இந்திய டெலிகாம் சந்தையில் பெரும் சாம்ராஜ்ஜியமாக இருக்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 2.5 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முதலாக கட்டணக் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்த அடுத்த நாளே பார்தி ஏர்டெல் நிறுவனமும் இன்று (ஜூன் 30) கட்டண உயர்வை அறிவித்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் ஜூலை 3 ஆம் தேதி முதல் தனது டெலிகாம் திட்டங்களின் கட்டணத்தை 12-15 சதவீதம் அதிகரித்தது.

இதேபோல் தற்போது பார்தி ஏர்டெல் ஜூலை 3 முதல், டெலிகாம் திட்டங்களின் கட்டணத்தை 11 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. பார்தி ஏர்டெல் பல மாதங்களாகக் கட்டண உயர்வு குறித்து பேசி வந்தது குறிப்பிடத்தக்கது.
ஏர்டெல் வெளியிட்டுள்ள தகவல்கள் படி வரையறுப்பு இல்லாத அழைப்புகள் கொண்ட திட்டங்களில், ரூ.179 கட்டணம் ரூ.199 ஆகவும், ரூ.455 கட்டணம் ரூ.599 ஆகவும், ரூ.1,799 கட்டணம் ரூ.1,999 ஆகவும் உயர்த்தப்படும் என ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் கருத்து:
இதேபோல் பட்ஜெட் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான சுமையும் இல்லாத வகையில், தொடக்க நிலை திட்டங்களில் மிகக் குறைவான கட்டண உயர்வை நாங்கள் செய்துள்ளோம் என்று ஏர்டெல் நிறுவனம் ஒழுங்குமுறைத் தாக்கலில் தெரிவித்துள்ளது. இந்த பட்ஜெட் திட்டத்தில் ஒரு நாளுக்கு 70 பைசா வரையில் மட்டுமே கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சிறப்பான நிதிநிலை கொண்ட வர்த்தக மாடலை கொண்டிருக்க வேண்டும் என்றும், சராசரி வருவாய் (ARPU) ரூ.300 க்கு மேல் இருக்க வேண்டும் என ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதன் எதிரொலியாக சில வாரங்களுக்கு முன்பு ஏர்டெல் மூத்த அதிகாரி இந்தியாவில் கட்டணத்தை நாங்கள் மட்டும் உயர்த்தினால் போதாது, மொத்த சந்தையும் உயர்த்த வேண்டும் என தெரிவித்தார்.
இந்த கட்டண உயர்வு அறிவிப்பைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 18.25 ரூபாய் அதாவது 1.24 சதவீதம் உயர்ந்து ரூ.1,490.05 க்கு வர்த்தகமாகி வருகிறது.
ஜேஎம் ஃபைனான்ஷியல் நிறுவனம் தனது குறிப்பில், ஏர்டெல் கட்டண உயர்வு, அடுத்த கட்டண உயர்வு 2026ஆம் நிதியாண்டின் இறுதியிலோ அல்லது 2027 ஆம் நிதியாண்டின் தொடக்கத்திலோ மட்டுமே நிகழும் எனக் கருதி, அடுத்த 2-3 ஆண்டுகளில் மொபைல் சராசரி வருவாய் மற்றும் EBITDA மதிப்பீட்டில் 1-3 சதவீதம் வரையிலான சிறிய உயர்வே இருக்கும் எனக் கணித்துள்ளது.


Click it and Unblock the Notifications