அமெரிக்காவினை தொடர்ந்து சமீபத்திய வாரங்களாகவே பணி நீக்க நடவடிக்கையானது இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
இது குறித்து பலவிதமான கருத்துகள் சந்தையில் இருந்து வரும் நிலையில், பாரத்பே-யின் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் பணி நீக்கம் குறித்தான தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
நீங்கள் இதுவரையில் இந்த பிரச்சனையில் சிக்கவில்லை எனில், அந்த சுழற்சியினை நீங்கள் எதிர்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
சம்பளத்தினை குறைக்கலாம்
பணி நீக்கம் குறித்து தனது கருத்தினை கூறிய அஷ்னீர், செலவு குறைப்பின் ஒரு பகுதியாக நீங்கள் மிகப் பெரிய பணி நீக்கம் செய்ய திட்டமிட்டிருந்தால், பணி நீக்கத்திற்கு பதிலாக நிறுவனர்கள் 25% சம்பளத்தினை அல்லது தொழில்நுட்ப ஊழியர்களின் சம்பளத்தினை 40% குறைக்கலாம்.
உண்மையான சம்பளம்
இது குறித்து லிங்க்ட் இன் பக்கத்தில் உண்மையான சம்பளம் Vs பெய்டு சம்பளம் என்பது குறித்து விளக்கினார். 2021ல் ஊழியர்களின் உண்மையான சம்பளத்தினை விட அதிகமாக சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் இது 2022ல் ஊழியர்கள் வேலை தேடும்போது தான் உணமையான சம்பளம் என்பது குறைவாக உள்ளது.
டெக் துறையில் வீழ்ச்சி
குறிப்பாக டெக் ஊழியர்கள் மத்தியில் இந்த விகிதம் மிகப் பெரியளவில் இருந்து வருகின்றது. இது ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் உண்மை என்பது இது தான் எனலாம். கடந்த ஆண்டில் அட்ரிஷன் விகிதம் என்பது மிக அதிகளவில் இருந்த நிலையில், நிறுவனங்கள் வேறு வழியின்றி அதிக சமபளம் கொடுத்து ஊழியர்களை தக்க வைத்துக் கொள்ள முயன்றன. அந்த காலகட்டத்தில் சம்பள விகிதமும் மிக அதிகம். ஆனால் நடப்பு ஆண்டில் அப்படி இல்லை.
மந்த நிலையில் சரிவு
சர்வதேச அளவில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் தேவையானது சரிவில் காணப்படுகின்றது. இந்த காலகட்டத்தில் ஒப்பந்தங்களும் சரிவினைக் கண்டுள்ளன. இதன் காரணமாக வேலை வாய்ப்புகளும் குறைந்துள்ளன. இதற்கிடையில் தான் பணி நீக்கமும் அதிகளவில் இருந்து வருகின்றது.
சம்பளத்தினை குறைத்து கொள்ளலாம்
பணி நீக்கத்தின் மத்தியில் புதிய வேலைகளை ஊழியர்கள் தேடும் நிலையில், அவர்களுக்கு குறைவான சம்பளம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இது முந்தைய வேலையை விட குறைவான சம்பளமே என்ற நிலையே இருந்து வருகின்றது. ஆனால் தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். செலவினங்களை குறைத்துக் கொள்ளலாம். நிறுவனங்களும் ஊழியர்களை வெளியே அனுப்புவதை விட, சம்பளத்தை குறைத்து வைத்துக் கொள்ளலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications