மத்திய அரசு தொழிலாளர்களுக்கு விரோதமாக செயல்படுவதாகவும், விவசாயிகள் நலனுக்கு எதிராக செயல்படுவதாகவும் குற்றம்சாட்டி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள், தொழிற்சங்கங்கள் சார்பாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
அண்மையில் மத்திய பழைய தொழிலாளர் சட்டங்களுக்கு மாற்றாக புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. புதிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களுக்கு விரோதமானவை என கூறி பல்வேறு தொழிற்சங்கங்களும் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டன. தமிழ்நாட்டை பொறுத்தவரை சிஐடியூ, காங்கிரஸ் என ஏராளமான தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றன.

கேரளாவில் ஏராளமான தொழிற்சங்கங்கள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று இருக்கின்றன. இதன் காரணமாக கன்னியாகுமரியில் இருந்து கேரளா செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்துமே எல்லை பகுதியிலேயே நிறுத்தப்பட்டன. கேரளாவில் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன . ஆட்டோக்கள், பேருந்துகள் இயங்கவில்லை எனவே தமிழக கேரள எல்லையான களியக்காவிலை உள்ளிட்ட பகுதிகளில் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமானவர்கள் கேரளாவுக்கு வேலைக்கு செல்கின்றனர் இந்த வேலை நிறுத்தம், பேருந்துகள் மற்றும் ஆட்டோக்கள் இயங்காததால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதே போல தென்காசியில் இருந்து கேரளாவிற்கு செல்லக்கூடிய பேருந்துகளும் தமிழக எல்லையிலே நிறுத்தப்பட்டு இருக்கின்றன. கோவையில் இருந்து கேரளாவுக்கும், கேரளாவில் இருந்து கோவைக்கும் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் , வேலைக்கு சென்று வருபவர்கள் பாதிக்கபப்ட்டனர்.
தினமும் 45 பேருந்துகள் தென்காசியில் இருந்து கேரளாவுக்கு இயக்கப்படும் ஆனால் அவை இன்று இயக்கப்படவில்லை. சபரிமலையில் இன்று நடை திறக்க இருந்த நிலையில் ஏராளமான பக்தர்கள் கேரளாவுக்கு சென்ற திட்டமிட்டனர். ஆனால் இந்த பொது வேலை நிறுத்தம் காரணமாக பேருந்துகள் இயங்காததால் அவர்களின் பயணத் திட்டமும் பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு தொழிலாளர் விரோத போக்கினை கடைபிடிப்பதாக கூறி தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் மற்றும் சிஐடியு உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த கூட்டமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு நகரங்களிலும் தொழிற் சங்கத்தினர் பேரணியாக சென்றனர். திருச்சி ஜங்ஷனில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான முழக்கங்களையும் அவர்கள் எழுப்பினர்.
திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற தொழிற்சங்கத்தினர் மற்றும் ரயில் மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதே போல திருவள்ளூரில் ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூரில் தொழிற்சங்கத்தினர் தபால் நிலையத்துக்கு எதிரே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம், பேரணி , ரயில் மறியல் ஆகியவை நடைபெற்றன.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications