ஜியோவுக்கு போட்டியாக களமிறங்கும் பார்தி ஏர்டெல்.. $1.25 பில்லியன் நிதி திரட்டல்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம் 1.25 பில்லியன் டாலர் நிதியினை திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

இந்த அறிவிப்பினையடுத்து இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 1.68 சதவீதம் அதிகரித்து 582.70 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில். கடன் ஃபண்டு மூலம் 1.25 பில்லியன் டாலரும் திரட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது. இதில் unsecured senior fixed rate notes மூலம் 750 மில்லியன் டாலரும், இதே subordinated perpetual securities மூலம் 500 மில்லியன் டாலர்களை திரட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

ஏர்டெல் நிதி திரட்டல்

ஏர்டெல் நிதி திரட்டல்

இந்த நிதி திரட்டலில் வலுவான கோரிக்கை இருந்ததாகவும், கணிசமான அளவு அதிக சந்தா வழங்கப்பட்டதாகவும் ஏர்டெல் கூறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏர்டெல் ஏற்கனவே பல திட்டங்கள் மூலம் 8 பில்லியன் டாலர்கள் திரட்டியிருந்த நிலையில், இந்த முறையும் நிதியினை திரட்டியுள்ளது கவனிக்கதக்கது.

கடன் பிரச்சனை

கடன் பிரச்சனை

இதற்கிடையில் இந்த நிறுவனத்திற்கு 26,000 கோடி ரூபாய் ஏஜிஆர் தொகை நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர்டெல் தற்போது திரட்டப்பட்ட இந்த நிதியின் மூலம் மூலதன செலவினங்கள், ஏற்கனவே செலுத்த வேண்டிய நிலுவை மற்றும் இன்னும் பல திட்டங்களுக்களுக்காக செலவிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

கடினமான போட்டி
 

கடினமான போட்டி

ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோவின் வருகைக்கு பின்னர் மற்ற தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. குறிப்பாக சில நிறுவனங்கள் காணமல் போன நிலையில், களத்தில் நின்று போராடி வருவது ஏர்டெல்லும், வோடபோனும் தான். ஆனால் இப்படியோரு பலமான போட்டிகளுக்கும் மத்தியில் தான் உச்ச நீதிமன்றத்தின் ஏஜிஆர் குறித்தான தீர்ப்பும் வந்தது.

ஜியோவுக்கு போட்டி

ஜியோவுக்கு போட்டி

இந்த நிலையில் கடன் பிரச்சனையை தீர்ப்பதற்கும் 4ஜி - 5ஜி சேவைகளுக்காக தயாராகவும், மேம்படுத்தவும் நிறுவனங்கள் முயற்சி செய்து வருகின்றன. ஜியோவுக்கு எதிராக தங்களை களத்தில் நிறுத்த கடின முயற்சியினை எடுத்து வருகின்றன. சமீபத்திய மாதங்களில் ஏர்டெல் மற்றும் வோடபோனின் வாடிக்கையாளர்களின் கணிசமான அளவு, ஒரு குறிப்பிட்ட திட்டங்களில் முன்னிலையில் உள்ளன. இதற்கிடையில் சமீபத்தில் தான் வோடபோன் நிறுவனமும் பெரிய அளவில் நிதி திரட்ட முயற்சி செய்து வருகிறது. தற்போது ஏர்டெல்லும் அந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Bharti airtel raises $1.25 billion via bonds

Bharti airtel updates.. Bharti airtel raises $1.25 billion via bonds
Story first published: Thursday, February 25, 2021, 17:06 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X