ந்திய பங்குச்சந்தை வெள்ளிக்கிழமை அன்று ஏற்ற இறக்கத்தில் தான் இருந்தது. குறிப்பாக காலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவடைந்து வர்த்தகமானது. இதனால் முதலீட்டாளர்கள் பல லட்சம் கோடிகளை இழந்தனர். அதேபோல தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் சரிவை கண்டது. பிற்பகலுக்கு பின்னர் இவை மீண்டு வந்தன.
இந்த சரிவுக்கு மத்தியிலும் கூட ஒரு நிறுவனத்தின் பங்கு மட்டும் 5 சதவீதம் உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது. பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு தொடர்ந்து மூன்று நாட்களாக ஏற்றத்திலேயே இருக்கிறது .

புதன்கிழமை, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை என தலா 5 சதவீதம் உயர்ந்து மூன்றே நாட்களில் 15 சதவீதம் இதன் பங்கு மதிப்பு அதிகரித்துள்ளது. பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு வெள்ளிக்கிழமை அன்று 1183 ரூபாய் என்ற அளவை எட்டியது.
பங்குச் சந்தை வீழ்ச்சி அடைந்த போதிலும் இந்த ஒரு நிறுவனத்தின் பங்கு மட்டும் வளர்ச்சியிலேயே இருந்தது. இதற்கு முக்கிய காரணம் பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் அண்மையில் டாடா நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்தத்தை பெற்றது.
டாடா அக்ரோ மற்றும் கன்சியூமர் ப்ராடக்ட்ஸ் நிறுவனம் பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனத்தோடு 1650 கோடி ரூபாய்க்கு ஒரு பெரிய ஒப்பந்தத்தை மேற்கொண்டு இருக்கிறது.அடுத்த 12 மாதங்களுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
டாடா அக்ரோ நிறுவனத்துக்கு தேயிலைகள், காபி பீன்ஸ், ஆர்கானிக் பருப்புகள் ,தேங்காய், நிலக்கடலை ,எள்ளு, கடுகு மற்றும் பாதாம், முந்திரி, வால்நட் உள்ளிட்டவற்றை பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் சப்ளை செய்ய இருக்கிறது.
இந்த தகவல் வெளியானதில் இருந்தே பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு உயர்ந்த வண்ணமே இருக்கிறது. அண்மையில் தான் இந்த நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் மெக்கெயின் இந்தியா அக்ரோ ஆகிய நிறுவனங்களோடு புதிய ஒப்பந்தங்களை பெற்றது .
முதலீட்டாளர்களின் நம்பிக்கை பெற்ற நிறுவனமாக பாரத் குளோபல் டெவலப்பர்ஸ் மாறி இருக்கிறது. தொடர்ந்து மூன்று நாட்களாக தலா 5% உயர்ந்து அப்பர் சர்க்யூட் நிலையை எட்டியது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஆறு மாத காலத்தில் சுமார் 400 சதவீதம் அதிகரித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1829 சதவீதமும் கடந்த ஓராண்டு காலத்தில் 2041 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications