BharatPe-க்கு அடித்த ஜாக்பாட்.. RBI கொடுத்த அனுமதி.. இனி கையில் பிடிக்க முடியாது..!!

இந்தியாவின் முன்னணி பின்டெக் யூனிகார்ன் ஸ்டார்ட்அப் நிறுவனமாக விளங்கும் BharatPe-க்கு இந்திய ரிசர்வ் வங்கி இந்திய சந்தையில் பேமெண்ட் அக்ரிகேட்டர் ஆகச் செயல்பட in-principle ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்திய பேமெண்ட் சந்தை உலகமே வியக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கடுமையாகப் போட்டிப்போட்டு வரும் நிலையில் பார்த்பே நிறுவனத்திற்கு ஆர்பிஐ பேமெண்ட் அக்ரிகேட்டர் ஆக இயங்க அனுமதி வழங்கியுள்ளது.

பார்த்பே நிறுவனத்தில் அஷ்னீர் குரோவர் நிதி மோசடி, சிஇஓ சுஹைல் பதவி விலகல் எனப் பல பிரச்சனைக்கு மத்தியில் பார்த்பே நிறுவனத்திற்குத் தற்போது கிடைத்துள்ள ஒப்புதல் முக்கியமான வாய்ப்பாக உள்ளது.

பார்த்பே

பார்த்பே

பார்த்பே நிறுவனத்தின் தாய் நிறுவனமான Resilient Innovations பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கிளை நிறுவனத்திற்குத் தான் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி இந்திய சந்தையில் பேமெண்ட் அக்ரிகேட்டர் ஆகச் செயல்பட in-principle ஒப்புதல் வழங்கியுள்ளது.

பேமெண்ட் அக்ரிகேட்டர்

பேமெண்ட் அக்ரிகேட்டர்

பேமெண்ட் அக்ரிகேட்டர் என்பது ஈகாமர்ஸ் தளங்கள் மற்றும் வணிகர்கள், தங்களது வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு கட்டணக் கருவிகள் மூலம் பேமெண்ட்-ஐ ஏற்க உதவும் தளத்தைக் கொண்டு உள்ள நிறுவனமாகும்.

 சில்லறை வர்த்தகத் துறை

சில்லறை வர்த்தகத் துறை

இதன் மூலம் வணிகர்கள் தங்களுக்கென ஒரு தனியான கட்டண ஒருங்கிணைப்பு முறையை உருவாக்கத் தேவையில்லை. இது சில்லறை வர்த்தகத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவது மட்டும் அல்லாமல் பல மட்டத்தில் டிஜிட்டல் பேமெண்ட்-ஐ எளிதாக்கும்.

 ஆர்பிஐ

ஆர்பிஐ

ஆர்பிஐ பேமெண்ட் அக்ரிகேட்டர் ப்ரேம்வொர்க்-ஐ வெளியிட்டு உள்ளது, வணிகர்கள் பெற வேண்டும் என்றால் முதலில் இந்தக் கட்டமைப்பை பயன்படுத்த ஒப்புதல் பெற வேண்டும். அதன் பின்பு தான் இத்தகைய டிஜிட்டல் பேமெண்ட்-ஐ ஈர்க்கும் சேலையை அளிக்க முடியும்.

அனுமதி

அனுமதி

கடந்த சில மாதத்தில் ஆர்பிஐ Razorpay, Pine Labs, Open, Cahfree, 1Pay ஆகிய நிறுவனங்களுக்குப் பேமெண்ட் அக்ரிகேட்டர் ஆக விளங்க அனுமதி அளித்துள்ளது. இந்தியா முழுவதும் உள்ள 185 பின்டெக் மற்றும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பேமெண்ட் அக்ரிகேட்டர் உரிமத்தை பெற விண்ணப்பம் செய்துள்ளது.

BharatPe நிறுவனத்தில் பிரச்சனை

BharatPe நிறுவனத்தில் பிரச்சனை

சிகோயா கேபிட்டல் மற்றும் டைகர் குளோபல் முதலீட்டில் இயங்கி வரும் BharatPe நிறுவனத்தில் கடந்த ஆண்டு முதல் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு அடுத்து ஆதரவு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் நிலைக்கு மத்தியில் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் வந்துள்ளது.

அஷ்னீர் குரோவர்

அஷ்னீர் குரோவர்

நிதி முறைகேடு செய்ததாகக் கூறி அதன் முன்னாள் இணை நிறுவனர் அஷ்னீர் குரோவர் உடன் தற்போது நீதிமன்றத்தில் நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். குரோவர் கடந்த ஆண்டு மார்ச் மாதமே இந்நிறுவனத்தின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் வெளியேற்றப்பட்டார்.

சுஹைல் சமீர்

சுஹைல் சமீர்

BharatPe சிஇஓ சுஹைல் சமீர் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி முதல் இப்பதவியில் இருந்து வெளியேறினார். ஆகஸ்ட் 2021 முதல் இந்நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பதவியேற்றிய சமீர் தற்போது இப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு இடைக்காலச் சீஇஓ-வாக இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக நலின் நெகி நியமிக்கப்பட்டு உள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+