இனி பிரச்சனையே இல்லை! BPCL அறிமுகம் செய்த LPG சிலிண்டர்! புக் செய்த 4 மணி நேரத்தில் டோர் டெலிவரி!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் "பாரத்கேஸ் லைட் ஜிப் (Bharatgas Lite ZIP)" என்ற புதிய சேவையை ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று தொடங்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வேகமாகவும், எளிதாகவும் எல்பிஜி கனெக்சன் பெறலாம். மேலும் முன்பதிவு செய்த வெறும் நான்கு மணி நேரத்திற்குள் உங்கள் வீட்டிற்க்கே எல்பிஜி சிலிண்டர் டோர் டெலிவரி செய்யப்படும்.

பாரத்கேஸ் லைட் ஜிப் சேவையின் சிறப்பம்சங்கள் என்ன?: உங்களுக்கே தெரியும் ஈரான் அமெரிக்கா போர் பதற்றத்தின் போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருந்தது. இதனால் கச்சா எண்ணெய் முதல் எல்பிஜி சப்ளை வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது. சப்ளை பிரச்சனையால் கேஸ் பெரும் விதிகளில் அரசு மாற்றங்களை செய்தது.

இனி பிரச்சனையே இல்லை! BPCL அறிமுகம் செய்த LPG சிலிண்டர்! புக் செய்த 4 மணி நேரத்தில் டோர் டெலிவரி!

இது ஒரு புறம் இருக்க கமர்சியல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் பிரச்சனையாய் அமைந்தது. இருப்பினும் கமர்சியல் சிலிண்டரின் விலையை ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்திருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.

Also Read

அந்த சமயத்தில் பலர் வேறு வழியே இல்லாமல் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரை வாங்கி வந்தனர். ஆனால் இனி புதிய கேஸ் கனெக்சன் பெறுவதற்கு நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சில மணி நேரங்களில் வீட்டிலிருந்தே பெற முடியும். அதிலும் நீங்கள் சிலிண்டர் புக் செய்த 4 மணி நேரத்திற்குள் டோல் டெலிவரி செய்யப்படுவது தான் இன்னும் ஹைலைட்.

மேலும் BPCL வழங்கும் இந்த எல்பிஜி சிலிண்டர்கள் லைட் வெயிட் சிலிண்டராக இருப்பதால் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இவை ஒளி ஊடுருவக்கூடிய வடிவமைப்பை கொண்டுள்ளது. இதனால் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ப ரீஃபில் செய்யலாம்.

வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள், சீக்கிரம் எல்பிஜி கனெக்சன் பெற விரும்பும் நபர்கள், அடிக்கடி புலம்பெயரும் குடும்பங்கள் என யார் வேண்டுமானாலும் இந்த சேவையை பயன்படுத்தி எல்பிஜி கனெக்சன் வாங்கலாம். தற்போது வரை பாரத்கேஸ் லைட் ஜிப் சேவை 30 நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இன்னும் 24 மாநிலங்களுக்கும், 70 நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பிபிசிஎல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நகரங்களில் மக்கள் எளிதில் டோர் டெலிவரி பெற முடியும். அதை தொடர்ந்து நாட்டின் பிற நகரங்களுக்கும் சீக்கிரம் சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

பணிபுரிபவர்கள், பேச்சிலர்கள், எளிதில் கேஸ் கனெக்சன் பெற முடியாதவர்களுக்கு இந்த வசதி உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எப்படி முன் பதிவு செய்வது வாங்குவது? அதற்கு தனி அப்ளிகேஷன் இருக்கிறதா? அல்லது இணையதளம் மூலமாக வாங்க வேண்டுமா? எத்தனை கிலோ சிலிண்டர்?, எவ்வளவு விலை? போன்ற மற்ற விவரங்கள் இனிவரும் நாட்களில் வெளிவரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+