டெல்லி: இந்தியாவில் கூகுள் பே போன்ற வெளிநாட்டு யுபிஐ செயலிகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கும் நிலையில் என்பிசிஐ (National Payments Corporation of India (NPCI) ) அமைப்பானது BHIMஐ தனி நிறுவனமாக பிரித்துள்ளது. இது தொடர்பாக NPCI வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தற்போது இந்தியாவில் டிஜிட்டல் பரிமாற்றங்களுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவினை எடுத்திருப்பதாக கூறியுள்ளது.
தற்போது BHIM செயலி, NPCI BHIM Services Ltd என தனி நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. இதனை இதன் தலைமை செயல் அதிகாரியாக லலிதா நடராஜ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தலைமை தொழில் அதிகாரியாக ராகுல் ஹண்டா செயல்படுவார் என கூறப்பட்டுள்ளது.

இருவருமே வங்கி மற்றும் நிதித்துறை சேவைகளில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர்கள் என்றும் ,இவ்விருவரும் டேட்டா அனலிட்டிக்ஸ், மொபைல் பேங்கிங் துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் என்பதால் BHIM செயலியை அடுத்த கட்டத்திற்கு இவர்கள் கொண்டு செல்வார்கள் என செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை யுபிஐ செயலிகள் பயன்பாட்டில் கூகுள் நிறுவனத்திற்கு சொந்தமான கூகுள் பே, மற்றும் வால்மார்ட்டுக்கு சொந்தமான போன் பே ஆகியவை தான் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அதாவது பெரும்பாலானவர்கள் தங்களுடைய யுபிஐ பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு போன் பே மற்றும் கூகுள் பே ஆகிய செயலிகளை தான் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் யுபிஐ சந்தை மதிப்பில் இந்த இரண்டு நிறுவனங்களும் கிட்டதட்ட மூன்றில் இரண்டு பங்குகளை வைத்திருக்கின்றன.
இந்த நிலையில் தான் தகவல்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசுக்கு ஒரு அறிக்கையினை சமர்ப்பித்தது. அதில் உள்நாட்டை சேர்ந்த ஃபின்டெக் நிறுவனங்களை முன்னிலைப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
BHIM போன்ற உள்நாட்டு செயலிகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் பாதுகாப்பிற்கும் அதுதான் நல்லது என்றும் நாடாளுமன்ற நிலைக்குழு தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.
BHIM செயலி வாயிலாக ஜூன் மாதத்தில் மட்டும் 8 ,095.99 கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. கிட்டத்தட்ட 2.3 கோடி பரிவர்த்தனைகள் BHIM செயலி வாயிலாக நடைபெற்றிருக்கிறது. அதே வேளையில் வால்மார்ட்டிற்கு சொந்தமான போன் பே வாயிலாக ஜூலை மாதத்தில் BHIM செயலை விட 127 மடங்கு அதிகமாக அதாவது 10, 33, 588 கோடி ரூபாய் மதிப்புள்ள பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications