இந்தியாவிலிருந்து குறிப்பாக கேரள மாநிலத்திலிருந்து சவூதி அரேபியா, குவைத், துபாய், ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு ஏராளமானவர்கள் பயணம் செய்து வருகின்றனர். இதில் 95 சதவீதத்தினர் வேலைவாய்ப்பு காரணமாகச் செல்கின்றனர்.
அந்த நாடுகளில் எல்லாம் சொந்தக்காரர்கள் இருப்பதால் ஏராளமான கேரள மக்கள் தங்கள் விடுமுறையைக் கழிப்பதற்காக சுற்றுலாவாகச் செல்பவர்களும் இருக்கின்றனர்.

இந்த நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தவும் சர்வதேச நாடுகளுக்கு குறைந்த பட்ஜெட்டில் பயணம் செய்யவும் ஒரு புதுமையான திட்டத்தை கேரள அரசு முன்னெடுத்துள்ளது. இதன்படி கேரளத்தின் பேய்பூர்-கொச்சி-துபாய் இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவதற்கான அனுமதியை கேரள அரசு வழங்கியுள்ளது. விரைவில் இந்த கப்பல் போக்குவரத்து சேவை தொடங்குகிறது.
அறிவிப்பை ஏகப்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் வரவேற்றுள்ளனர். இப்போதே டிக்கெட் எடுப்பதற்கு ஆளாளுக்கு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த புதிய கப்பல் போக்குவரத்து சேவையைத் தொடங்குவதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன என்று மத்திய கப்பல்போக்குவரத்து துறை அமைச்சர் சர்பானந்தா சோனாவால் உறுதிப்படுத்தியுள்ளார்.
பேய்பூர்-கொச்சி-துபாய் கப்பல் போக்குவரத்து துடங்கிவிட்டால் வெளிநாட்டு வாழ் கேரள மக்கள் மிகுந்த பலன்களை அடைவார்கள்.
அதிகரித்து வரும் விமானக் கட்டணத்தில் இருந்து பெரும் விடுதலை கிடைக்கும்.
விமானக் கட்டணத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவே இந்த கப்பல் போக்குவரத்து சேவைக்கான கட்டணம் இருக்கும். அத்துடன் விமானத்தை விட மூன்று மடங்கு லக்கேஜ்களை பயணிகள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதனால் மலிவான விலையில் துபாயில் இருந்து வீட்டுக்குத் தேவையான காஸ்ட்லியான ஐட்டங்களை கேரள மக்கள் வாங்கி வர முடியும் அல்லது விற்றுகூட லாபம் பார்க்கலாம்.
இந்த கப்பல் போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் கப்பலில் ஒரே நேரத்தில் 1250 பேர் எந்தவித சிரமங்களும் இல்லாமல் பயணிக்கலாம். இந்தக் கப்பல்கள் எல்லாம் அதிநவீன முறையில் தயாரிக்கப்பட்டவை, சிறப்பான தொழில்நுட்பத்தால் இயக்கப்படுபவை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து ஷார்ஜாவில் உள்ள இந்தியர்கள் சங்கத் தலைவர் ஒய்ஏ ரஹீம் கூறுகையில், இந்தக் கப்பல் பயண நேரம் மூன்று நாட்களுக்குக் குறைவாகவே இருக்கிறது. டிசம்பரில் பள்ளி இறுதிக் காலத்துக்குள் இந்த சேவை தொடங்கும் என்று விரும்புகிறோம். இதன்மூலம் ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்திய மக்கள் விமானத்துக்காக எக்கச்சக்கமான செலவு செய்யத் தேவையில்லை என்றார்.
வேறொரு மாநிலத்துக்காக தயாரிக்கப்பட்ட கப்பலை இப்போது கேரளா வளைகுடா சேவைக்காகப் பயன்படுத்த கேரள அரசு முடிவெடுத்துள்ளது. கொச்சி- துபாய் இடையே செல்வதற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications