இந்தியாவின் முன்னணி டெலிகாம் சேவை நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின் அதிகளவிலான வர்த்தகம் மற்றும் வருமான சரிவை எதிர்கொண்டு, புதிய வாடிக்கையாளர் எண்ணிக்கையிலும் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது.
ஏர்டெல் தனது டெலிகாம் சேவையை இந்தியாவில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளிலும் அளித்து வரும் நிலையில், பல்வேறு காரணங்களுக்காகக் கானா நாட்டில் ஏர்டெல் நிறுவனத்தை மொத்தமாக மூட முடிவு செய்துள்ளது ஏர்டெல் உயர்மட்ட நிர்வாகம்.
ஏர்டெல் நிர்வாகத்தின் இந்தத் திடீர் முடிவால் இந்நிறுவன முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
100% விற்பனை
பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின்பு ஏர்டெல் உயர்மட்ட நிர்வாகக் குழு தனது கானா வர்த்தகத்தை முழுமையாகக் கானா அரசுக்கு விற்பனை செய்ய முடிவு செய்து, அதற்கான ஒப்புதலையும் அளித்துள்ளது.
இதன் மூலம் ஏர்டெல் கானா நாட்டில் இருந்து டெலிகாம் சேவையில் இருந்து முழுமையாக வெளியேற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசுடன் ஒப்பந்தம்
ஏர்டெல் நிர்வாகக் குழுவின் முடிவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனம் கானா அரசுடன் ஒப்பந்தம் செய்வதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தம் மூலம் ஏர்டெல் கானா லிமிடெட் (ஏர்டெல் டிகோ) நிறுவனத்தின் 100 சதவீத பங்குகள் உடன், வாடிக்கையாளர்கள், இந்நிறுவன சொத்துக்கள், கடன் நிலுவை என அனைத்தும் கானா அரசுக்கு விற்பனை செய்ய உள்ளது ஏர்டெல்.
கூட்டணி நிறுவனம்
ஏர்டெல் டிகோ நிறுவனம் கானா நாட்டில் டெலிகாம் சேவையை விரிவாக்கம் செய்வதற்காக ஏர்டெல் மற்றும் மில்லிகாம் ஆகிய நிறுவனங்கள் இணைந்து துவங்கியது. ஏர்டெல் டிகோ நிறுவனத்தில் ஏர்டெல் நிறுவனம் சுமார் 49.95 சதவீத பங்குகளை வைத்துள்ளது. இந்தப் பங்குகளைத் தான் தற்போது கானா அரசு வாங்க உள்ளது.
184.1 கோடி ரூபாய்
ஏர்டெல் கானா நிறுவனம் தானாகவே தானாகவே impairment chargeஆக 184,1 கோடி ரூபாயை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் கானா நிறுவனம் மற்றும் கானா அரசுடன் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருக்கும் வேலையில், விரைவில் ஏர்டெல் கானா-வை விட்டு மொத்தமாக வெளியேற உள்ளது.
ஏர்டெல் ஆப்பிரிக்கா
இந்தியாவைப் போலவே ஆப்பிரிக்காவில் ஏர்டெல் நிறுவனத்தின் வருடாந்திர லாப அளவீடு 8.8 சதவீதம் வரையில் சரிந்து இந்தச் செப்டம்பர் காலாண்டில் 88 மில்லியன் டாலராக உள்ளது. இக்காலகட்டத்தில் செலவுகள் அதிகமான காரணத்தால் ஆப்பிரிக்க வர்த்தகத்தில் ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் அளவீடுகள் பெரிய அளவில் பாதித்துள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications