மாதம் பிறந்தால் சுளையாக 3 லட்சம் ரூபாய் கைக்கு வந்து சேரும், இருந்தாலும் இந்த வேலையை விட்டுவிட்டு பாவ்சாஹேப் பூக்கள் வளர்க்கும் தொழிலைத் தொடங்க நினைத்தார்.
பாவ்சாஹேப்புக்கு (Bhausaheb Navale) மூன்று குழந்தைகள். அவர் வேலையை விட்டுவிட்டு சொந்தமாகத் தொழில் தொடங்குவதகாச் சொன்னபோது அவரது குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

ஆனால் பாவ்சாஹேப்பின் அனுபவத்தின் மீது அவர்களுக்கு நிறையவே நம்பிக்கை இருந்தது. இந்த நிலையில் 2020 மார்ச் 1 ஆம் தேதியன்று புணேயில் கிரீன்ஸ் அண்டு புளூம்ஸ் என்ற நர்சரியை பாவ்சாஹேப் ஆரம்பித்தார். அவரும் அவரது நண்பர் சரத் பாட்டீலும் சேர்ந்து 50 லட்சம் ரூபாயை முதலீடு செய்து இந்தத் தொழிலைத் தொடங்கினர்.
அதிர்ஷ்டவசமாக 23 நாள்கள் கழித்து இந்தியா முழுவதும் கோவிட் தொற்று காரணமாக லாக்டவுண் அறிவிக்கப்பட்டது. இது அவரது தொழிலுக்கு சாதகமாக இருந்தது. அவர் ஆர்க்கிட்கள் மற்றும் ஆன்துரியம் ஆகிய நறுமணப் பூக்களை தனது நர்சரியில் வளர்த்தார். இந்தப் பூக்கள் எல்லாம் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும்.
அவரது நர்சரி தடுமாற்றத்துடன்தான் தொடங்கியது, இருந்தாலும் பாவ்சாஹேப் மனம் தளரவில்லை. விடாப்படியாக பல்வேறு முயற்சிகளை செய்து தனது நர்சரியை முன்னேற்றினார். இந்த ஆண்டு அவரது தொழில் மூலம் 2 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள சங்கம்நெர் என்ற இடத்தில் அகோல் பூக்களை வளர்த்தார். அவர் தனது தந்தை ஈட்டிய நல்ல பெயரை காப்பாற்ற நினைத்தார். அவரது தந்தை கரும்பு, பல வகையான பழங்கள், காய்கறிகளை சாகுபடி செய்தார். இது பாவ்சாஹேப்புக்கு விவசாயத்தின் மீது ஆர்வத்தைத் தூண்டியது.
எனது தந்தையிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டேன். அவரது பெயரை நிலை நிறுத்துவதற்காக நான் பிஎஸ்ஸி அக்ரிகல்சர் பாடத்தை தேர்ந்தெடுத்தேன்.
புனேயில் தனது படிப்பை முடித்துவிட்டு அங்குள்ள பாலிஹவுஸ்கள், ஹார்டிகல்சர் பயிற்சி மையங்களில் வேலை பார்த்தார். இந்தியாவில் தொடங்கப்பட்ட தோட்டக்கலை தொழில்துறையில் சேர்ந்த முன்னோடிகளில் பாவ்சாஹேப்பும் ஒருவர்.

இதைத் தொடர்ந்து அவர் எத்தியோப்பியாவில் 10 வருடங்கள் வேலை பார்த்தார். 200 ஏக்கர் நிலத்தில் ரோஜா சாகுபடி செய்யும் பொறுப்பு அவருக்குத் தரப்பட்டிருந்தது. பின்னர் 2015இல் இந்தியாவுக்குத் திரும்பிய பாவ்சாஹேப் சுயமாகத் தொழில் செய்ய விரும்பினார். அதற்கு முன்பாக இந்தியச் சந்தையைத் தெரிந்து கொள்வதற்காக புணேயில் இருந்த ஒரு நர்சரியில் வேலைக்குச் சேர்ந்தார்.
இறுதியாக 2019இல் தனது வேலையை விட்டுவிட்டு கிரீன்ஸ் அண்டு புளூம்ஸ் நர்சரியை பாவ்சாஹேப் தொடங்கினார். அதில் விதவிதமான கவர்ச்சிகரமான பூக்களை வளர்த்தார். இதைத் தொடர்ந்து பரிசோதனை முறையாக வேறு சில செடிகளையும் வளர்த்தார். இந்தச் செடிகளில் பெரும்பாலானவை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
தைவானில் இருந்து ஆர்க்கிட் மலர்களையும் ஹாலந்தில் இருந்து ஆன்துரியம் பூக்களையும் இறக்குமதி செய்ய பாவ்சாஹேப் விரும்பினார். ஆனால் அப்போது லாக்டவுண் நேரம் என்பதால் அதற்கான அனுமதி வாங்குவதற்கு காலதாமதம் ஆனது. தொற்றுநோய் காரணமாக அவரது நர்சரிக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கு மிகுந்த சிரமங்கள் ஏற்பட்டன.

பூந்தொட்டிகள், வேலையாட்கள் கிடைக்கவில்லை.
சில நேரங்களில் நான் தவறான முடிவை எடுத்துவிட்டேனோ என்று தோன்றியது. எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் முட்டுக்கட்டைகள் விழுந்தன.
ஆனாலும் அவர் நம்பிக்கையை விடவில்லை. இறக்குமதிக்கு பிரச்னை இருந்ததால் அவர் உள்ளூர் ரகங்களை வளர்க்கத் தொடங்கினார்.
பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் சேர்ந்து தனது செடிகளை பாவ்சாஹேப் விற்கத் தொடங்கினார்.
இன்றைக்கு கிரீன்ஸ் அண்டு புளூம்ஸ் ஒரு மொத்த விற்பனை நிறுவனமாக உருவெடுத்து நாடுமுழுவதும் உள்ள நர்சரிகளுக்கு செடிகளை அனுப்பி வருகிறது. 2020 ஆகஸ்ட்டில் முதல் இறக்குமதியை அவரது நிறுவனம் பெற்றது. அதில் மதிப்புமிக்க ஃபலேநோப்சிஸ் ஆர்க்கிட் மலர்கள் வந்தன.
மெல்ல மெல்ல 100க்கும் மேற்பட்ட ரகங்கள் இறக்குமதி செய்யப்பட்டன.
தொடக்கத்தில் 1 ஏக்கர் பரப்பில் இருந்த நர்சரி இப்போது 2 ஏக்கருக்கு விரிவடைந்துள்ளது. மாதம் 7000 செடிகள் விற்கப்படுகின்றன.
விற்பனை ஆரம்பத்தில் மந்தமாக இருந்தாலும் அவரது நிறுவனம் மக்களிடையே பிரபலம் ஆகத் தொடங்கியது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மும்பையைச் சேர்ந்த சாவி ஆர்கிட்ஸ் நர்சரியின் உரிமையாளர் சாவித்திரி வாத்வானி கிரீன்ஸ் அண்டு புளூம்ஸ் நர்சரியில் இருந்து செடிகளை வாங்கி வருகிறார். இந்தச் செடிகள் அனைத்தும் தரமானதாக உள்ளதாகக் கூறுகிறார்.
ஒரு ஆர்க்கிட் பூ வளர்வதற்கு ஒன்றரை ஆண்டுகள் ஆகும். ஆன்தூரியம் பூ வளர்வதற்கு 8 முதல் 9 மாதங்கள் ஆகும். ஆன்தூரியம் மலர் தொட்டியை ரூ.200க்கும் ஆர்க்கிட் மலர் தொட்டியை ரூ.400க்கும் பாவ்சாஹேப் விற்கிறார்.
அவரது நிறுவனம் இந்தாண்டு 2 கோடி ரூபாய் லாபம் சம்பாதித்துள்ளது. முதல் மூன்று ஆண்டுகளுக்கு அவர்கள் எந்த சம்பளத்தையும் எடுக்கவில்லை. அதை முதலீடு செய்தனர். இப்போது அந்த நிறுவனத்தில் 15 பேர் வேலை செய்கின்றனர்.
நர்சரியில் வசதிகளை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டியிருக்கிறது. வெப்பநிலையை சீராகப் பராமரிக்கவும, பிரீமியம் வகை செடிகளை வாங்கவும், செடிகள் ஆரோக்கியமாக வளர்கிறதா என்பதை உறுதிப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எங்களது பாலிஹவுஸுக்கு அண்மையில் ஒரு ஃபேனும், பேடுகளும் வாங்கினோம் என்கிறார் பாவ்சாஹேப்.
இப்போது எங்களது குடும்பத் தேவைக்காக சம்பளத்தை எடுக்கிறோம்.
வடா பாவ் கடை, டீக்கடை அல்லது ரிக்ஷா ஓட்டுவதோ ஏதாவது ஒன்றை நமக்கென்று சொந்தமாக உழைத்தால் கிடைக்கும் அனுபவமே திருப்தி அளிக்கும். நாம் தான் ஓனர் என்ற பெருமை இருக்கும். நமக்கிருக்கும் திறமையை 100 சதவீதம் பயன்படுத்தினால் நிச்ச்யம் வெற்றி பெறலாம் என்று மகிழ்ச்சியுடன் கூறினார் பாவ்சாஹேப்.
Story written by: I.jayachandran
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications