Airtel: இனி தியேட்டருக்கே போக வேண்டாம்.. சீப் ரேட்டில் மெகா OTT ரீசார்ஜ் பிளான்..!

இந்திய மக்கள் சினிமா விரும்பிகள் என்பது எல்லோருக்கும் தெரியும், இதனாலேயே ஒவ்வொரு மாநிலத்திலும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் சினிமா-வை சுற்றி நாள்தோறும் நடக்கிறது. ஆனால் கடந்த 10 வருடத்தில் தியேட்டர்களில் மக்களுக்கு ப்ரீமியம் அனுபவம் கொடுக்க வேண்டும் என்பதற்காகப் பல மேம்பாடுகள் செய்யப்படும் காரணத்தால் டிக்கெட் விலை உயர்ந்துள்ளது.

இதனால் வாரத்திற்கு ஒரு படம் தியேட்டரில் பார்த்த மக்கள் கூட்டம் தற்போது 3 மாதத்திற்கு ஒரு முறை என்ற அளவில் நிலைமை மாறியுள்ளது. ஒருவர் குடும்பமாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என்றால் பார்க்கிங் முதல் பாப்கார்ன் வரையில் குறைந்தது 2000 முதல் 3000 ரூபாய் வரையில் செலவாகிறது.

Airtel: இனி தியேட்டருக்கே போக வேண்டாம்.. சீப் ரேட்டில் மெகா OTT ரீசார்ஜ் பிளான்..!

இதனால் பெரும்பாலான மக்கள் தற்போது பெரிய ஹீரோக்கள் திரைப்படங்கள், மக்கள் மத்தியில் அதிகம் பாராட்டுக்களைப் பெற்ற திரைப்படங்களை மட்டுமே தியேட்டர்களில் பார்க்கின்றனர் மற்றப்படங்களை OTT வாயிலாக வீட்டிலேயே பார்த்து வருகின்றனர். இந்த மாற்றத்தின் காரணமாக கரன்ட் பில், இண்டர்நெட் பில் போல பெரும்பாலான வீடுகளில் ஒவ்வொரு மாதமும் OTT-க்கு என தனியாக பணத்தை ஒதுக்கும் நிலை உருவாக்கியுள்ளது.

இதனால் தற்போது OTT தளத்தை சுற்றி புதிய வர்த்தகமும், வாடிக்கையாளர்களும் இந்தியாவில் உருவாகியுள்ளனர். ஏற்கனவே டாடா, ஏர்டெல், ஜியோ ஆகியவை OTT சேவைக்கான வாடிக்கையாளர்களை ஈர்க்க தனித்திட்டம் வைத்திருந்தாலும், போட்டி அதிகமான காரணத்தால் அவ்வப்போது புதிய மாற்றங்களுடன் புதிய திட்டங்களை டெலிகாம் நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகிறது. அப்படி ஏர்டெல் புதிய OTT திட்டத்தை இன்று அறிமுகம் செய்து மக்களுக்கு புதிய ரீசார்ஜ் வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக 25-க்கும் மேற்பட்ட OTT தளங்களை ஒருங்கிணைத்து ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மாதம் 279 ரூபாய் முதல் தொடங்கும் இந்த புதிய OTT திட்டத்தில் நெட்ஃபிக்ஸ், ஜியோசினிமா, ஜீ5 உள்ளிட்ட OTT சேவைகளை உள்ளடக்கியவை.

மேலும், இந்த சிறப்பு OTT திட்டங்களுடன் 5G டேட்டா மற்றும் போன் கால் சலுகைகளுடன் 598 மற்றும் 1,729 ரூபாய் திட்டங்களும் அறிமுகம் செய்துள்ளன. இந்த மலிவு விலை OTT திட்டம் மூலம் ஏர்டெல், ஜியோ உடனான சந்தைப் போட்டியில், அதிக வாடிக்கையாளர்களை சேர்க்கும் என பார்தி ஏர்டெல் நிர்வாகம் நம்புகிறது. இந்தத் திட்டங்கள் அனைத்தையும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பிளே ஆப்பின் மூலம் நேரடியாக வாங்கலாம்.

ஏர்டெல் அறிமுகப்படுத்திய புதிய திட்டங்கள் பயனர்களுக்கு எளிமையான மற்றும் மலிவு விலையில் பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகின்றன. 279 ரூபாய் திட்டம் 1 ஜிபி டேட்டாவுடன் OTT சேவைகளை மட்டும் உள்ளடக்கியது. மற்ற திட்டங்களான 598 ரூபாய் மற்றும் 1,729 ரூபாய் திட்டங்கள் பொழுதுபோக்கு சேவைகளுடன் கட்டுப்பாடற்ற 5G டேட்டா மற்றும் அழைப்பு வசதிகளை கொண்டுள்ளது.

இந்தியாவின் வயர்லெஸ் சந்தையில் ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ இடையேயான போட்டி 2025-ல் தீவிரமடைந்துள்ளது. TRAI அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் ஏர்டெல் 1.65 மில்லியன் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்து, முதலிடம் பிடித்துள்ளது. இதனால் ஏர்டெலின் மொத்த சந்தாதாரர்கள் எண்ணிக்கை 386.96 மில்லியனாக உயர்ந்து, 33.61% சந்தைப் பங்கை பெற்றுள்ளது.

இதே காலக்கட்டத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ 686,143 சந்தாதாரர்களை மட்டுமே சேர்த்து, 465.82 மில்லியன் சந்தாதாரர்களுடன் 40.46% சந்தைப் பங்கை வைத்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் புதிய வாடிக்கையாளர் இணைப்பில் ஏர்டெல் முதல் இடத்தை பிடித்தாலும், சந்தை பங்கீட்டில் பெரும் ஆதிக்கத்துடன் ஜியோ முதல் இடத்தில் அசைக்க முடியாமல் உள்ளது.

OTT திட்டங்களின் முழு விபரம்:

279 ரூபாய் திட்டம்: இதை ஏர்டெல் Xstream Play App வாயிலாக சப்ஸ்கிரைப் செய்யக்கூடிய திட்டம். ஒரு மாதத்திற்கு நெட்பிளிக்ஸ் பேசிக், ஜீ5, ஜியோஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே ஆகியவை கிடைக்கும்.

279 ரூபாய் திட்டம் (ப்ரீபெய்டு): இது ஏர்டெல் ப்ரீபெய்டு வாடிக்கையாளருக்கானது. ஒரு மாதத்திற்கு நெட்பிளிக்ஸ் பேசிக், ஜீ5, ஜியோஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே ஆகியவை கிடைக்கும். கூடுதலாக 1 ஜிபி டேட்டா கிடைக்கும்.

598 ரூபாய் திட்டம் (ப்ரீபெய்டு + டேட்டா): 28 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் பேசிக், ஜீ5, ஜியோஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே ஆகியவை கிடைக்கும். கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா + அன்லிமிடெட் கால் சேவை கிடைக்கும்.

1729 ரூபாய் திட்டம் (ப்ரீபெய்டு + டேட்டா): 84 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் பேசிக், ஜீ5, ஜியோஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ப்ளே ஆகியவை கிடைக்கும். கூடுதலாக அன்லிமிடெட் 5ஜி டேட்டா + அன்லிமிடெட் கால் சேவை கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+