பாரத் பந்த்.. என்னவெல்லாம் இயங்கும்.. எது இயங்காது.. எதற்காக இந்த பந்த்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு ஒன்றிய அரசை வலியுறுத்தி, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சமேளனம் இன்று (மே 25 ) அன்று நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளது.

சாதி அடிப்படையிலான மக்கள் தொகையிலான கணகெடுப்பின் கோரிக்கை மட்டும் இன்றி, இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த பந்த் நடைபெறவுள்ளது.

இந்த போராட்டத்தின் மத்தியில் என்னவெல்லாம் இயங்கும்? என்னவெல்லாம் இயங்காது? வாருங்கள் பார்க்கலாம்.

 பிட்காயின் ஒரு போதும் நாணயமாக முடியாது.. ஐஎம்எஃப் தலைவர் அலர்ட்..! பிட்காயின் ஒரு போதும் நாணயமாக முடியாது.. ஐஎம்எஃப் தலைவர் அலர்ட்..!

நாடு தழுவிய முழு அடைப்பு

நாடு தழுவிய முழு அடைப்பு

அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை சமூகங்களின் ஊழியர் சம்மேளனம், பகுஜன் முக்தி கட்சி உள்ளிட்டோர் நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த முழு அடைப்பை மக்கள் வெற்றி அடைய செய்ய வேண்டும் என பகுஜன் முக்தி கட்சியின் செயல் தலைவர் டிபி சிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

என்னென்ன கோரிக்கைகள்?

என்னென்ன கோரிக்கைகள்?

தேர்தலில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்.

சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு வேண்டும்.

தனியார் துறையில் SC/ST/OBC இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம் கொண்டு வர வேண்டும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC), இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) செயல்படுத்தக் கூடாது.

பழைய ஓய்வூதிய திட்டம்

பழைய ஓய்வூதிய திட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்

 ஓடிசா மற்றும் மத்திய பிரதேச பஞ்சாயத்து தேர்தல்களில் இதர பிற்படுத்தபட்டவர்களுக்கான தனி வாக்காளர் தொகுதி வேண்டும்.

 

சுற்றுசூழல் பாதுகாப்பு என்ற போர்வையில் பழங்குடியின மக்களை அப்புறப்படுத்தக் கூடாது.

தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது

கொரோனா லாக்டவுன் போது தொழிலாளர்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தொழிலாளர் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.

என்னவெல்லாம் இயங்கும்?

என்னவெல்லாம் இயங்கும்?

இந்த போராட்டத்தில் வணிகங்கள், பொது போக்குவரத்தை மூடுவதற்கு பிரச்சாரம் நடத்தி வரப்படும் நிலையில், இன்றுஎன்னவெல்லாம் இயங்கும், இயங்காது என்பது குறித்தான தெளிவான அறிவிப்புகள் ஏதும் இல்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharart bandh on may 25: Why is this struggle going on?

Apart from the demand for a caste-based census, the Bharat Bandh will be held tomorrow emphasizing many more demands.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X