ஊர் முழுக்க ஐடி ஊழியர்கள், தொழில் காரணமாகவும், தனிப்பட்ட காரணத்திற்காகவும் வருடம் முழுவதும் விமான பயணிகளால் நிரம்பிய வழியும் பெங்களூர் விமான நிலையத்தில் பெரிய தொல்லை என்றால் 2 விஷயத்தை குறிப்பிடலாம். 1. விமான நிலையத்திற்குப் பயணம் செய்யும் தூரம், 2. விமான நிலையத்திற்குச் செல்ல டாக்ஸி கட்டணம்.
பெங்களூர் விமான நிலையம் கிட்டத்தட்ட ஆந்திர மாநில எல்லைக்கு அருகில் இருக்கும் காரணத்தால், நீங்கள் பெங்களூரில் எந்த பகுதியில் இருந்தாலும் அங்கு செல்ல குறைந்தது 2 மணிநேரம் ஆகும். இதுவே உங்களுக்கு கூடுதல் அதிர்ஷ்டம் இருந்தால் டிராபிக்கில் மாட்டிக்கொண்டு 4 மணிநேரம் கூட ஆகலாம்.

இது ஒருப்பக்கம் இருக்க, பெரும்பாலான பெங்களூர் விமான நிலைய பயணிகள் கூறுவது அதிகப்படியான டாக்ஸி கட்டணம் தான், பல நேரத்தில் விமான கட்டணத்தை விடவும் டாக்ஸி கட்டணம் அதிகமாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக விமான நிலையத்தில் இருந்து வீட்டுகோ அல்லது ஹோட்டலுக்கோ செல்ல வேண்டுமாயின் பெரும் தொகையைச் செலுத்த வேண்டும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், பெங்களூரு விமான நிலையத்திலிருந்து பயணம் செய்யும் பயணிகளுக்கு, ஓலா, உபர் மற்றும் ப்ளூஸ்மார்ட் போன்ற ஆப் அடிப்படையிலான டாக்ஸி நிறுவனங்களின் கட்டணங்கள் கூடுதலாக உயர உள்ளது. இந்த டாக்ஸி நிறுவனங்கள் பயணிகளிடம் இருந்து வசூலிக்கும் விமான நிலைய கட்டணம் 30-40% வரை உயரக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
பெங்களூர் சர்வதேச விமான நிலைய நிறுவனம் (BIAL) உடனான ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்படவுள்ள நிலையில் இந்த கட்டண உயர்வு எதிர்பார்க்கப்படுகிறது. தனித்தனியாக ஒவ்வொரு டாக்ஸி நிறுவனமும் BIAL உடன் ஒப்பந்தம் செய்து கொள்கின்றன.
இந்த ஒப்பந்தங்களின்படி, ஒவ்வொரு டாக்ஸி பயணத்திற்கும் விமான நிலைய நிறுவனத்திற்குக் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தப்பட வேண்டும். இந்தக் கட்டணத்தை டாக்ஸி நிறுவனங்கள் பயணிகளிடம் "விமான நிலைய கட்டணம்" என்ற பெயரில் வசூலிக்கின்றன.
தற்போது, ஒவ்வொரு பயணத்திற்கும் ஓலா ரூ.172, உபர் ரூ.187 மற்றும் ப்ளூஸ்மார்ட் ரூ.218 என வசூலிக்கின்றன. புதுப்பிக்கப்பட்ட கட்டணம் சில வாரங்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டாக்ஸி நிறுவனங்கள் பயணிகளிடம் வசூலிக்கும் இந்தக் கட்டணம், விமான நிலைய கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்காக விமான நிலையத்திற்கு முழுவதுமாக செலுத்தப்படுகிறது.
ஒப்பந்தங்களின்படி, பெங்களூரு விமான நிலையத்தில் ஓலா, உபர் மற்றும் ப்ளூஸ்மார்ட் நிறுவனங்களுக்கு தனித்தனி பிக்-அப் (pick-up) பகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், குறிப்பிட்ட நேரத்திற்கு இலவசமாக பார்க்கிங் வசதியையும் டாக்ஸி ஓட்டுநர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
பெங்களூரு விமான நிலையத்தை இயக்கும் நிறுவனமான BIAL இல் பெரும்பான்மை பங்குகளை பில்லியனர் பிரேம் வட்ஸாவின் ஃபேர்ஃபேக்ஸ் ஹோல்டிங்ஸ் (Fairfax Holdings) நிறுவனம் வைத்துள்ளது. Fairfax Holdings மட்டும் சுமார் 64% பங்குகளை வைத்துள்ளது.
இதை தொடர்ந்து ஜெர்மன் நிறுவனமான ஸீமென்ஸ் ஃபைனான்சியல் சர்வீசஸ் (Siemens Financial Services) 10% பங்குகளையும், இந்திய அரசு நிறுவனமான Airports Authority of India மற்றும் கர்நாடக மாநில தொழில் வளர்ச்சி கழகம் (Karnataka State Industrial Development Corporation) ஆகியவை தலா 13% பங்குகளையும் BIAL இல் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

பெங்களூரு டிராபிக் பிரச்சினைக்கு முடிவு!! உருவாகிறது இரண்டாவது ஐடி சிட்டி: கர்நாடக அரசு அதிரடி!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications