நாட்டில் நிலவி வரும் பலவேறு பிரச்சனைகளை வலியுறுத்தி பல்வேறு தொழில் சங்கங்களும், வங்கிகளும், மாணவர் அமைப்பினரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இதில் பத்து தொழில்சங்கங்கள், வங்கி ஊழியர் சங்கங்கள், மாணவ அமைப்பினர் என பலரும் கொடி பிடித்துள்ளனர்.
நாட்டில் அதிகரித்து வரும் பொருளாதார மந்தம், அதிகரித்து வரும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு, வேலையில்லா திண்டாட்டம், அரசு நிறுவனங்கள் தனியார்மயமாக்குதல், பணி நீக்கம் என மக்களை வாட்டி வதைத்து வரும் பிரச்சனைகளை கருத்தில் கொண்டு போராட்டம் நடந்து வருகிறது. ஆக இவற்றையெல்லாம் எதிர்க்கும் விதமாகத் தான் இந்த போராட்டம் தொடங்கியுள்ளது.
எதற்காக இந்த போராட்டம்
நாட்டில் ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல கட்டப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் போராடும் மாணவர்கள் மீது அவ்வப்போது தாக்குதல் சம்பவங்களும் அரங்கேறி கொண்டிருக்கின்றன. அதேசமயம் நாட்டில் பொருளாதாரமும் மந்தநிலை தலைவிரித்தாடி வருகிறது. மேலும் இந்த மந்தமான நிலை இன்னும் அதிகரிக்கும் என்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் தொடர்ந்து அறிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் வேலையின்மை அதிகரித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் தவித்து வருகின்றனர். இப்படி சூழி நிலையை கண்டித்தே இப்போராட்டம் வெடித்துள்ளது.
யார் யார் கலந்து கொள்கிறார்கள்?
சரி இந்த போராட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள்.
இந்திய தொழில் சங்கங்களின் மையம் (CITU)
அகில இந்திய மத்திய தொழில் சங்க கவுன்சில் (AICCTU)
இந்திய தேசிய தொழில் சங்க காங்கிரஸ் (INTUC)
அகில இந்திய தொழில் சங்க காங்கிரஸ் (AITUC)
சுயதொழில் மகளிர் சங்கம் (SEWA)
தொழிலாளர் முற்போக்கு கூட்டமைப்பு (LPF)
ஐக்கிய தொழில்சங்க காங்கிரஸ் (UTUC)
ஹிந்த் மஜ்தூர் சபா (HMS)
தொழில்சங்க ஒருங்கிணைப்பு மையம் (TUCC), இவர்கள் தவிர அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அலுவலர்கள் சங்கம், இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பு, இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் ஆகிய வங்கித் துறை சார்ந்த தொழிற்சங்கங்களும் போராட்டத்திற்கு ஆதரவுக் கரம் நீட்டியுள்ளன. எனினும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவு தொழிற்சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
எத்தனை பேர் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளலாம்
நாடு முழுவதும் நடந்து வரும் இந்த போராட்டத்தில் 25 கோடி பேர் பங்கேற்கலாம் என்றும் எதிர்பார்க்கபப்டுகிறது. அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நடைபெறும் இந்த போராட்டத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் தொழிலாளர் மாநாடு எதுவும் நடைபெறவில்லை. இங்கு தொழிலாளர் குறித்தான கோரிக்கைகள் குறித்த எந்த அம்சமும் விவாதிக்கப்படவில்லை. இது போன்றதொரு சந்திப்பு கடைசியக 2015ல் தான் நடந்தது என்றும் கூறப்படுகிறது.
என்று இந்த போராட்டம்?
நாடு முழுவதும் நடந்து வரும் இந்த அதிரடியான போரட்டமானது இன்று ஜனவரி 8, 2020, புதன் கிழமையன்று நடந்து வருகிறது. இது 24 மணி நேர போராட்டம் என்றும் கூறப்படுகிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த போராட்டமானது இன்று அதிகாலையில் இருந்தே தொடங்கியுள்ளது.
போராட்ட காரர்களின் கோரிக்கை என்ன?
இந்த போராட்டகாரர்கள் அரசு நிறுவனங்களை தனியார் மயமாக்குதல் வேண்டாம், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்க கூடாது, பொதுத்துறை வங்கிகள் இணைப்பு வேண்டாம். இது தவிரக் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் உயர்த்தப்படாமை, சமூக பாதுகாப்பு என பல கோரிக்கைகளை உள்ளடக்கிய 12 அம்ச கொள்கைகளை பற்றி கோரிக்கைகளையும் முன் வைத்துள்ளனர்.
அரசின் நடவடிக்கைகளில் திருப்தி இல்லை
பல துறை சார்ந்த தொழிலாளர்களின் அடிப்படை ஊதியம் நீண்ட காலமாக உயர்த்தப்படாமல் இருக்கிறது. இதனால் விலைவாசி உயர்விற்கு ஏற்ப வாழ்வாதாரத்தை மாற்றிக் கொள்ள முடியாமல் தொழிலாளர்கள் தவிக்கின்றனர். இவை அனைத்திற்கும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசின் நடவடிக்கையில் திருப்தி ஏற்படவில்லை என்று தொழிற்சங்கங்கள் கூறி வருகின்றன.
போராட்டக் களமாக மாறியுள்ள இந்தியா
மேலும் இது குறித்தான பேச்சுவார்த்தையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் கலந்து கொண்ட நிலையில், தொழிற்சங்கங்கள் வைத்த கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மத்திய இணையமைச்சர் உறுதிமொழி எதுவும் வழங்கவில்லை என்றும் கூறப்பட்டது. இதனால் கடுப்பான தொழிற்சங்கங்கள் தான், நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து நிலையில் தான், தற்போது இந்தியா போராட்ட களமாக மாறியுள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications