BHIM 3.0: இனி செலவுகளை கண்காணிக்கலாம், நிர்வகிக்கலாம் - புதிய அம்சங்களுடன் அசத்தும் அப்டேட்!

இந்தியாவின் தேசிய கட்டணக் கழகம் (NPCI) தனது BHIM (Bharat Interface for Money) appன் புதிய பதிப்பான BHIM 3.0 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளுடன் வந்துள்ள இந்த புதிய பதிப்பு(New version), பயனர்களுக்கு செலவுகளை கண்காணிக்கும், நிர்வகிக்கும், பிரிக்கும் வசதியை வழங்குகிறது.

BHIM 3.0: இனி செலவுகளை கண்காணிக்கலாம், நிர்வகிக்கலாம் - புதிய அம்சங்களுடன் அசத்தும் அப்டேட்!

BHIM app இந்திய அரசால் 2016-ஆம் ஆண்டு Unified Payments Interface (UPI) அடிப்படையில் தொடங்கப்பட்டது. தற்போது, BHIM 3.0 மேலும் அதிக வசதிகளுடன் வெளியாகியுள்ளது. பயனர்களின் நிதி மேலாண்மையை எளிதாக்க இது உதவுகிறது.

BHIM 3.0 ஏப்ரல் 2025-இல் முழுமையாக அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பதிப்பு 15 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் கிடைக்கும். மேலும், மெதுவான அல்லது நிலையற்ற இணைய இணைப்புகள் உள்ள இடங்களிலும் பரிவர்த்தனைகள் பிரச்சினையின்றி நடைபெற உதவும்.

BHIM 3.0 இல் பயனர்களுக்கு செலவுகளை கண்காணிக்கும், பிரிக்கும் மற்றும் நிர்வகிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு டாஷ்போர்டு வழங்கப்பட்டுள்ளதால், பயனர்கள் தங்கள் மாதாந்திர செலவுகளை பார்வையிட்டு எங்கு அதிகம் செலவழிக்கிறார்கள் என்பதை கண்காணிக்கலாம். மேலும், தானியங்கிய வகைப்படுத்தல் (Automated Categorization) அம்சம் மூலம், பீம் app பயனர்களின் பரிவர்த்தனைகளை தானாகவே வகைப்படுத்தும்.

உதாரணமாக, உணவுக்கான செலவுகள், பயண செலவுகள், வாடகை செலவுகள் போன்றவை தனித்தனியாக தொகுக்கப்படும். இதனால், பயனர்கள் தங்கள் செலவுகளை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். கூடுதலாக, பட்ஜெட்டை நிர்வகிக்க உதவும் கட்டுப்பாடுகளையும் (Limits) அமைக்கலாம், இதனால் செலவுகளை கட்டுப்படுத்தலாம் மற்றும் நிதியை சிறப்பாக திட்டமிடலாம்.

BHIM 3.0 இல் ஒரு புதிய அம்சம், குடும்ப செலவு நிர்வாகம். இதன் மூலம், பயனர்கள் குடும்ப உறுப்பினர்களை இணைக்கலாம். பகிரப்பட்ட செலவுகளை கண்காணிக்கலாம். ஒவ்வொரு குடும்ப உறுப்பினருக்கும் குறிப்பிட்ட பணம் செலுத்து வதை ஒதுக்கலாம். ஒரே இடத்தில் குடும்ப செலவுகளின் ஒருங்கிணைந்த பார்வையை (consolidated view) பெறலாம். இந்த அம்சம் முக்கியமாக குடும்ப வருவாய் மற்றும் செலவுகளை சிறப்பாக திட்டமிட உதவும்.

பணி உதவியாளர் (Task Assistant) என்ற வசதியால் BHIM 3.0 appல் பணிகளை நினைவூட்டும் ஒரு புதிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது பென்டிங்கில் உள்ள பில்கள் (pending bills) பற்றிய நினைவூட்டல்களை வழங்கும். பயனர்கள் கடந்த காலபோகிய (overdue) கட்டணங்களை சுலபமாக நிர்வகிக்கலாம். பரிவர்த்தனைகளை குறிப்பிட்ட தேதியில் மேற்கொள்ள நினைவூட்டல் அமைக்கலாம்.

UPI-LITE என்ற வசதியால் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை (small transactions) வேகமாக செய்யலாம். ₹500 அல்லது அதற்கும் குறைவான பணப் பரிவர்த்தனைகளை PIN இல்லாமல் செய்யலாம். வாலட் இருப்பு குறைந்தால் நேரடி எச்சரிக்கைகள் வழங்கப்படும். இந்த அம்சம் நாணய மாற்றங்களைத் தவிர்த்து சிறிய பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.

