கட்டணத்தினை உயர்த்த தயங்க மாட்டோம்.. ஏர்டெல்லின் சுனில் மிட்டல் அதிரடி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் பல சிக்கல்களுக்கும் மத்தியில் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் தங்களது சேவையினை கொடுத்து வருகின்றன. எனினும் அந்த நிறுவனங்களும் கூட பெருத்த கடன் பிரச்சனைகளுக்கு மத்தியில் சிக்கித் தவித்து வருகின்றன.

 

குறிப்பாக முகேஷ் அம்பானியின் ஜியோவின் வருக்கைக்கு பின்னர், பல நிறுவனங்களும் கண்ணுக்கு முன்னால் இருக்கும் லாபத்தினை மறந்து, சலுகைகளை வாரி இறைத்தன. இதனால் நிறுவனங்கள் நஷ்டத்தினை கண்டன.

இது போதாது என்று அந்த சமயத்தில் அரசின் ஏஜிஆர் குறித்த அறிவிப்பும் வந்தது. இது மேற்கொண்டு நிறுவனங்களை நஷ்டத்தில் முடக்கின.

உரிமை பங்கு வெளியீடு

உரிமை பங்கு வெளியீடு

தற்போது வணிகமும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தொடர்ந்து கட்டணத்தினை அதிகரித்து வருகின்றன. மேலும் கடனை அடைக்கும் விதமாக நிதியினை திரட்டி வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல் நிறுவனம் அதன் உரிமைப்பங்கு வெளியீடு மூலம் 21,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது.

கடனை செலுத்தும்

கடனை செலுத்தும்

ஏர்டெல்லின் இந்த நிதி திரட்டல் திட்டத்திற்கு, இந்த நிறுவனத்தின் குழும உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்த நிலையில் முகமதிப்பு 5 ரூபாய்க்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு திரட்டப்படும் நிதியின் மூலம் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவை தொகையினை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் ஏர்டெல் அறிவித்துள்ளது.

அதோடு 5ஜி சேவைகள் மற்றும் ஃபைபர் திட்டங்கள், டேட்டா மையங்கள், உள்ளிட்டவற்றையும் துரிதப்படுத்தும் என அறிவித்துள்ளது.

கட்டணம் உயர்த்தப்படலாம்
 

கட்டணம் உயர்த்தப்படலாம்

பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தலைவர் சுனில் மிட்டல், ஏர்டெல் கட்டண அதிகரிப்பினை செய்ய ஒரு போதும் தயங்காது என கூறியுள்ளார். மிட்டலின் இந்த அறிவிப்பானது உரிமை பங்கு வெளியீடு மூலம் நிதி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் வந்துள்ளது.

வரம்பினை தாண்டாது?

வரம்பினை தாண்டாது?

ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களின் வரவேற்பினை பெற்றுள்ளது. அதோடு தனது வரம்பினை தாண்டி கட்டண அதிகரிப்பு இருக்காது என்று வாடிக்கையாளர்களை கூல் படுத்தும் விதமாகவும் அறிவித்துள்ளது. இது மற்றவர்களோடு ஒப்பிடும்போது இது ஒரு சிறு நடவடிக்கை தான். ஆக நாங்கள் கட்டண அதிகரிப்புக்கு தயங்க மாட்டோம் என மிட்டல் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அர்பு விகிதம்

தற்போதைய அர்பு விகிதம்

தொலைத் தொடர்பு துறையில் நிலவி வரும் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில், நிறுவனம் மேம்பட வேண்டுமானால், பயனர்களின் சராசரி வருவாய் (ARPU) விகிதம் மேம்பட வேண்டும். நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் ஏர்டெல்லின் அர்பு விகிதம் மாதம் 200 ரூபாயினை எட்டும். அதன் பின்னர் இது 300 ரூபாய்க்கும் நகரும் என கூறியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் அர்பு விகிதம் 146 ரூபாயாக இருந்தது நினைவு கூறத்தக்கது.

வளர்ச்சியினை ஊக்குவிக்க உதவும்

வளர்ச்சியினை ஊக்குவிக்க உதவும்

மொத்தத்தில் ஏர்டெல்லின் இந்த நடவடிக்கையானது லாபகரமான வளர்ச்சியாக இருக்கும். வளர்ச்சியினை ஊக்குவிக்க உதவும் என தெரிவித்துள்ளார்.

இதே 5ஜி பற்றி கூறியவர், 2022ம் ஆண்டின் பிற்பாதியில் 5ஜி சேவைகள் தொடங்க வாய்ப்புள்ளது என்று கூறிய மிட்டல், ஸ்பெக்ட்ரம் விலை கவர்ச்சிகரமானதாக இருக்கலாம் என நம்புவதாகவும் கூறியுள்ளார்.

அரசிடம் கோரிக்கை

அரசிடம் கோரிக்கை

அதோடு தற்போது இத்துறையில் முதலீடுகளை தடுக்கும் வகையில், சில அழுத்தங்கள் உள்ளன. ஆக அந்த பிரச்சனைகளைக்கு தீர்வு காணுமாறு, இத்துறையினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தி வருவதாகவும், தொலைத் தொடர்பு துறையின் மீது அதிக வரி இருப்பதாகவும் மிட்டல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

அரசு எடுத்துக் கொள்கிறது?

அரசு எடுத்துக் கொள்கிறது?

ஒவ்வொரு 100 ரூபாய்க்கும், 35 ரூபாய் பல்வேறு விதங்களில் வசூலிக்கப்படுகிறது. ஆக நாங்கள் எங்கள் கடமையை சரியாக செய்யும்போது அரசாங்கமும், சில கோரிக்கைகளை நிறைவேற்றலாம் என நம்புகிறோம். இது இந்த துறைக்கு சாதகமான முடிவாக இருக்கலாம் என நம்புகிறோம் என மிட்டல் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

வாடிக்கையாளார்கள் அதிர்ச்சி

வாடிக்கையாளார்கள் அதிர்ச்சி

ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் நடப்பு ஆண்டில் அதன் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு கட்டணங்களை உயர்த்திய நிலையில், தற்போது மீண்டும் கட்டண அதிகரிப்பு செய்ய திட்டமிட்டுள்ளது. இது ஏர்டெல் வாடிக்கையாளார்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏர்டெல் கட்டணத்தினை அதிகரிப்பு செய்யும்பட்சத்தில் அதனை தொடர்ந்து வோடபோன் ஐடியா மற்றும் ஜியோ நிறுவனங்களும் கட்டணத்தினை அதிகரிக்குமோ? என்ற கருத்தும் நிலவி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti Airtel chairman Sunil Mittal said the company will not hesitate to raise charges

Bharti Airtel latest updates.. Bharti Airtel chairman Sunil Mittal said the company will not hesitate to raise charges
Story first published: Monday, August 30, 2021, 19:10 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X