கடந்த சில மாதங்களாகவே இந்திய பங்குச்சந்தைகள் கடுமையான சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை பங்குச்சந்தை சரிவால் பல லட்சம் கோடிகளை முதலீட்டாளர்கள் இழந்துள்ளனர்.
பல்வேறு பெரிய நிறுவனங்களின் பங்குகள் கூட பல மடங்கு சரிவில் இருக்கிறது. பங்குச்சந்தை மீண்டும் எப்போது பழைய நிலைமைக்கு வரும் என முதலீட்டாளர்கள் பலரும் எதிர்பார்த்திருக்கின்றனர். பங்குச்சந்தை தற்போது திருத்தத்தில் இருக்கிறது கூடிய விரைவில் பழைய நிலைக்கு படிப்படியாக திரும்பும் என சொல்லப்படுகிறது.

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி பிப்ரவரி மாதத்தில் மட்டும் 6.37% சரிவை கண்டுள்ளது. அதேபோல மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 6% வரை சரிவடைந்துள்ளது. முதலீட்டாளர்கள் தங்களின் போர்ட்போலியோ மைனஸில் இருப்பதை கண்டு செய்வதறியாது தவித்து வருகின்றனர். பலரும் தங்களுடைய எஸ்ஐபி முதலீடுகளை கைவிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பெருமளவில் இந்திய பங்குகளை விற்பனை செய்வதே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து வெளியேறுவதற்கு அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவடைவது, மூலதன ஆதாயவரி விதிப்பு உள்ளிட்டவை காரணமாக சொல்லப்படுகிறது.
பட்ஜெட்டில் மூலதன ஆதாய வரி குறைப்பு தொடர்பாக அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிடுமா என காத்திருந்த முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதன் காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச் சந்தையில் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்துவிட்டு அதனை சீன பங்குச் சந்தையில் முதலீடு செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேறுவதற்கு முக்கிய காரணமாக மூலதன ஆதாய வரியே சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான் பாரத் பே நிறுவனரும் தொழிலதிபருமான அஷ்னீர் குரோவர் இந்திய பங்குச்சந்தையில் வெளிநாட்டு முதலீடுகளை நிலை நிறுத்த வேண்டும் என்றால் மூலதன ஆதாய வரியை உடனடியாக நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். பங்குச்சந்தை தானாக சரி செய்து கொள்ளாது ,அரசு சில கட்டமைப்புகளை மாற்ற வேண்டும் அதில் முக்கியமானது மூலதன ஆதாய வரியை நீக்குவது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பங்குச்சந்தை சார்ந்து இயங்கக்கூடிய பல்வேறு நிறுவனங்களும் இதே கருத்தை முன்வைக்கின்றன. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்து லாபம் பார்க்கும்போது அவர்கள் மூலதன ஆதாய வரியை செலுத்த வேண்டி இருக்கிறது. 2022 - 2023 ஆம் ஆண்டில் மட்டும் அரசு இதுபோல மூலதன ஆதாய வரியின் மூலம் மட்டும் 11 பில்லியன் டாலர்களை வருமானமாக பெற்று இருக்கிறதாம்.
இந்தியாவில் நீண்டகால மூலதன ஆதாய வரி என்பது பங்கு முதலீட்டினை பொறுத்தவரை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் 12. 5% ஆக உயர்த்தப்பட்டது. பாண்டுகள் மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்து அதில் கிடைக்கும் மூலதன ஆதாயத்திற்கு 10% வரி விதிக்கப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட நிதி மசோதாவில் அமைச்சர் அனைத்து விதமான மூலதன ஆதாயங்களுக்கும் ஒரே மாதிரியாக 12.5% என வரி விதிக்கப்படும் என்றும் இது 2026 ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலீடும் செய்துவிட்டு அதற்கு அதிக பட்ச வரியும் செலுத்த வேண்டுமா என வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதலீடுகளை திரும்ப பெறுவதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
Story written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications