பணத்தை மட்டும்தான் குறிக்கும். பணத்தை எளிதாக அளவிட முடியும் என்பதே இதற்குக் காரணம். ஆனால் நல்வாழ்வு, அறிவு போன்ற பிற செல்வங்களை அளவிடுவதற்கு நம்மிடம் எந்தக் கருவிகளும் இல்லை.

உதாரணமாக, ஆரோக்கியம் என்பது அனைவர்க்கும் தேவைப்படும் ஒன்று. இதுதான் உண்மையான சொத்து என்று உணர்ந்திருக்கிறீர்களா.. உங்களிடம் ஏதேனும் மதிப்புமிக்க பொருள் அதிக அளவில் இருந்தால், நீங்கள் செல்வந்தர் தான், நான் இல்லை என்று சொல்லவில்லை. மும்பையில் ஒருவரிடம் 100 ஆப்பிள் இருந்தால், அவர் குறைந்தது ரூ. 10,000 மதிப்புடையவராக இருப்பார். ஆனால், ஹிமாசல பிரதேசத்தில் ஆப்பிள் அறுவடையின்போது போது, சாலையில் யாரும் எடுத்துக்கொள்ளாமல் ஏராளமான ஆப்பிள்கள் கீழே கிடக்கும்!
செல்வம் என்ற வார்த்தையைக் கேட்கும் போது, பொதுவாக நல்ல வருமானம், வீடு, கார் போன்றவற்றைக் கொண்ட பணக்காரரைப் பற்றிதான் நினைப்போம். ஆனால், நல்ல ஆரோக்கியம், நல்ல அறிவு, சமூக மதிப்பு போன்றவற்றைக் கொண்டிருந்தாலும் ஒருவர் செல்வந்தர் ஆக முடியும். பணம் மட்டுமே செல்வத்திற்கான அளவுகோல் அல்ல.
பணத்தை எளிதாக அளவிட முடியும் என்பதால், அதை மட்டுமே செல்வமாகக் கருதுகிறோம். யாராவது "என்னுடைய ஆண்டு வருமானம் ரூ. 30 லட்சம்" அல்லது "என் வீட்டின் மதிப்பு ரூ. 7 கோடி" என்று சொல்லும் போது, இவை அளவிடக்கூடிய வகையில் உள்ளன.
ஆனால், "நீங்கள் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறீர்கள்?" அல்லது "உங்களுக்கு எவ்வளவு அறிவு இருக்கிறது?" என்று யாரைக் கேட்டாலும், அதற்கு துல்லியமான பதில் கிடைக்காது. உதாரணமாக, உலகின் முன்னணி 30 விஞ்ஞானிகளின் பட்டியலை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்களை, அவர்களின் சொத்து மதிப்பின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறோமா? இல்லை தானே! அவருடைய அறிவு சார்ந்த விஷயத்தைதான் எடுத்துக்கொள்கிறோம்.
பணத்தை சேமிப்பதிலும் அது கிடைக்கும் நேரத்தை பொருத்தும் சில சிக்கல்கள் உள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தான் பணம் மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கும். தற்போது உங்களுக்கு 55 வயது ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். இப்போது உங்களுக்கு திடீரென ரூ. 50 லட்சம் பணம் கிடைக்கிறது. அந்த பணத்தை வைத்து எவரெஸ்ட் சிகரத்திற்கு உங்களால் ஏற முடியுமா?
பணத்தின் அடிப்படையில் சச்சின் டெண்டுல்கரையோ அல்லது விஷ்வநாதன் ஆனந்தையோ நாம் மதிப்பீடு செய்கிறோமா? அல்லது அவர்களின் விளையாட்டுத் திறமையின் அடிப்படையில் மதிப்பீடு செய்கிறோமா? சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு போன்ற எளிதில் அளவிடக்கூடிய விஷயங்களைக் கொண்டே நாம் மதிப்பீடு செய்து வரிசைப்படுத்துகிறோம். ஆனால், ஆரோக்கியம், அறிவு, உறவுகள், நேரம் போன்றவற்றில் நீங்கள் முதலீடு செய்தால், நீங்கள் எளிதில் பணக்காரராகலாம். பணம் மட்டுமே செல்வத்திற்கான ஒரே வழி என்று கூற முடியாது.
நல்ல ஆரோக்கியம், அறிவு, உறவுகள் போன்றவற்றின் அடிப்படையிளும், நீங்கள் செல்வந்தராக இருக்க முடியும். பணம் அதிகம் உள்ள ஒருவர் செல்வந்தர் அல்ல, நேரம் அதிகம் உள்ள ஒருவர் தான் உண்மையான செல்வந்தர். எனக்குக் கணக்கில் பணம் அதிகம் இருக்கிறது, ஆரோக்கியம் நன்றாக இருக்கிறது, ஆனால் யாரும் என்னுடன் நண்பராக இல்லை என்றால் என்ன பயன்? இதிலிருந்து பணம் வைத்திருக்கும் ஒருவர் செல்வந்தர் இல்லை என்பது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்



Click it and Unblock the Notifications