வணிகர்களுக்காக BHIM 3.0 புதிய BHIM Vega என்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. வணிகர்கள் தங்களின் ஆன்லைன் வணிக தளங்களுடன் BHIM ஐ நேரடியாக இணைக்கலாம். வாடிக்கையாளர்கள் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளுக்கு மாறாமல் BHIM appன் மூலம் உடனடியாக பணம் செலுத்தலாம். இது வணிகர்களுக்கு பணப் பரிவர்த்தனைகளை மிக எளிதாக செய்ய உதவும். இந்த அம்சம் பயனர்களுக்கும் வணிகர்களுக்கும் பயனளிக்கக்கூடிய ஒரு முக்கிய முன்னேற்றம்.

BHIM 3.0 பயனர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. பயனர்கள் தங்கள் செலவுகளை முறையாக கண்காணிக்க முடியும், இது அவர்களின் நிதி மேலாண்மையை எளிதாக்குகிறது. மேலும், குடும்ப செலவுகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்க கூடிய வசதியுடன், அனைவரின் செலவுகளையும் ஒரே இடத்தில் பார்க்க முடியும். நிலுவையில் உள்ள பில்கள் மற்றும் கட்டணங்களை நினைவூட்டும் அம்சம் உள்ளதால், செலுத்த மறந்துபோகாமல் நேரத்துக்கு பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.

UPI-LITE அம்சம் மூலம், சிறிய பணப் பரிவர்த்தனைகள் வேகமாக நடைபெறுகிறது, இது சில்லறை செலவுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், வணிகர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும். BHIM Vega, ஆன்லைன் மற்றும் நேரடி கட்டணங்களை எளிதாக்குகிறது. இதனால், BHIM 3.0 பயனர்களுக்கும் வணிகர்களுக்கும் ஒரு முழுமையான டிஜிட்டல் கட்டண தீர்வாக செயல்படுகிறது

BHIM 3.0 செயலியைப் பெற, Android மற்றும் iOS பயன்பாடுகளில் BHIM செயலியை புதுப்பிக்கலாம். புதிய பயனர்கள் Google Play Store மற்றும் Apple App Store மூலம் BHIM 3.0 ஐ பதிவிறக்கம் செய்யலாம். UPI ID மூலம் பதிவு செய்து பணப் பரிவர்த்தனைகளைத் தொடங்கலாம். BHIM 3.0, இந்தியாவின் டிஜிட்டல் கட்டண சூழலை மேலும் வலுப்படுத்துகிறது. செலவுகளை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும், பகிரவும் இந்த புதிய பதிப்பு அனைத்து பயனர்களுக்கும் மிகச்சிறந்த அனுபவத்தை வழங்குகிறது.

Take a Poll

இந்த புதிய பணச் செலவுக் கண்காணிப்பு மற்றும் செலவுப் பகுப்பாய்வு அம்சங்கள் நியாயமான செலவுகளை மேற்கொள்ளும் பழக்கத்தை பயனர்களிடம் உருவாக்க உதவும். மேலும், வணிகர்கள் BHIM 3.0 ஐ பயன்படுத்தி வாடிக்கையாளர்களுக்கு எளிமையான கட்டண அனுபவத்தை வழங்கலாம். BHIM 3.0 - இந்தியாவின் டிஜிட்டல் நிதி வளர்ச்சிக்கு மற்றும் ஒரு முக்கியமான முன்னேற்றம் ஆகும்.

FAQs
BHIM 3.0 என்பது என்ன?

BHIM 3.0 என்பது செலவுகளை கண்காணிக்க, பகிர, நிர்வகிக்க புதிய அம்சங்களுடன் வந்துள்ள UPI அடிப்படையிலான ஒரு டிஜிட்டல் கட்டண app ஆகும்.

BHIM 3.0 இல் உள்ள முக்கிய அம்சங்கள் என்ன?

செலவு கண்காணிப்பு, குடும்ப செலவு நிர்வாகம், பணி உதவியாளர், UPI-LITE பரிவர்த்தனைகள், மற்றும் வணிகர்களுக்கான BHIM Vega ஆகியவை முக்கிய அம்சங்கள்.

BHIM 3.0 பயன்படுத்த எந்த மொழிகள் கிடைக்கும்?

BHIM 3.0 15 க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் கிடைக்கும்.

UPI-LITE என்றால் என்ன?

UPI-LITE மூலம் குறைந்த மதிப்புள்ள பரிவர்த்தனைகளை PIN இல்லாமல் வேகமாக செய்யலாம்.

GoodReturns Finance

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+