கடந்த ஆண்டு முழுவதுமே தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு மிக மோசமான ஆண்டாக இருந்தது.
அதிலும் ஜியோவின் வருகைக்கு பின்னர் பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்களுக்கு இது மிக மிக மோசமான ஆண்டாகவே கருதப்படுகிறது.
ஏனெனில் ஒவ்வொரு நாளும் அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்தன என்றே கூறலாம்.
நஷ்டம் அதிகரிப்பு
இந்த நிலையில் தனியார் துறையை சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் நிறுவனம், கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் 1,035 கோடி ரூபாய் இழப்பினை பதிவு செய்துள்ளது இந்த நிறுவனம். ரிலையன்ஸ் ஜியோவின் மிருகத்தனமான விலை யுத்தத்தில் மத்தியில் பார்தி ஏர்டெல் நிறுவனம் படு வீழ்ச்சி கண்டுள்ளது என்றே கூறலாம்.
வருவாய் எப்படி?
புதுடெல்லியை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் 1,035 கோடி ரூபாய் நஷ்டம் கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 86 கோடி ரூபாய் நிகரலாபம் கண்டுள்ளது இந்த நிறுவனம். இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாய் 8.5% அதிகரித்து 21,947 கோடி ரூபாயாகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் 20,231 கோடி ரூபாய் வருவாயும் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கட்டண உயர்வு வேண்டும்
கடந்த டிசம்பர் மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கட்டண திருத்தம் தொழில்துறையின் நிதி ஆரோக்கியத்தையும் சீர்செய்வதற்கான வரவேற்கத்தக்க நடவடிக்கையாக இருந்தாலும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்ய வேண்டும். இதற்காக கட்டண உயர்வு மேலும் இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று பார்தி ஏர்டெல்லின் தலைமை நிர்வாக அதிகாரி கோபால் விட்டால் கூறியுள்ளார்.
நிலுவைத் தொகை
அக்டோபர்24ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை ஜனவரி 23ம் தேதிக்குள் 35,586 கோடி ரூபாய் நிலுவையைத் தொகையை செலுத்தவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலுவைத் தொகையில் வோடபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த நிலுவைத் தொகையை பாக்கி வைத்துள்ளன.
தொடர் வீழ்ச்சி
14 ஆண்டுகாலமாக நடந்த நீதிமன்ற போரை நீதிமன்றம் கடந்த அக்டோபர் மாதத்தில் 24ம் தேதி அரசாங்கத்தின் வருவாயைப் பற்றிய பரந்த வரையரையை உறுதி செய்தது. இது தொலைத் தொடர்பு துறைக்கு பெருத்த அடியை கொடுத்துள்ளது என்றே கூறலாம். இந்த நிலையில் ஏற்கனவே வீழ்ச்சியடைந்த கட்டணங்கள் மற்றும் பெருகி வரும் கடனால், பெருத்த சுமையால் கஷ்டப்பட்டு வருகின்றன.
பங்கு விலை
இந்த நிலையில் இந்த நீதிமன்ற தீர்ப்பால் பெரும் வீழ்ச்சி கண்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் தான் பார்தி ஏர்டெல் நிறுவனம் பெரும் டிசம்பர் காலாண்டில் நஷ்டம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த நிறுவன பங்கின் விலையானது 1.05% அதிகரித்து, 56.75 ரூபாயாகவும் வர்த்தமாகி முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications