இந்திய பேமெண்ட் துறையில் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நிறுவனமாக மாறிய BharatPe நிறுவனம் இதன் துணைத் தலைவர் அஷ்னீர் குரோவர் செய்த நிதி மோசடிக்கு பின்பு பெரும் சரிவை எதிர்கொண்டது.
இந்த நிலையில் BharatPe சிஇஓ சுஹைல் சமீர் வருகிற ஜனவரி 7 ஆம் தேதி முதல் இப்பதவியில் இருந்து வெளியேற உள்ளார் என இந்நிறுவனம் இன்று வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அஷ்னீர் குரோவர் பாரத்பே நிறுவனத்தை விட்டு வெளியேறிய போது சுஹைல் சமீர் சிஇஓ பதவிக்கு வந்தார்.
பார்த்பே நிறுவனம்
ஆகஸ்ட் 2021 முதல் இந்நிறுவனத்தின் சிஇஓ-வாகப் பதவியேற்றிய சமீர் தற்போது இப்பதவியில் இருந்து நீக்கப்பட்டு இடைக்காலச் சீஇஓ-வாக இந்நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியாக நலின் நெகி நியமிக்கப்பட்டு உள்ளார்.
மேலும் பார்த்பே நிர்வாகம் புதிய சிஇஓ தேடும் பணியில் தீவிரமாக இருப்பது மட்டும் அல்லாமல் இதற்காக வெளி நிறுவனத்தின் உதவிகளை நாட உள்ளது.
நலின் நெகி பதவி
இதனால் நலின் நெகி பதவி இப்பதவியில் தொடர வாய்ப்புகள் குறைவு, பெரும்பாலான நிறுவனத்தில் இடைக்காலச் சிஇஓ-வாக நியமிக்கும் நபரை தொடர்ந்து சிஇஓ-வாக இருக்க அனுமதிக்க வாய்ப்புகள் உள்ளது ஆனால் நலின் நெகி பதவி 100 சதவீதம் தற்காலிகமானது என்பது புதிய சிஇஓ தேடுவதற்காகத் தனிப்பட்ட நிறுவனத்தை நியமிக்கும் போது இது உறுதியாகியுள்ளது.
அஷ்னீர் குரோவர்
BharatPe நிறுவனத்தின் துணை தலைவர் அஷ்னீர் குரோவர் நிதி மோசடிக்கு பின்பு சிஇஓ பதவிக்கு வந்த சுஹைல் சமீர்-ஐ சமீப காலமாக அஷ்னீர் சமுக வலைத்தளத்தில் தொடர்ந்து சீண்டியும், விமர்சனம் செய்து வந்தார் இந்த நிலையில் தான் சிஇஓ பதவியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
யார் இந்தச் சுஹைல் சமீர்
சுஹைல் சமீர் டெல்லி பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கலில் BE (இளங்கலை பொறியியல்) படித்தார். அவரது பட்டப்படிப்புக்குப் பிறகு, அவர் EBS யுனிவர்சிட்டேட் ஃபர் விர்ட்ஷாஃப்ட் அண்ட் ரெக்ட்டிற்குச் சென்று சர்வதேச நிதியில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் (MBA) முடித்தார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் நிதி மற்றும் பொருளாதாரத்தில் எம்பிஏ பட்டம் பெற்றார்.
சுஹைல் சமீர் மெக்கின்சி அண்ட் கம்பெனி
சுஹைல் சமீர் படிப்பை முடித்த உடன் சர்வதேச மேலாண்மை ஆலோசனை நிறுவனமான மெக்கின்சி அண்ட் கம்பெனியில் சேர்ந்தார். இந்த நிறுவனத்தில் சுமார் 8 ஆண்டுகள் அசோசியேட் பார்ட்னராகப் பணியாற்றி வெளியேறிய பிறகு சுஹைல் சமீர்பல நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் சேர்ந்தார்.
ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா
பார்த்பே நிறுவனத்தில் சேர்வதற்கு முன்பு சுஹைல் சமீர் ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தில் FMCG வணிகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார். ஆகஸ்ட் 2020 இல் பாரத்பே நிறுவனத்தின் தலைவராகச் சேர்ந்த சுஹைல் சமீர் ஆரம்பத்தில் இருந்து பலரின் நம்பிக்கை பெற்றார்.
அஷ்னீர் குரோவர் கவனம்
இதற்கிடையில் பிஎம்சி வங்கியை கையகப்படுத்துதல் மற்றும் நிதி திரட்டுதல், நிறுவனத்திற்கு வங்கி உரிமம் பெறுவதில் அஷ்னீர் குரோவரின் கவனம் திரும்பியபோது, நிறுவனத்தில் உள்ள அனைத்து உயர் தலைவர்களும் சமீர் கண்காணிப்புக்குக் கொண்டு வர நிர்வாகம் முடிவு செய்தது.
மோசடி, பதவி மாற்றம்
இதைத் தொடர்ந்து பார்த்பே நிறுவனத்தின் தினசரி நடவடிக்கைகளை நிர்வகிக்கவும் தொடங்கினார். இதற்கிடையில் அஷ்னீர் குரோவர் மற்றும் அவரது மனைவி நிறுவனத்தில் மோசடி செய்தது வெளிச்சத்திற்கு வந்த நிறுவனத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதன் தொடர்ந்து தான் ஆகஸ்ட் 2021 இல், சமீர் முறையாகப் பாரத்பே-யின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications