NationWide Strike: பிப்ரவரி 12 - இன்று நாடு முழுவதும் பெரும் வேலைநிறுத்த போராட்டம் நடைபெற உள்ளது. 14 தேசிய தொழிற்சங்கங்கள் இதற்கு அழைப்பு விடுத்துள்ள காரணத்தால் நுகர்வோர் சந்தை முதல் போக்குவரத்து சேவை வரையில் பாதிக்கப்பட உள்ளது. இந்த போராட்டத்தில் தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், விவசாயிகள், கிராமப்புற தொழிலாளர்கள் உள்ளிட்ட சுமார் 30 கோடி பேர் இதில் பங்கேற்க வாய்ப்புள்ளதால் இந்திய வரலாற்றில் இது மிகப்பெரிய தொழிலாளர் போராட்டமாக இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த போராட்டத்தில் நாடு முழுவதும் 600 மாவட்டங்களில் பெருமளவு பாதிப்பு ஏற்படலாம். மேலும் ஒடிசா, அசாம், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் இந்த பந்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒடிசா:
பல மாவட்டங்களில் முழு முடக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மொத்த விற்பனை சந்தைகள், போக்குவரத்து சேவைகள், அரசு அலுவலகங்கள் மற்றும் சில வங்கிகள் கூட பாதிக்கப்படலாம். பொதுப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படும். சில பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்கள் மூடப்படலாம்.
அசாம்:
நகர்ப்புற மற்றும் டவுன் பகுதிகளில் பரவலான முடக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என டைம்ஸ் ரிப்போர்ட் கூறுகிறது. பொதுப் போக்குவரத்தில் ஒரு பகுதி மட்டும் நிறுத்தப்படலாம். தொழிற்சங்கங்கள் வலுவாக உள்ள பகுதிகளில் சந்தைகள் மூடப்படலாம். அரசு அலுவலகங்களுக்கு வரும் பணியாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம்.
கேரளா:
வலுவான தொழிற்சங்க அமைப்பு இருக்கும் காரணத்தால் பெரிய அளவிலான பாதிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து, வர்த்தக சந்தைகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் பல மாவட்டங்களில் மூடப்பட உள்ளது. வங்கி சேவைகள் குறைந்த ஊழியர்களுடன் இயங்கலாம்.
மேற்கு வங்காளம்:
பொதுத்துறை வங்கி சேவைகள், போக்குவரத்து செயல்பாடுகள் மற்றும் சந்தைகள் குறிப்பாக நகர்ப்புற பகுதிகளில் பாதிக்கப்படலாம்.
மேலும் இந்த பாரத் பந்த மூலம் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்படும் முடக்கம் அளவு வேறுபடலாம் என்றாலும், ஒடிசா மற்றும் அசாம் ஆகியவை மிகக் கடுமையான பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்படும்.
தமிழ்நாட்டில் பாரத் பந்த் பாதிப்பு எப்படி இருக்கும்?
நம் மாநிலத்தில் CITU, AITUC, INTUC உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் இதில் பங்கேற்க உள்ளன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி போன்ற தொழில்துறை நகரங்களில் தொழிற்சாலைகள், போக்குவரத்து, சில்லறை வணிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. ஆனால் பாதிப்பின் தாக்கம் மிகவும் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி சேவைகள் அதிகாரப்பூர்வமாக மூடப்படாவிட்டாலும், ஊழியர்கள் குறைவாக இருந்தால் கவுண்டர்கள் மெதுவாக இயங்கலாம், ATM-களில் பணம் தீர்ந்தால் நிரப்புவது தாமதமாகலாம். UPI, ஆன்லைன் பேங்கிங், ATM-களை பயன்படுத்துவது நல்லது. பெரிய தொகை பரிவர்த்தனை அல்லது காசோலை தேவைப்பட்டால் நாளைக்கு ஒத்திவைப்பது பாதுகாப்பானது.
முக்கிய கோரிக்கை
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகளில், வரைவு விதை மசோதா, மின்சார திருத்த மசோதா மற்றும் SHANTI சட்டம் ஆகியவற்றைத் திரும்பப் பெறுவது முக்கியமானதாக உள்ளது. மேலும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை (MGNREGA) மீட்டெடுப்பதுடன், 'விக்ஸித் பாரத் - ரோஜ்கார் அவுர் அஜீவிகா மிஷன் (கிராமின்) சட்டம், 2025' ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
முக்கிய அமைப்புகள்
இந்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கும் தொழிற்சங்கங்களின் குழுவில் INTUC, AITUC, HMS, CITU, AIUTUC, TUCC, SEWA, AICCTU, LPF மற்றும் UTUC உள்ளிட்ட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications