இன்று நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியிலும், தொலைத் தொடர்பு துறையில் உள்ள முன்னணி நிறுவனங்கள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். அதிலும் ஜியோவின் வருக்கைக்கு பிறகு பல நிறுவனங்கள் காணமல் போயுள்ளன.
இந்த நிலையில் ஜியோவுக்கு எல்லாவகையிலும் சரியான போட்டியாராக பார்தி ஏர்டெல் உருவெடுத்து வருகிறது.
இப்படியொரு நிலையில் தான் லைவ் மிண்டில் வெளியான செய்தியொன்றில், அடுத்த ஆண்டில் வர்த்தகர்களின் விருப்பமான ஒரு பங்காக பார்தி ஏர்டெல் இருக்கும் என்று புரோக்கிங் நிறுவனங்கள் கூறியுள்ளன.
ஏர்டெல் முதல் இடம்
ஒரு வருடத்தில் இந்த பங்கின் விலையானது 12% ஏற்றம் கண்டுள்ளது. டிராய் அறிக்கையின் படி, தொடர்ச்சியாக இரண்டாவது மாதமாக மொபைல் சந்தாதாரர்கள் இணைப்பில் பார்தி ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் தொலைத் தொடர்பு சந்தாதாரர்களின் எண்ணிக்கை கடந்த அக்டோபரில் 1.17 பில்லியனுக்கும் அதிகமாக வளர்ந்தது. இதில் மொத்த இணைப்புகளில் 98% அதிகமாக பார்தி ஏர்டெல் உள்ளது.
பங்கு விலை அதிகரிக்கலாம்
செப்டம்பரிலும் பார்தி ஏர்டெல் வாடிக்கையாளர்களை இணைப்பதில் முதலிடத்தில் இருந்தது. இதனையடுத்து இந்த பங்கினை பற்றிய நேர்மறையான கருத்துகளை ஆய்வாளர்கள் வெளியிட்டு வருகின்றனர். எம்கே குளோபல் நிறுவனம் இந்த தொலைத் தொடர்பு நிறுவனத்தின் பங்கு விலையானது 32% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
இலக்கு விலை
இதற்கிடையில் இதன் பங்கு விலையையும் 684 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இந்த பங்கின் விலை தற்போது 516 ரூபாயாகும். இதே CLSA இதன் இலக்கு விலையை 715 ரூபாயாக நிர்ணயித்துள்ளது. இது தற்போதைய விலையில் இருந்து 42% அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
மற்ற நிறுவனங்கள் கணிப்பு
இதே மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் இந்த பங்கின் இலக்கு விலையை 650 ரூபாயாகவும், இதே ஆக்ஸிஸ் செக்யூரிட்டீஸ் இதன் இலக்கு விலையை 657 ரூபாயாகவும் நிர்ணயித்துள்ளது.
சுனில் மிட்டலின் பார்தி ஏர்டெல் நிறுவனம், கடந்த அக்டோபரில் 3.67 மில்லியன் வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. இதே அக்டோபர் 2020ல் இதன் மொத்த வயர்லெஸ் வாடிக்கையாளர் எண்ணிக்கை 330.28 மில்லியனாக அதிகரித்துள்ளதாகவும் டிராய் அறிக்கை தெரிவித்துள்ளது.
ஜியோ எப்படி?
ஏர்டெல்லை அடுத்து, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை சேர்த்து வருகின்றது. இது கடந்த அக்டோபரில் 2.22 மில்லியன் புதிய வாடிக்கையாளார்களை சேர்த்துள்ளது. எனினும் இதன் மொத்த வாடிக்கையாளார்கள் 406.35 மில்லியன் ஆகும். இதே வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை இழந்து வருகின்றன.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications