இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வரும் பார்தி ஏர்டெல் நிறுவனம், அதன் ஜுன் காலாண்டு முடிவினை வெளியிட்டுள்ளது.
இதன் படி, அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 465.81% அதிகரித்து, 1606.9 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்த டெலிகாம் நிறுவனம் கடந்த ஆண்டில் 284 கோடி ரூபாய் நஷ்டத்தினை எதிர்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
இதே இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது 22% அதிகரித்து, 32,805 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் இது ஆய்வில் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வலுவான செயல்பாட்டின் காரணமாக இந்தளவுக்கு வளர்ச்சியினை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வலுவான அர்பு
இந்த நிறுவனத்தின் பல முறை கட்டண அதிகரிப்பின் பலனாக, இதன் அர்பு விகிதமானது 183 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 146 ரூபாயாக இருந்தது. இது இந்த நிறுவனத்தின் வலுவான வளர்ச்சி காரணமாக அமைந்துள்ளது.
எபிடா விகிதம்
இதன் ஒருங்கிணைந்த எபிடா விகிதம் 16,604 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதம் எபிடா மார்ஜின் விகிதமும் 50.6% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 150 அடிப்படை புள்ளிகள் அதிகமாகும்.
வாடிக்கையாளர்கள் விகிதம்
இதன் கேப்கெக்ஸ் விகிதம் 6398 கோடி ரூபாயாக உள்ளது. ஏர்டெல்லின் 4ஜி வாடிக்கையாளார்கள் கடந்த ஆண்டினை காட்டிலும் 20.8 மில்லியன் ஆக அதிகரித்துள்ளது. இதே கடந்த காலாண்டினை காட்டிலும் 4.4 மில்லியன் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் ஒட்டுமொத்த வாடிக்கையாளார்கள் வளர்ச்சியானது 63% அதிகரித்துள்ளது.
நல்ல வலுவான வளர்ச்சி
தொடர்ந்து ஏர்டெல்லின் பேமெண்ட் வங்கியானது நல்ல வளர்ச்சியினை கண்டுள்ளது, தற்போது 5ஜிக்கான ஏலமும் முடிவடைந்துள்ள நிலையில், இதுவும் ஏர்டெல்லின் வளர்ச்சிக்கு வழிவகுக்கலாம்.
இது குறித்து ஏர்டெல்லில் எம் டி மற்றும் தலைமை செயல் அதிகாரியான கோபால் மிட்டல், இது அடுத்த வலுவான காலாண்டு வளர்ச்சியாகும். நாங்கள் தொடர்ந்து வலுவான வளர்ச்சியினை காண்போம் என தெரிவித்துள்ளார்.
இன்றைய பங்கு விலை
பார்தி ஏர்டெல் பங்கு விலையானது என் எஸ் இ-யில் சற்று அதிகரித்து, 704.35 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 709.85 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 699 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 781.80 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 559.79 ரூபாயாகும்.
இதே பிஎஸ்இ-யில் இப்பங்கின் விலையானது சற்று அதிகரித்து, 704.35 ரூபாயாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது. இதன் இன்றைய உச்சம் 709.75 ரூபாயாகும். இதன் இன்றைய குறைந்தபட்ச விலை 699.10 ரூபாயாகும். இதன் 52 வார உச்ச விலை 781.90 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 572.95 ரூபாயாகும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications