பார்தி ஏர்டெல்லின் துணை நிறுவனமான நெக்ஸ்ட்ரா தனது தரவு மையத்தின் திறனை, 2025க்குள் மூன்று மடங்காக அதிகரிக்க 5,000 கோடி ரூபாயினை முதலீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் இதற்காக ஏர்டெல் நிறுவனம் 7 ஹைப்பர்ஸ்கேல் வளாகங்களை அமைக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த டேட்டா சென்டர்களில் இயங்கும் பசுமை ஆற்றலையும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த பசுமை ஆற்றாலானது 35 சதவீதத்தில் இருந்து, 50 சதவீதமாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
ரூ.5,000 கோடி முதலீடு
ஏர்டெல் நிறுவனம் இது குறித்து வெளியிட்ட அறிவிப்பில் எங்கள் தரவு மையங்களை விரிவுபடுத்த 5,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளோம். இதற்கான சில வேலைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டது. இதன் மூலம் 70 நகரங்களை இணைக்கும் விதமாக, ஒரு அமைப்பை உருவாக்க முயற்சிக்கிறோம் என்று ஏர்டெல் பிசினஸ் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான அஜய் சிட்காரா கூறியுள்ளார்
நெஸ்க்ட்ராவின் மெகா திட்டம்
தற்போது ஏர்டெல் 10 மிகப்பெரிய தரவு மையங்களையும், 120க்கும் மேற்பட்ட தரவு மையங்களையும் இயக்கி வருகின்றது. இது நாட்டில் உள்ள 70 நகரங்களை உள்ளடக்கியதாகவும் தெரிவித்துள்ளது.
இப்படியொரு நிலையில் தான் நெக்ஸ்ட்ரா அடுத்த 5 - 6 மாதங்களில் தற்போதுள்ள தரவு மையங்களில் 40 மெகாவாட் திறனை சேர்க்க திட்டமிட்டுள்ளது.
அடோபரிலிருந்து சென்னை செயல்படும்
இந்த திட்டத்தில் சென்னை, மும்பைம் புனே, கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களில் தரவு மையங்களை அமைக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதில் சென்னை தரவு மையமானது அக்டோபர் மாதத்திலும், மும்பை அடுத்த 18 மாதங்களிலும், கொல்கத்தாவில் 2024ம் ஆண்டிலும் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவித்துள்ளது.
அரசின் அறிவிப்புக்கு பிறகு விரிவாக்கம்
தொலைத் தொடர்பு நிறுவனங்கள பெரும் கடன் பிரச்சனையால் தத்தளித்து வந்த நிலையில், இந்திய தொலைத் தொடர்பு துறைக்கு மிகப்பெரிய ஆறுதல் கொடுக்கும் வகையில், ஏஜிஆர் நிலுவையை செலுத்த 4 வருடம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு தொலைத் தொடர்பு துறையில் 100% நேரடி முதலீட்டுக்கும் மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து தான் தனது விரிவாக்க பணிகளை தொடர்ந்துள்ளது ஏர்டெல் நிறுவனம்.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications