பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த செப்டம்பர் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகரலாபம் 89.1% அதிகரித்து, 2145.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் 1134 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் வருவாய் விகிதமானது 21.9% அதிகரித்து, 34,526.80 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 28,326.40 கோடி ரூபாயாகும்.
வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை
டெலிகாம் ஆப்ரேட்டரின் வருவாய் வளர்ச்சி விகிதம் வலுவான ஏற்றம் கண்டுள்ளது. இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கையானது 50 கோடியினை தாண்டியுள்ளது.
இதே எபிட்டா விகிதம் கடந்த ஆண்டினை காட்டிலும் செப்டம்பர் காலாண்டில் 26% அதிகரித்து, 17,721.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எபிட்டா மார்ஜின் விகிதம் 51.3% ஆக அதிகரித்துள்ளது. இது 18 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 49.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
அர்பு விகிதம்
மொபைல் ஆப்ரேட்டரின் அர்பு விகிதமானது செப்டம்பர் காலாண்டில் 190 ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 153 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக அதன் வருவாய் விகிதம் வலுவான வளர்ச்சியினை கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் வளர்ச்சி
இந்தியாவில் ஏர்டெல்லின் மொத்த வருவாய் விகிதம் மொபைல் சேவை மற்றும் வீட்டு சேவை, டிஜிட்டல் டிவி, B2C சேவை என பல சேவைகளை வழங்கி வருகின்றது. இதன் வருவாய் விகிதம் 24,333.3 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 22.3% அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 19,890.4 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மொபைல் சேவை
குறிப்பாக இந்தியாவில் மொபைல் சேவை 24.8% அதிகரித்து, 18,957.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எபிட்டா விகிதம் 9925.8 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 7467.9 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எபிட்டா மார்ஜின் 52.4% ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 49.2% ஆக இருந்தது. இதே முதல் காலாண்டில் 51.2% ஆக இருந்தது.
கடன் விகிதம்
நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர கடன் விகிதமானது செப்டம்பர் காலாண்டில் 1,57,277.6 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே செப்டம்பர் 30,2021ல் 1,31,341.2 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன் நிகர கடன் எபிட்டா விகிதம் மற்றும் காலாண்டிற்கான குத்தகை தாக்கம், 2.96 மடங்காக அதிகரித்துள்ளது. இது முந்தைய காலாண்டில் 2.52 மடங்காக இருந்தது.
5ஜி சேவை
ஏர்டெல் நிறுவனம் தொடர்ந்து அதன் 5ஜி சேவையினை வலுப்படுத்தி வருகின்றது. இது இனி அடுத்து வரும் காலாண்டுகளிலும் வளர்ச்சி மேம்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவையானது அதன் வளர்ச்சிக்கு வித்திடலாம்.


Click it and Unblock the Notifications