சென்னை: நமது அன்றாட வாழ்வில் பார்க்கும் வேலைகளைத் தாண்டி, உலகில் பல வித்தியாசமான வேலைகள் இருப்பதை தெரிந்து கொள்ள என்றாவது விருப்பப்பட்டிருக்கிறீர்களா.. ஆம், உலகில் நிறைய வித்தியாசமான வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. சில வேலைகள் கேள்விப்படவே அதிசயமாக இருக்கும். அப்படிப்பட்ட சில வித்தியாசமான வேலைகளைப் பற்றி இப்போது பார்ப்போம்.
சிலருக்கு சொகுசாக வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். பலருக்கு வித்தியாசமான வேலையைத் தேடி செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருக்கும். இது போன்ற நபர்கள் உங்களுக்கு விருப்பம் இருந்தால் கீழ்காணும் ஏதேனும் ஒரு தொழிலை செய்து பணம் ஈட்டலாம். இந்தப் பதிவை முழுமையாக படித்து முடித்த பிறகு, இப்படியும் வேலைகள் இருக்கிறதா.. என்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

கட்டிப்பிடிப்பவர் (Professional Cuddler): இன்றைய அவசர உலகில், நாம் மனித தொடுதலின் முக்கியத்துவத்தை மறந்துவிடுகிறோம். சிலர் நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் யாரும் இல்லாதவர்களாக இருப்பார்கள். உங்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவு தேவைப்பட்டால், இந்தத் தொழில்முறை கட்டிப்பிடிப்பவர்களிடம் நீங்கள் செல்லலாம். இது பிளாடோனிக் தொடுதலை (platonic touch) அடிப்படையாகக் கொண்டது. பிளாடோனிக் டச் என்பது எந்த விதமான தவறான உணர்வுகளையும் உள்ளடக்காத நண்பர்களிடையே வரும் ஆழமான மற்றும் அன்பான இணைப்பாகும்.
பாராநார்மல் வழிகாட்டி (Paranormal Guide): ஆவிகள் மற்றும் பேய்கள் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு, இந்த வேலை சிறந்தது. இந்த வழிகாட்டிகள் பூதம் உலகம் பற்றிய ஆராய்ச்சி செய்து, பேய் இருக்கும் இடங்களுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வார்கள்.
திருமண விருந்தினர் (Fake Wedding Guest): குறைவான விருந்தினர்களுடன் திருமணம் செய்து கொள்ள விரும்பாத தம்பதிகள், இந்தச் செயற்கை விருந்தினர்களை பணியமர்த்திக் கொள்வார்கள். இவர்கள் திருமண விழாவில் கலந்து கொண்டு, திருமணத்திற்கு பிரமாண்ட தோற்றத்தை கொடுப்பார்கள். இதனால் காலியாக இருக்கும் மண்டபம் கூட களைக்கட்டும். அதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை திருமணம் செய்யும் தம்பதியினர், அவர்களுக்கு வழங்க வேண்டும். இதுவும் ஒரு தொழிலாக பலர் செய்து வருகின்றனர்.
வரிசையில் நிற்பவர் (Professional Queuer): நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு நேரம் இல்லாதவர்களுக்காக, வரிசையில் நிற்பவர்கள் உதவுகிறார்கள். நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு ஏற்ப, நீங்கள் வாங்க வேண்டிய பொருளுக்காக நீண்ட நேரம் வரிசையில் இவர்கள் உங்களுக்கு பதில் காத்திருப்பார்கள்.
விலங்கு மனோதத்துவ நிபுணர் (Pet Psychologist): மனிதர்களைப் போலவே செல்லப்பிராணிகளும் பல உணர்ச்சிகளை அனுபவிக்கின்றன என்று ஆய்வுகள் கூறுகிறது. உதாரணமாக, அவை பலவிதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. மகிழ்ச்சி, சோகம், கோபம் போன்றவை இதில் அடங்கும். செல்லப்பிராணிகளுக்கு நடத்தை அல்லது மனநலப் பிரச்சினைகளுக்கும் மனோதத்துவ நிபுணரின் உதவி தேவை. விலங்குகளின் நடத்தை பிரச்சினைகளை சரிசெய்வதற்காக இந்த மனோதத்துவ நிபுணர்கள் பணிபுரிகிறார்கள். நாய்கள், பூனைகள் போன்ற விலங்குகளின் மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றைக் குறைக்க இவர்கள் உதவுகிறார்கள்.
தொழில்முறை தூங்குபவர் (Professional Sleeper): வழக்கமாக, மெத்தை தயாரிக்கும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் வசதியாக இருக்கிறதா.. இல்லையா.. என்பதை சோதிக்க தொழில்முறை ஸ்லீப்பர்களை வேலைக்கு அமர்த்துகின்றன. சில ஹோட்டல்கள் தங்களுடைய அறைகள் ஓய்வெடுப்பதற்கும், நல்ல இரவு உறக்கத்திற்கும் வசதியாக இருப்பதை உறுதிசெய்யவும் இந்த முறையைப் பயன்படுத்துகின்றன. தூக்க ஆராய்ச்சி மையங்களில் இந்தத் தொழில்முறை தூங்குபவர்கள் பணிபுரிகிறார்கள். புதிய தூக்க மருந்துகளை சோதிப்பதற்காகவும் சிலர் பயன்படுத்தப்படுகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications