அமெரிக்காவை விடுங்க.. சீனாவை கொஞ்சம் பாருங்க.. AI மூலம் என்னவெல்லாம் நடக்குது தெரியுமா?

சீனாவின் வேலைவாய்ப்பு சந்தையை AI தொழில்நுட்பம் வேகமாக மாற்றி வருகிறது. தனியார் நிறுவனங்களின் ஊக்கத்தை தாண்டி அரசு கொள்கைகளும் AI பயன்பாட்டை ஊக்குவிப்பதால், பல்வேறு துறைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் வேகமாகவும் அதிகமாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

இதனால் தினம் தினம் பீதியில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். முக்கியமாக இளம் ஊழியர்கள் முதல் அனுபவம் வாய்ந்த மூத்த நிலை ஊழியர்கள் வரையில் அனைவரிடத்திலும் AI மூலம் வேலை இழப்பு அல்லது வேலை இழக்கும் அச்சம் அதிகரித்து வருகிறது. இதை உலக நாடுகளுக்கு ஒரு பாடமாகவும் இருக்கிறது, ஒரு உற்பத்தி திறன் மிக்க நாடு ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் மூலம் எத்தகைய தாக்கத்தை ஏதிர்கொள்கிறது என்பதை காட்டுகிறது. சீனாவின் பாதிப்பு அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு அமெரிக்கா எதிர்கொள்ளும் சவால்களை காட்டும் முக்கியமானது.

அமெரிக்காவை விடுங்க.. சீனாவை கொஞ்சம் பாருங்க.. AI மூலம் என்னவெல்லாம் நடக்குது தெரியுமா?

சீனாவில் மக்களுக்கு அளிக்கும் சேவை முதல் நிறுவனங்கள், தொழிற்சாலை வரையில் பல்வேறு துறைகளில் AI செயலிகள் மற்றும் ரோபோக்களை பயன்படுத்த சீன அரசு கொள்கைகள் ஊக்குவிக்கின்றன. இதனால் ஏஐ மற்றும் ரோபோட்டிக்ஸ் ஏற்றுக்கொள்ளும் அளவு பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

இதேவேளையில் சீனா மக்கள் மத்தியில் அமெரிக்கா, ஐரோப்பா, இந்தியா போல் AI-க்கு எதிரான மனநிலை மிகவும் குறைவாகவே உள்ளதாக சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் வேலை பறிபோகும் அச்சம் உள்ளவர்கள்கூட AI-ஐ பயன்படுத்த ஆர்வம் காட்டுகின்றனர்.

கம்பியூட்டர் ப்ரோகிராமிங் வேலைகள் தற்போது பெரும்பாலும் ஏஐ மூலம் செய்யப்படுகிறது, இதனால் ஒரு மிட் லெவல் ஊழியர்களின் வேலையை ஏஐ உதவியுடன் ஒரு பிரஷ்ஷர் ஊழியர் செய்வதாக சீன டெக் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கல்வியிலும் ஏஐ வந்ததால் முக்கியமான மாற்றம் நடந்துள்ளதாம், உதாரணமாக AI-powered translation tools தற்போது சீனாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதால், கல்லூரிகளில் முன்பு பிரபலமாக இருந்த foreign language courses மீதான ஆர்வம் அந்நாட்டு மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது.

ஏஐ தாண்டி ரோபோ பயன்பாடும் தற்போது சீனாவில் பெரிய அளவில் அதிகரித்துள்ளது. Humanoid robots சீனாவில் சில பணிகளை முழுமையாக மனிதர்கள் உதவி இல்லாமல் செய்யத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, தபால் நிலையங்களில் பார்சல்களை பிரிக்கும் பணிகளில் humanoid robots பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இது தற்போது சிறிய அளவில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

இதைத் தாண்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்வது, காபி தயாரிப்பது போன்ற மனிதர்கள் செய்யும் பணிகளையும் மேற்கொள்வதிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் ஈகாமர்ஸ் துறை, புட் டெலிவரி போன்றவற்றிலும் அதிகளவில் ரோபோக்களை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதேவேளையில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி ஏற்கனவே மந்தமாகி வருகிறது, மக்கள் செலவு செய்வதும் குறைந்து வருகிறது. இதற்கு மத்தியில் அனைத்து துறையிலும் ஏஐ மற்றும் ரோபோடிக்ஸ் மூலம் பணிநீக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் எப்போதும் இல்லாத வகையில் சீனாவில் வீடுகளின் மதிப்பு பெரிய அளவில் குறைந்துள்ளது. இப்படி வேலைவாய்ப்பு சந்தையால் மொத்த பொருளாதாரமும் மாற்றம் அடைந்து வருவது சீனாவில் கண்கூடாக தெரிகிறது.

ஏஐ + ரோபோட்டிக்ஸ் மூலம் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக உற்பத்தித்திறனை காட்டிலும், பல புதிய விஷயங்களை உருவாக்கினாலும், முன்பே போல் அதிக எண்ணிக்கையிலான வேலைகளை உருவாக்காமல் போகலாம் என்ற அச்சம் சீனா பொருளாதார வல்லுனர்கள் மத்தியில் வந்துள்ளது. தற்போது சீனாவின் மொத்த urban unemployment rate சுமார் 5% என்ற அளவில் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+