2024 புத்தாண்டு துவங்கி முழுசா 25 நாள் முடிவதற்குள் சுமார் 11000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்தச் செய்தி டெக் மற்றும் ஐடி சேவை ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதைத் தாண்டி பீதி அடையவைத்துள்ளது.
டெக் துறையில் பல வருடமாகப் பேசப்பட்டு வரும் செயற்கை நுண்ணறிவு, மெஷின் லேர்னிங், NLP, பிக் டேட்டா போன்றவை தற்போது அனைத்து துறையினராலும், அனைத்து நிறுவனங்களாலும் பயன்படுத்தும் நிலைக்கு மாறியிருக்கும் காரணத்தால் பல பணிகள் ஆட்டோமேட் செய்யப்பட்டு ஊழியர்கள் தேவை குறைந்து வருகிறது.

இதோடு உலகளவில் பொருட்களுக்கும், சேவைகளுக்குமான தேவை மக்கள் மத்தியில் பெரிய அளவில் குறைந்திருக்கும் காரணத்தால் நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்கும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது. இதனால் 2023க்கு பின்பும் 2024 ஆண்டில் டெக் பணிநீக்கம் அதிகமாக உள்ளது, இதில் முக்கியமாகக் கடந்த 24 மணிநேரத்தில் 3 முன்னணி நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு மாத சம்பளக்காரர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
eBay பணிநீக்கம்: உலகளவில் பிரபலமாக இருக்கும் ஈகாமர்ஸ் வர்த்தகத் தளமான ஈபே சுமார் 1000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாகச் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. இந்தப் பணிநீக்கத்தின் மூலம், ஈபே நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் பட்டியலில் சுமார் 9 சதவீத ஊழியர்கள் நீக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ஈபே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Jamie Iannone கூறுகையில் எங்களுடைய மொத்த வர்த்தகத்தைக் காட்டிலும் ஊழியர்கள் மற்றும் செலவுகள் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் வளர்ச்சி இலக்கை அடையும் பாதையைச் சரி செய்யும் விதிமாக 1000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யும் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளோம் என விளக்கம் கொடுத்துள்ளார்.
CureFit பணிநீக்கம்: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் க்யூர்பிட் சுமார் 120 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் அதிகப்படியான முதலீட்டில் இயங்கும் க்யூர்பிட் தனது வர்த்தகத்தைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்யப் போதுமான நிதி ஆதாரம் இல்லாத காரணத்தால் இந்தப் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது.

CureFit என்ற பெங்களூர் நிறுவனம் Sugar.fit, Carefit, Cultfit ஆகிய பிராண்டுகளில் பல்வேறு சேவைகளை அளித்து வருகிறது. மேலும் கொரோனா தொற்றுக் காலத்தில் இருந்தது போல் மக்கள் மத்தியில் பிட்னஸ் மீதான ஆர்வம் இப்போது இல்லை, கணிசமாகக் குறைந்துள்ளது.
TikTok பணிநீக்கம்: சீனாவின் டிக்டாக் அமெரிக்கா, கனடா உட்படப் பல நாடுகளில் இயங்கி வருவது மட்டும் அல்லாமல் யூடியூப், இன்ஸ்டாகிராம்-க்கு பெரும் போட்டியாக மாறியுள்ளது. இப்படியிருக்கும் வேளையில் டிக்டாக் தற்போது வர்த்தகம் குறைந்துள்ள காரணத்தாலும் டிமாண்ட் குறைந்துள்ள காரணத்தாலும் விளம்பரம், சேல்ஸ் பிரிவில் இருந்து பல 60க்கும் அதிகமான ஊழியர்களை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

TikTok பணிநீக்கத்தில் கவனிக்க வேண்டியது, பணிநீக்கம் செய்யப்பட்ட துறை. உலகளவில் பொருட்களுக்கும், சேவைகளுக்குமான டிமாண்ட் குறைந்துள்ள காரணத்தால் புதிய வர்த்தகம் கிடைப்பது கடினம். இதை உணர்ந்து விளம்பரம், சேல்ஸ் பிரிவில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications