பலத்த அடி வாங்கிய பிஹெச்இஎல்.. ரூ.1468 கோடி நஷ்டம்..!

அரசு நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல் லிமிடெட் கடந்த சனிக்கிழமையன்று நிகர நஷ்டமாக 1468.35 கோடி ரூபாய் கண்டுள்ளது.

இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 1002.42 கோடி ரூபாய் நிகர லாபம் கண்டுள்ளது.

பலத்த அடி வாங்கிய பிஹெச்இஎல்.. ரூ.1468 கோடி நஷ்டம்..!

இதே மொத்த வருவாய் 22054.31 கோடி ரூபாயாக சரிவடைந்துள்ளது. இது கடந்த ஆண்டு இதே 31,102.90 கோடி ரூபாயாக இருந்ததாகவும் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதே நிறுவனத்தி இயக்குனர் குழு கூட்டம் கடந்த சனிக்கிழமையன்று நடந்த நிலையில் , கடந்த ஆண்டிற்கான டிவிடென்ட் பற்றி பேசப்பட்டது. எனினும் தற்போது கொரோனாவினால் பெரும் பின்னடைவினை சந்தித்துள்ள நிலையில் டிவிடெண்ட் பற்றி எதுவும் அறிவிக்கப்படவில்லை.

கடந்த நிதியாண்டில் 1534 கோடி ரூபாய் நஷ்டம் கண்டு இருந்தாலும், முந்தைய 2019ம் நிதியாண்டில் 676 கோடி ரூபாய் நிகர லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் வருவாய் 5,198 கோடி ரூபாய் சரிந்துள்ளது. இந்தே 2019ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் 10,492 கோடி ரூபாய் வருவாய் கண்டிருந்தது.

இதே இந்த நிறுவனத்தின் மொத்த செலவு 5,906 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இது 9,217 கோடி ரூபாய் செலவு இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் காரணமாகத் தான் இந்த நிறுவனம் பெருத்த அடி வாங்கியதாக இந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்திலேயே கொரோனாவின் தாக்கதினால் பெருத்த அடி வாங்கிய இந்த நிறுவனம், நடப்பு ஆண்டில் இன்னும் எவ்வளவு தான் அடி வாங்கப்போகிறதோ தெரியவில்லை.

ஏனெனில் கடந்த மார்ச் மாத பிற்பாதியில் தான் இதன் தாக்கம் இருந்த நிலையில், தொடர்ந்து தற்போது நான் காவது மாதமாக , தொடர்ந்து புதிய உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறது. எனினும் இதில் உள்ள நல்ல விஷயம் என்னவெனில் தற்போது லாக்டவுனில் சில தளர்வுகள் அளிக்கப்படுள்ளதால், இனி இருக்கும் காலத்தில் ஆவது மீண்டும் வளர்ச்சி காணுமா? அல்லது இதைவிட மோசமான வளர்ச்சியினை சந்திக்குமா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+