எல்ஐசி நிறுவனம் ஐபிஓ வெளியிடும் போது பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் அதிகம் விவாதித்தது எல்ஐசி ஏஜென்ட்-களுக்கு அளிக்கப்படும் கமிஷன் மற்றும் பல்வேறு சேவைகள் குறித்து தான். இந்த நிலையில் எல்ஐசி நிறுவனத்தின் சேர்மன்-ஐ காட்டிலும் அதிகம் சம்பாதிக்கும் எல்ஐசி ஏஜெண்ட் ஒருவரை பற்றித் தான் நம் இப்போது பார்க்கப்போகிறோம்.
பாரத் பரேக் ஒரு எல்ஐசி முகவர் மட்டும் அல்லாமல் புகழ்பெற்ற சொத்து மேலாளராகவும், இந்திய இன்சூரன்ஸ் துறையில் சக்திவாய்ந்த நபராகவும் உள்ளார். தனது 17 வயதில் எல்ஐசி நிறுவனத்தின் ஏஜெண்ட்டாக தனது பணியைத் துவங்கினார். 18 வயதில் ஒரு மேம்பாட்டு அதிகாரியாக உயர்ந்தது மூலம் அவரின் அதிரடியான வளர்ச்சியின் கதை துவங்கியது.

பாரத் பரேக், எல்ஐசி நிறுவனம் தலைவரை விட ஐந்து மடங்கு அதிகம் வருமானம் சம்பாதிக்கிறார். பாரத் பரேக்-ன் ஆண்டு வருமானம் மட்டும் 4 கோடி ரூபாய், இவருடைய அதிகப்படியான வருமானத்திற்கு முக்கியமான காரணம் அவர் ஆண்டுக்கு சுமார் 1,000 பாலிசிகளை விற்பது தான்.
பாரத் பரேக் விற்பனை செய்யும் ஒவ்வொரு பாலிசியும் சராசரியாக ரூ. 2 லட்சம் மதிப்புக் கொண்டது, இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் 200 கோடி ரூபாயை எல்ஐசி நிறுவனத்திற்கு ப்ரீமியம் கிடைக்க வழிவகை செய்துள்ளார். இதன் வாயிலாகவே வருடத்திற்கு 4 கோடி ரூபாய் வரையில் வருமானம் ஈட்டுகிறார்.
பாரத் பரேக் மிகவும் சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மட்டும் அல்லாமல் தனது குடும்பத்திற்கு ஒரு தூணாக இருந்து வருகிறார், அவரது ஐந்து சகோதரிகளின் திருமணத்திற்கு நிதியுதவி அளவில் பெரிதும் பங்களித்தார்.
பாரத் பரேக் 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், இந்தியாவின் வெற்றிகரமான சொத்து மேலாளர்களில் ஒருவராக இருப்பது மட்டும் அல்லாமல் எல்ஐசி ஏஜெண்ட்கள் அனைவருக்கும் இந்தப் பணியை முழுநேர பணியாக மாற்றலாம் என்பதற்கு அடையாளமாகவும் விளங்குகிறார்.

எல்ஐசி நிறுவனத்திடம் கமிஷன் தொகையின் வாயிலாக 4 கோடி ரூபாய் வரையில் சம்பாதிக்கும் பாரத் பரேக் பங்குச்சந்தையிலும் முதலீடு செய்து வருகிறார். செப்டம்பர் 30, 2023 நிலவரப்படி அவரது போர்ட்ஃபோலியோவில் 5 பங்குகளில் முதலீடு சுமார் ரூ.469.7 கோடி மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளார்.


Click it and Unblock the Notifications